பாட்டியல் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பாட்டியல் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பாட்டியல்: பாட்டியல் பாடலின் இலக்கணத்தை விளக்கும் துறை. பொதுவாக பிற்காலத்தைய சிற்றிலக்கியங்கள் தொடர்பான இலக்கணத்தை வரையறை செய்யும் நூல்களே இத்துறைக்குள் வருகின்றன
- சிதம்பரப் பாட்டியல்: சிதம்பரப் பாட்டியல் (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் சொல்லும் பாட்டியல் நூல்களில் ஒன்று
- நவநீதப் பாட்டியல்: நவநீதப் பாட்டியல் சிற்றிலக்கய இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் ஒன்று. இதை எழுதியவர் நவநீதநடனார்
- பன்னிரு பாட்டியல்: பன்னிரு பாட்டியல் (பொ. யு 9-ம் நூற்றாண்டு) பாடல் இலக்கணத்தை விளக்கும் பாட்டியல் நூல். பல்வேறு பாட்டியல் நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூல் இது
- பரணர் பாட்டியல்: பரணர் பாட்டியல் (பொ. யு 9-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் பாட்டியல் நூல்களில் ஒன்று
- வெண்பாப் பாட்டியல்: வெண்பாப் பாட்டியல் (வச்சணந்திமாலை) ஒரு பாட்டியல் நூல். குணவீர பண்டிதரால் இயற்றப்பட்டது.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.