under review

எண்களின் சிறப்பு: எண் 5

From Tamil Wiki

எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பட்டில் உள்ளன. இவற்றில் எண் 5 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.

எண் 5-ன் சிறப்புகள்

ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் ஐந்தாவதாக வருவது 5. ’பஞ்சம்’ என்று ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் பயின்று வரும்.

ஆன்மிக - இலக்கியச் சிறப்புகள்

  • அமிர்தங்கள் ஐந்து – நீர், பால், தயிர், நெய், தேன்
  • பஞ்ச பூதங்கள் ஐந்து – நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
  • பஞ்ச கவ்யங்கள் - பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம்
  • நாளின் அங்கங்கள் ஐந்து – திதி, நாள், நட்சத்திரம், யோகம், கரணம்
  • விஷ்ணுவின் ஆயுதங்கள் ஐந்து – சங்கு, சக்கரம், கதை, கட்கம், சாரங்கம்
  • தாய்கள் ஐவர் – பெற்ற தாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய், மன்னனின் மனைவி
  • தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு, ஆபத்திலிருந்து காத்தவர்.
  • ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை, மணம்
  • பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி, சங்கராந்தி
  • கங்கைகள் ஐந்து – காவேரி, துங்கபத்ரா, கிருஷ்ணவேணி, கௌதமி, பாகீரதி
  • உண்ணும் முறை ஐந்து – பட்சியம், போஜ்யம், லேகியம், சோஷியம், பாளீயம் (கடித்துண்ணல், விழுங்குதல், நக்கியுண்ணல், பருகுதல், உறிஞ்சி உண்ணுதல்.
  • ஐந்திணைகள் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
  • ஐவகைக் கருப்பொருள்கள் - புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல்
  • ஐவகை வாசனைப் பொருள்கள் தக்கோலம்‌, ஏலம்‌, இலவங்கம்‌, சாதிக்காய்‌, கற்பூரம்‌
  • ஐம்பொறிகள் - கண், காது, மூக்கு, நாக்கு, தோல்
  • பஞ்ச மரபு - இசை மரபு, வாக்கிய மரபு, தாள மரபு, நிருத்த மரபு, அவிநய மரபு
  • ஐங்கரன் - கணபதி
  • ஐவகை உணவுகள் - மலை நெல்சோறு, புல்லரிசிச்சோறு, மூங்கில் அரிசிச் சோறு, தினைமென் சோறு, வரகரிசிச்சோறு
  • ஐயாறு - ஐந்து நதிகள் கூடுமிடம்
  • அஞ்சறைப்பெட்டி - சமையல் பொருட்களைப் பாதுகாத்துவைக்கும் பெட்டி
  • ஐங்காயம் - இயேசுவின் உடலில் இருந்த வகைக் காயங்கள்
  • ஐங்காயத்தூள் - குழந்தை பெற்ற தாய்க்குக் கொடுக்கப்ப்டும் வகை வகைச் சரக்குகள் கொண்ட மருந்து
  • ஐங்கூட்டு நெய் - ஆமணக்கெண்ணெய், புங்க எண்ணெய், எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், புன்னை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களின் கூட்டு
  • ஐங்கணை - மன்மதனின் ஐந்து கணைகள்
  • ஐங்கணைக் கிழவன் - மன்மதன்
  • ஐங்கணை அவத்தை - காம நோயால் உண்டாகும் சுப்ரயோகம், விப்ரயோகம், சோகம், மோகம், மரணம் என்னும் ஐவகைத் துன்ப நிலை
  • ஐந்தாம் வேதம் - பாரதம்
  • ஐந்துப்பு - கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு
  • ஐந்து பா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
