under review

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 4

From Tamil Wiki
சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 4

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 4 (2023), சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன். மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தொகுதி 4-ல், 14 கோவை இலக்கிய நூல்கள் இடம் பெற்றன.

பிரசுரம், வெளியீடு

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் சிலவற்றின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியங்கள் நூல், ஆறு தொகுதிகளாக வெளிவந்தது. சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 4, 14 கோவை இலக்கிய நூல்களின் தொகுப்பாகும். ஏப்ரல், 2023-ல் இந்நூல் வெளியானது. மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் இவற்றைத் தொகுத்தளித்தார்.

உள்ளடக்கம்

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 4-ல் சிற்றிலக்கிய அறிமுகம், சிற்றிலக்கியங்களின் பட்டியல், கோவை இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், அதன் இலக்கணம், வகைமைகள், உறுப்புகள், கோவை இலக்கிய நூல்களின் ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் 14 கோவை இலக்கிய நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் விளக்கக் குறிப்புகள், பாட்டு முதற்குறிப்பு அகராதி போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பில் 20-ம் நூற்றாண்டு வரை தோன்றிய கோவை இலக்கிய நூல்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

கோவை இலக்கியங்கள்

கீழ்க்காணும் 14 கோவை இலக்கியங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றன.

மதிப்பீடு

சிற்றிலக்கியங்களில் ஒன்றான கோவை இலக்கிய நூல்கள் சிலவற்றின் தொகுப்பாக சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 4 அமைந்துள்ளது. தமிழாய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் எளிதில் பயன்படும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-4, கோவை இலக்கியங்கள்: பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.


✅Finalised Page