குளம்பனார்
குளம்பனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
குளம்பனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். குளம்பன் என்னும் இயற்பெயர் கொண்டவர் என்றும் குளம்பு என்னும் ஊரில் பிறந்தவராதலால் ஊரின் பெயரால் அறியப்படுகிறார் என்று இருவேறு கருத்துகள் உள்ளன.
இலக்கிய வாழ்க்கை
குளம்பனார் பாடிய பாடல் நற்றிணையில் 288-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவியைப் பார்க்க வரும் தலைவனிடத்து தலைவியின் நிலையைத் தோழி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- காலை இளவெயில் குளிர் காய்வதற்காக மலையுச்ப்சி பாறையில் ஆண் மயில் தன் இணையான பெண் மயிலுடன் வந்து நின்று தோகை விரித்தாடும்.
- தினைப்புனத்தை நெல் கொய்யும் கிளிகளிடமிருந்து காவல் காக்கச் செல்லும் மகளிர் மலைநாட்டு ஆடவரைக் கண்டு காதல் கொள்வர். பிரிவில் துயரால் பசலை நோயால் மெலிவர்.
- மகளின் சோர்வைக் கண்டு குறி சொல்லும் கட்டுவிச்சியை அழைத்து முற்றத்தில் நெல்பரப்பில் விளக்கேற்றி வைத்து பூசனைக்கு ஏற்பாடு செய்வர் தாய்மார்.
பாடல் நடை
நற்றிணை - 288
- திணை: குறிஞ்சி
- கூற்று: தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது
அருவிஆர்க்கும்அணங்குடைநெடுங்கோட்டு
ஞாங்கர்,இளவெயில்உணீஇய,ஓங்குசினைப்
பீலிமஞ்ஞைபெடையோடுஆலும்
குன்றநாடன்பிரிவின்சென்று,
நல்நுதல்பரந்தபசலைகண்டு,அன்னை
செம்முதுபெண்டிரொடுநெல்முன்நிறீஇ,
கட்டின்கேட்கும் ஆயின்,வெற்பில்
ஏனற்செந்தினைப்பால்ஆர்கொழுங்குரற்
சிறுகிளிகடிகம்சென்றும், இந்
நெடுவேள்அணங்கிற்றுஎன்னும்கொல்அதுவே?
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Aug-2025, 07:54:00 IST