முதுவெங்கண்ணனார்
From Tamil Wiki
முதுவெங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
முதுவெங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
முதுவெங்கண்ணனார் பாடிய பாடல் நற்றிணையில் 232-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியை சந்திக்க பகல் பொழுதில் வந்த தலைவனிடத்து இரவு வருவாயெனில் அதற்கு அடையாளமாக மலர்மாலை ஒன்றை தருக என தோழி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- தலைவன் வாழும் ஊர் மலை மேல் உள்ளது. அம்மலையில் சிறிய கண்ணையும் பெரிய தும்பிக்கையும் கொண்ட ஆண் யானையும் பெண் யானையும் ஒன்றையொன்று புணர்ந்து இன்பம் பெறும். பின்னர் அந்த யானைகள் அச்சுனைக்கரையில் அமைந்த மலை வாழைப்பழங்களை உண்பதில் சலிப்புற்றதால் மூங்கிலால் முள் வேலி இடப்பெற்ற ஊருக்குள் புகுந்து பலாமரங்களின் உள்ள பலாப்பழத்தினை பறித்து உண்ணும்.
- கற்பாறைகளாலும் மூங்கிலாலும் வேலியிடப்பட்டது தலைவியின் இல்லம். அவ்வூரின் இல்லத்து வேங்கை மரங்கள் வளர்க்கப்படும். வேங்கை மரத்தின் பூக்கள் வீட்டு முற்றத்தில் வீழ்ந்து கிடக்கும்
பாடல் நடை
நற்றிணை - 232
- திணை: குறிஞ்சி துறை:பகல்வருவானை இரவுவருவெனத் தோழி சொல்லியது.
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முணைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும்
மா மலை நாட!-காமம் நல்கென
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை
வீ உக வரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 18:58:51 IST