under review

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-2

From Tamil Wiki
சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 2

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 2 (2015), சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன். மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தொகுதி 2-ல், 43 பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்கள் இடம் பெற்றன.

பிரசுரம், வெளியீடு

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் சிலவற்றின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியங்கள் நூல், ஆறு தொகுதிகளாக வெளிவந்தது. 43 பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்களின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 2, ஆகஸ்ட், 2015-ல் வெளிவந்தது. மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் இவற்றைத் தொகுத்தளித்தார்.

உள்ளடக்கம்

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 2-ல், சிற்றிலக்கிய அறிமுகம், சிற்றிலக்கியங்களின் பட்டியல், பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், பிள்ளைத்தமிழ் நூல்களின் இலக்கணம் ஆகியன இடம்பெற்றன. இவற்றுடன் 43 பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்கள் இடம்பெற்றுள்ளன. நூல் விளக்கக் குறிப்புகள், பாட்டு முதற்குறிப்பு அகராதி போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

கீழ்க்காணும் 43 பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றன.

  • குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
  • மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
  • அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்
  • வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ்
  • இராகவர் பிள்ளைத்தமிழ்
  • தில்லை சிவகாமி அம்மைப் பிள்ளைத்தமிழ்
  • புதுவை திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ்
  • தூத்துக்குடி பாகம் பிரியா அம்மைப் பிள்ளைத்தமிழ்
  • சிவானந்தன் பிள்ளைத்தமிழ்
  • மகர நெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்
  • திருவெண்ணெய் நல்லூர் வைகுந்தநாதர் பிள்ளைத்தமிழ்
  • மணவைத் திருவேங்கடமுடையான் பிள்ளைத்தமிழ்
  • இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
  • யோகி சாத்தையர் பிள்ளைத்தமிழ்
  • முத்துவீரப்ப சுவாமி பிள்ளைத்தமிழ்
  • வேங்கடேசுவரன் பிள்ளைத்தமிழ்
  • புதுவை அருணாசலம் பிள்ளைத்தமிழ்
  • முருகப்ப தேவர் பிள்ளைத்தமிழ்
  • திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்
  • திருவருணை முருகன் பிள்ளைத்தமிழ்
  • திருத்தணிகை முருகன் பிள்ளைத்தமிழ்
  • சென்னை மாநகர்க் கந்தசுவாமி பிள்ளைத்தமிழ்
  • ஸ்ரீ தண்டபாணிக் கடவுள் பிள்ளைத்தமிழ்
  • திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்
  • சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
  • திருவல்லிக்கேணி அரசடிக் கற்பகவிநாயகர் பிள்ளைத்தமிழ்
  • இறகுசேரி மந்திரமூர்த்தி விநாயகர் பிள்ளைத்தமிழ்
  • பழனிப் பிள்ளைத்தமிழ்
  • சிறுவாபுரி முருகன் பிள்ளைத்தமிழ்
  • திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
  • தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
  • திருச்செங்கோடு செங்கோட்டுவேலவர் பிள்ளைத்தமிழ்
  • பழமுதிர்சோலை மலை முருகன் பிள்ளைத்தமிழ்
  • ஆலாம்பாளையம் சுந்தர கணேசர் பிள்ளைத்தமிழ்
  • திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ்
  • மணவைத் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்
  • திருவானைக்கா ஸ்ரீ அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்
  • உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மைப் பிள்ளைத்தமிழ்
  • திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்
  • திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
  • திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்
  • திருவாவடுதுறை அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

மதிப்பீடு

சிற்றிலக்கியங்களில் ஒன்றான பிள்ளைத்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பாக சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 2 அமைந்துள்ளது. தற்போது அச்சில் இல்லாத அரிய பிள்ளைத்தமிழ் நூல்கள் பல இத்தொகுப்பில் உள்ளன. தமிழாய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-2: பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஆகஸ்ட், 2015.


✅Finalised Page