Disambiguation

கொச்சகக் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கொச்சகக் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கொச்சகக் கலிப்பா: கலிப்பாவின் உறுப்புக்களில் சில அமைந்தும், சில முறை மாறியும், மிகுந்தும், குறைந்தும் வரும் கலிச் செய்யுள்கள், கொச்சகக் கலிப்பா எனப்படும்
  • சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா: சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா (சில் + தாழிசை = சிஃறாழிசை) தரவு, தாழிசை, தனிச்சொல், கரிதகம் என்னும் உறுப்புகளைப் பெற்று வரும், தரவை அடுத்தும் தாழிசைகளுக்கு இடையிலும் தனிச்சொல் பெற்றுவரும், மூன்று தாழிசைகள் வரும் போது, ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரு தனிச்சொல் பெற்று வரும் கலிப்பாக்கள், சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்
  • தரவிணைக் கொச்சகக் கலிப்பா: தரவிணை என்றால் இரண்டு தரவுகள் என்று பொருள். இரண்டு தரவுகள் பெற்று இடையே தனிச்சொல் பெற்றும், பெறாமலும், சுரிதகம் பெற்றும் பெறாமலும் வருவதும் தரவிணைக் கொச்சகக் கலிப்பா
  • தரவுக் கொச்சகக் கலிப்பா: ஒரு தரவு மட்டும் வந்தும் அல்லது தரவோடு தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று முடிவது தரவு கொச்சகக் கலிப்பா
  • மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா: கலிப்பாவின் உறுப்புகள் நிற்கும் முறையிலிருந்து மாறியும் மயங்கியும் மிகுந்தும் குறைந்தும் வருவது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.