under review

சாதகம்

From Tamil Wiki

சாதகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நாள், விண்மீன் போன்ற சோதிட நிலைகளைப் பற்றி இந்த சிற்றிலக்கிய வகை கூறுகிறது. [1] சாதகம் என்னும் இந்த இலக்கியம் பாட்டுடைத் தலைவனுக்கு சோதிடம் பார்க்கும் வழக்கத்தையொட்டி தோன்றியிருக்கலாம் என்று தமிழறிஞர்கள் எண்ணுகின்றனர். [2] பன்னிரு பாட்டியல்[3], முத்துவீரியம்[4], பிரபந்த தீபம்[5], பிரபந்தத் திரட்டு[6] ஆகிய பாட்டியல் நூல்கள் சோதிடக்கலையை ஓர் இலக்கிய வகையாக் குறித்துள்ளன. பாட்டியல் நூல்கள் சாதக இலக்கிய வகைக்கு இலக்கணம் கூறியிருப்பதை பார்க்கும்போது அக்காலத்தில் சாதகம் எழுதுதல் ஓர் இலக்கிய வகையாக இருந்திருக்கலாம் எனக் கருதமுடிகின்றது.

உசாத்துணை

சாதகம் - இலக்கணம்

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. 96 வகை சிற்றிலக்கியங்கள் - முனைவர் இரா.குணசீலன் -ஞானத்தமிழ்.காம்
  2. சிற்றிலக்கியங்களில் சோதிடம் ஆய்வு- அ. கணேசன்-அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
  3. தோற்றிய சாதகம் சாற்றும் காலைப்
    பற்றிய கலியுகத்து உற்ற யாண்டில்

    திருந்திய சகாத்தமும் ஆண்டும் பொருந்திய

    ஞாயிறுப் பக்கமும் மேய வாரமும்

    இராசியும் மன்னுற மொழிதற் குரிய

    - பன்னிரு பாட்டியல் - 100

  4. ஓரை திதிநிலை யோக நாள் மீனிலை
    வாரங் கரண நிலை வருகிரக
    நிலையெழு வவயவ நிலையையும் உணர்வுற்று
    அவற்றை அமைத்தவற்று ஆற்றலை மகனுக்கு
    அடைவன அறைதல் சாதகமென மொழிப

    - முத்து வீரியம் 1038

  5. சாதகம் என்பது திதிவாரம் நாள் மீன்
    யோகம் கிரணம் ஓரை கிரகம்
    இவ்வேழானும் இசைப்பது முறையே

    - பிரபந்ததீபம் 93

  6. திதிவாரம் நாள்யோகம் சேர்கரணம் கண்டு
    துதியார் இராசியிற் சூட்டி - விதிகோட்கண்
    மாதம் வருடம் மதித்துரைத்தல் மாந்தர்க்கு
    சாதகத்தின் சாதகமாச் சாற்று

    - பிரபந்த திரட்டு 2


✅Finalised Page