நெடுவெண்ணிலவினார்
நெடுவெண்ணிலவினார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
நெடுவெண்ணிலவினார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'நெடுவெண்ணிலவே' என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.
இலக்கிய வாழ்க்கை
நெடுவெண்ணிலவினார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 47-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனின் பிரிவினால் தலைவிக்கு விளைந்த துன்பத்தை தோழி கூற்றாக உணர்த்தும் குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- கருமையான அடிபாகத்தை உடைய வேங்கை மரத்தின் மலர்கள் பாறைகளில் உதிர்ந்து கிடக்கும். வளம் மிக்க புலிக்குட்டிகள் வாழும் காடு அது.
- உவமை: நீண்ட நேரம் ஒளிவீசும் நிலவு ஒளி காதற்துயரை பெருக்குகிறது.
பாடல் நடை
குறுந்தொகை - 47
திணை: குறிஞ்சி துறை: பிரிவாற்றாது வருந்திய தலைவியின் நிலையை தோழி கூறுவது.
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - உவமையாற் பெயர்பெற்றோர்: புலவர் க,கோவிந்தன்
- குறுந்தொகை - 47 - nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Nov-2024, 13:16:46 IST