உறையூர் சல்லியங் குமரனார்
உறையூர் சல்லியங் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
உறையூர் சல்லியங் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். உறையூரில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
உறையூர் சல்லியங் குமரனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 309-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பரத்தையரிடம் சென்று திரும்பி வந்த தலைவனிடம், அவனது கீ்ழ்மை நிறைந்த செயலை வெறுத்து ஒதுக்கத் திறனில்லாது வாடும் தலைவியின் துயரை தோழி உரைப்பதாக மருதத் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- உவமை: வயலில் மலர்ந்துள்ள மணம் மிக்க நெய்தல் மலர்களை வாடும்படி உழவர்கள் பறிக்காது விட்டுசெல்வர். எனினும் நெய்தல் மலர்களால் வேறிடம் செல்ல முடியாது. அதுபோல் தலைவன் பரத்தையிடம் சென்று வந்தாலும் அவனை விட்டு நீங்க இயலாத கையறுநிலையில் தலைவி உள்ளாள்.
பாடல் நடை
குறுந்தொகை - 309
- திணை: மருதம்
- துறை:பரத்தையிற் பிரிந்துவந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.
கைவினை மாக்கடம் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட
நீடின வரம்பின் வாடிய விடினும்
கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும்
நின்னூர் நெய்த லனையேம் பெரும
நீயெமக்,கின்னா தனபல செய்யினும்
நின்னின் றமைதல் வல்லா மாறே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2025, 11:46:21 IST