under review

நற்றங்கொற்றனார்

From Tamil Wiki

நற்றங்கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

நற்றங்கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

நற்றங்கொற்றனார் பாடிய பாடல் நற்றிணையில் 136-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தன்னுடன் ஏற்பட்ட ஊடலால் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வருந்தும் தலைவியின் நிலையறிந்த அவளது தந்தை மருத்துவன் போல அவளுக்கு உதவியதை நினைத்து தோழியிடம் தலைவி போற்றி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மலைநாட்டின் தலைவனுக்கும் தன் மகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரிவை அறிந்த தந்தை, மகளுக்கு ஊர்ப்பழி நேரக்கூடாது என்பதற்காக அவளது கைவளை நெகிழாதவாறு இறுக்கமான கைவளையல்களை செய்து அணிவித்தான்.
  • உவமை: நோயாளன் விரும்பிய மருந்தை கொடுக்காது, அவனது நோயை ஆராய்ந்து அறிந்து உரிய மருந்தை கொடுக்கும் நல்மருத்துவனை போல தந்தை இருக்கிறார்.

பாடல் நடை

நற்றிணை - 136

  • திணை: குறிஞ்சி துறை: சிறைப்புறமாகத் தலைவி தோழிக்குரைத்தது.

 திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும்
அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல
என்ஐ வாழிய பலவே பன்னிய
மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்பநீங் காது வரின்வரை அமைந்து
தோட்பழி மறைக்கும் உதவிப்
போக்கில் பொலந்தொடி செறீஇ யோனே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:12:51 IST