திருக்காரவாயில் கோபால பிள்ளை
திருக்காரவாயில் கோபால பிள்ளை (ஆகஸ்ட் 14, 1886 - மார்ச் 18, 1976) ஒரு தவில் கலைஞர்.
இளமை, கல்வி
திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்காரவாயில் என்னும் ஊரில் ஆகஸ்ட் 14, 1886 அன்று முருகையா பிள்ளை - அம்மாக்குட்டி அம்மாள் ஆகியோருக்கு கோபால பிள்ளை பிறந்தார்.
உள்ளூரிலேயே மஹாலிங்கம் பிள்ளை என்பவரின் சீடராகத் தவிற்கலை பயின்றார்.
தனிவாழ்க்கை
கோபால பிள்ளைக்கு கோவிந்தம்மாள் (கணவர்: செல்லையா பிள்ளை) என்ற ஒரு மூத்த சகோதரி இருந்தார்.
யாழ்ப்பாணம் பொன்னுஸ்வாமி தவில்காரரின் மகள் மாணிக்கத்தம்மாளை கோபால பிள்ளை முதலில் மணந்தார். இரண்டாவது மனைவி வடபாதிமங்கலம் பிச்சுத் தவில்காரரின் மகள் ராஜம்மாள். கோபால பிள்ளையின் பிள்ளைகள்:
- வீராஸ்வாமி (தவில்)
- ராமமூர்த்தி
- காளிதாஸ் (தவில்)
- தனராஜன் (நாதஸ்வரம்)
- பிச்சையா
- கிருஷ்ணமூர்த்தி
- ஜயராமன்
- சின்னக்கண்ணன்
- மரகதவல்லி
- ஸௌந்தரவல்லி
- அஞ்சம்மாள்
- தனலக்ஷ்மி
இசைப்பணி
கோபால பிள்ளை புதிதுபுதிதாக கற்பனை வளத்தோடு சொற்கட்டுக்களை வாசிப்பதில் பெயர் பெற்றவர்.
மாணவர்கள்
திருக்காரவாயில் கோபால பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- நாகலிங்கம்
- பழனிவேலு
- கிருஷ்ணமூர்த்தி
உடன் வாசித்த கலைஞர்கள்
திருக்காரவாயில் கோபால பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை
- எலந்துரை கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்கள்
- திருக்குவளை முத்துக்குமாரஸ்வாமி பிள்ளை
- திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை
- திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை
மறைவு
திருக்காரவாயில் கோபால பிள்ளை மார்ச் 18, 1976 அன்று காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Jun-2023, 06:15:41 IST