  • ஐந்தொகை - விழுமுதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்
  • ஐந்தொழில் - பஞ்சகிருத்தியம்
  • ஐம்படை - பஞ்சக்கருவி
  • ஐம்படைத் தாலி - சிறுவர் அணிகலன்களுள் ஒன்று
  • ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
  • ஐம்பெருங்குழு – அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதர், சாரணர் அடங்கிய குழு
  • ஐம்மீன் – ரோகிணி என்னும் நட்சத்திரம்
  • ஐவகை யாகம் – கரும யாகம், தவ யாகம், செப யாகம், தியான யாகம், ஞான யாகம்.
  • ஐவகை வேள்வி – கடவுள் வேள்வி, பிரம்ம வேள்வி, பூத வேள்வி, மானுட வேள்வி, தென்புலத்தார் வேள்வி
  • ஐவர் – பஞ்ச பாண்டவர்
  • ஐவாய் மான் – சிங்கம்
  • ஐவாய் மான் – கரடி
  • பஞ்ச கிலேசம் – அவிச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம்
  • பஞ்சகச்சம் – ஐந்து இடங்களில் செருகி எடுத்துக் கட்டப்படும் ஆடை வகை.
  • பஞ்ச கந்தம் – ஏலம், கற்பூரம், இலவங்கம், சாதிக்காய், தக்கோலம் என் உம் ஐவகை வாசப் பண்டங்கள்
  • பஞ்சகம் – மிருத்யு பஞ்சகம், அக்கினி பஞ்சகம், ராச பஞ்சகம், சோர பஞ்சகம், ரோக பஞ்சகம்
  • பஞ்ச கல்யாணி – நான்கு கால்களிலும், முகத்திலும் வெண்மை நிறம் கொண்ட குதிரை
  • பஞ்ச கல்பம் – கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்பங் கொட்டை, கடுக்காய்த் தோல், நெல்லிப் பருப்பு என்னும் ஐவகைப் பண்டங்களால் ஆன பொருள்.
  • பஞ்சகோசம் – அன்ன மய, பிராண மய, மனோ மய, விஞ்ஞான மய, ஆனந்த மய கோசம்.
  • பஞ்ச கிருத்தியம் – இறைவனின் ஐந்தொழில்கள்; சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம்
  • பஞ்ச சக்தி – ஐந்து சக்திகள்; பராசக்தி, ஆதிசக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி
  • பஞ்ச சயனம் – ஐவகைப் படுக்கைகல்; அன்னத்தூவி, பூ, இலவம்பஞ்சு, கோரை, மயிர்.
  • பஞ்ச சாதனம் – யோகிகளுக்குரிய ஆசனம், யோக பட்டம், தண்டம், கமண்டல, செப மாலை
  • பஞ்ச சீலம் – பௌத்த ஒழுக்கம். காமம், கொலை, கள், பொய், களவு விலக்கிய வாழ்க்கை
  • பஞ்ச சுத்தி – ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, மந்திர சுத்தி, திரவிய சுத்தி, தேவ சுத்தி
  • பஞ்ச பட்சி – வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
  • பஞ்ச பரமேட்டிகள் – அடுகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்னும் ஐவகை சமண சமயப் பெரியோர்.
  • பஞ்சமுக வாத்தியம் – ஐந்து முகங்களைக் கொண்ட தோல் வாத்தியம்
  • பஞ்ச மூர்த்திகள் – சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மன் என்னும் ஐவகை மூர்த்தங்கள்
  • பஞ்ச மூர்த்தி – விநாயகன், முருகன், சிவன், பார்வதி, சண்டேசுவரன்.
  • பஞ்ச மூலி – வெள்ளெருக்கு, மாவிலங்கம், சித்திரமூலம், வாலுளுவை, முருங்கை எனும் ஐ வகைச் சரக்கு.
  • பஞ்ச ரத்தினம் – முத்து, வைடூரியம், வைரம், பச்சை, நீலம்.
  • பஞ்ச லிங்கம் – ப்ருத்வி லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம்
  • பஞ்ச ஆசனம் – ஐவகை ஆசனங்கள்; அனந்தாசனம், கூர்மாசனம், சிங்காசனம், பத்மாசனம், யோகாசனம்
