under review

சிறுவெண்டேரையார்

From Tamil Wiki

சிறுவெண்டேரையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

சிறுவெண்டேரையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தேரையை சிறுவெண் தேரை என அழைத்து பாடியமையால் இப்பெயர் பெற்றுள்ளார் என கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

சிறுவெண்டேரையார் பாடிய பாடல் புறநானூறில் 362-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவன் ஒருவனின் ஈகை குணத்தைச் சிறப்பித்துப் பாடுவதாக பொதுவியல் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • போரில் ஈடுபடும் தலைவன் செல்வமிக்கவன். அவனது மார்பில் மணிமாலைகளும் தலையில் பூமாலையும் சூடுவது வழக்கம்.
  • போரிட்டு ஈட்டிய செல்வத்தை கொண்டு இரப்போர்க்கு கொடையாக அணிகலன்களும் வறியவர்களுக்கு உணவும் அந்தணர்களுக்கு வளமிக்க கிராமங்களும் நீருற்றி தாரைவார்க்கப்பட்டு தானமாகக் கொடுக்கப்பட்டது.
  • போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றி தருவதாக எண்ணி வெண்ணிறக் கொடியை ஏந்தி போர்களத்திற்குச் செல்வர். போர் நடக்கும் களர் நிலம் ஆந்தையும் காக்கையும் பகல் காலத்தில் கூவும் சுடுகாடாகும்.
  • தனது ஈகைத் திறனில் நிறைவுற்ற வீரன் சுற்றத்தார்களை விலக்கி, உலகம் சிறிதென்று கருதி போரிட்டு மடிந்து புகழ் பெற எண்ணி போருக்கு சென்ற சித்திரம் சொல்லப்படுகிறது.
  • வேதத்தில் அருளில்லாத வழியில் செய்யப்படும் போர் குறிப்பிடப்படவில்லை
  • உவமைகள்: தலைவனது மார்பில் தவழும் ஆரத்தில் உள்ள மணிகளின் ஒளியானது சூரியனை ஒத்தது என்றும் அந்தணர்க்கு கிராமங்களை வழங்கிய போது தாரை வார்த்த நீர் கடலளவு பெருகிச் சென்று ஓடியது என்றும் உயர்வு நவிற்சியாகக் கூறப்பட்டது.

பாடல் நடை

புறநானூறு - 362

.................................
மருள்தீர்ந்து மயக்குஒரீஇக்
கைபெய்தநீர் கடற்பரப்ப
ஆம்இருந்த அடைநல்கிச்
சோறு கொடுத்து மிகப்பெரிதும்
வீறுசால் நன்கலம் வீசிநன்றும்
சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்
வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல்என்று இல்வயின் பெயர மெல்ல
இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Aug-2025, 21:09:00 IST