வாஸ்தோ
வாஸ்தோ (நவம்பர் 9, 1980) தமிழில் கதைகளை எழுதிவரும் எழுத்தாளர். மோட்டார் சைக்கள் பயணி. திரைநடிகர்.
பிறப்பு, கல்வி
வாஸ்தோவின் இயற்பெயர் இரா.கந்த நாகராஜன். நாகர்கோவிலில் நவம்பர் 9, 1980-ல் எஸ்.எம்.ராஜகோபால் - ஆர். சுப்புலெக்ஷ்மிக்கு பிறந்தார். நாகர்கோவில் ஹோம் சர்ச் இங்கிலீஷ் ப்ரைமரி ஸ்கூலில் ஆரம்பக்கல்வி. எஸ்.எ.பி. பள்ளியில் உயர்நிலைக்கல்வி. நூர்உல் இஸ்லாம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்
தனிவாழ்க்கை
வாஸ்தோ 2000-2012 வரையில் வங்கி ஊழியராக இருந்தார். 2012 முதல் தற்பொழுது வரையிலும் வாடகைக்கார் (Friendstrack Call Taxi) நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
வாஸ்தோ அஞ்சலையும் நானும் என்னும் கதையை 2014-ல் எழுதினார் 2017-ல் வெளியாகியது. சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதா, நகுலன், கோணங்கி, வா.மு. கோமு ஆகியவர்களின் செல்வாக்கு தனக்குண்டு என்கிறார்
விருதுகள்
ஜீரோ டிகிரி - தமிழரசி அறக்கட்டளை சார்பாக நிகழ்த்திய போட்டியில் போகோ என்னும் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது
நூல்கள்
- அஞ்சலையும் நானும்
- 100% கோபத்தைக் கண்களில் காட்டிய பெண்
- சர்ரியலிசமும் சாம்பார் ரசமும்
- போஹோ
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:37 IST