  • பஞ்ச வாயுக்கள் – கிருகரன், கூர்மன், தஞ்சயன், தேவதத்தன், நாகன் எனும் ஐவகை வாயுக்கள்
  • பஞ்ச வில்வம் – வில்வம், நொச்சி, மாவிலங்கை, முட்கிளுவை, விளா மரம்
  • பஞ்சான்மா – அந்தராத்மா, ஜீவாத்மா, தத்துவாத்மா, பூதான்மா, மந்திர ஆன்மா.
  • தமிழின் ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
  • ஐவகை வினாக்கள் - அறியான்‌ வினாவல்‌, அறிவு ஒப்புக்‌ காண்டல்‌, ஐயம்‌ அறுத்தல்‌, அவன்‌ அறிவு தான்‌ கோடல்‌, மெய்‌ அவர்க்குக்‌ காட்டல்
  • ஐவகைத் தாய்கள் - பாராட்டும்‌ தாய்‌, ஊட்டும்‌ தாய்‌, முலைத்‌ தாய்‌, கைத்‌ தாய்‌, செவிலித்‌ தாய்‌
  • ஈசனின் ஐவகை முகங்கள் - சத்தியோஜாதம்‌, வாமம்‌, அகோரம்‌, தற்புருடம்‌, ஈசானம்‌
  • ஐம்பெருங் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
  • ஐஞ்சிறு காப்பியங்கள் - உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலிகேசி
  • ஐவகை உலோகங்கள் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்
  • சிலப்பதிகாரம் சொல்லும் ஐவகை மன்றங்கள் - வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம்
  • ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாபதி, தூதுவர், சாரணர்
  • ஐவகைக் கூந்தல் அலங்காரம் - முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை
  • ஐவர் எனும் பாண்டவர்கள் - தருமர், அருச்சுனர், வீமர், நகுலர், சகாதேவர்
  • ஐவகை உரையிலக்கணம் - பதம், பதப்பொருள், வாக்கியம், வினா, விடை
  • ஐவகை சிவனது தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்.
  • ஐவகை ரத்தினங்கள் - வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
  • பஞ்ச பாணங்கள் - முல்லை, அசோகு, முழு நீலம்‌, சூதப்‌பூ, முளரி
  • பஞ்ச பாணச்‌ செயல்‌வகைகள் - உன்மடதடம் தீரம்‌, சந்தாபம்‌, வசீகரணம்‌, மோகனம்‌
  • பஞ்ச சயன வகைகள் - மயிர்ச்‌ சேணம்‌, வன்பஞ்சு, தூவி, வீ, பாய்
  • ஐவகைத் தந்திரங்கள் - நட்பைப் பிரித்தல், நட்பைப் பெறுதல், அடுத்துக் கெடுத்தல், பெற்றதை இழத்தல், ஆராயாமல் செய்தல்
  • ஐவகை வர்ணங்கள் - வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
  • ஐவகை தேவிகள் - அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.
  • பஞ்ச மா சத்தம் - தோல்‌, துளை, நரம்பு, கஞ்சனை, பாடல்‌
  • ஐவகை ஜீவநதிகள் - சீலம், சினாப், சட்லெஜ், ராவி, பியாஸ்
  • ஐவகை கோசங்கள் - அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.
  • ஐவகை உற்சவங்கள் – நித்ய உற்சவம், வார உற்சவம், மாதம் இருமுறை உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.
  • ஐவகைப் புராணங்கள் - தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்
  • ஐவகை மூர்த்திகள் - விநாயகர், முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு.
  • பஞ்சாமிர்தம் - பால். தயிர், சர்க்கரை (கல்கண்டு), நெய், தேன் சேர்ந்த கலவை.
  • பஞ்ச மா பாதகங்கள் -கொலை, களவு, கள்‌ உண்டல்‌, குரு நிந்தை, பொய்.

உசாத்துணை


✅Finalised Page