under review

இரங்கல்

From Tamil Wiki

இரங்கல் என்பது ஒரு இலக்கிய வகை. துயரை வெளிப்படுத்தும் இலக்கியங்களுக்கான பொதுப்பெயர். நீத்தாருக்கான இரங்கலே இதன் மிகப் பெரும்பகுதி.

சங்க இலக்கியம்

சங்க இலக்கியத்தில் இரங்கல் ஒரு துறையாக உள்ளது. கையறுநிலை எனப்படுகிறது.

சிற்றிலக்கியம்

பிற்காலச் சிற்றிலக்கியங்களில் கையறுநிலை என்பது ஒரு நூல்வடிவம். புலம்பல் என்பதும் அதற்கு இணையானது.

நவீன இலக்கியம்

நவீன இலக்கியத்தில் இரங்கல் என்பது இரங்கற் பா என்னும் வடிவில் உள்ளது. பெரும்பாலும் தனிப்பாடல்களாக உள்ளது. செய்யுளாகவும் வசனகவிதையாகவும் எழுதப்படுகிறது.

நாட்டார் மரபு

நாட்டார் மரபில் இரங்கல் என்பது ஒப்பாரி என்னும் வடிவில் அமைந்துள்ளது. ஓரு சடங்குகலையாக நிகழ்த்தப்படுகிறது.

உரைநடை இலக்கியம்

இறப்புக்கு இரங்கி எழுதப்படும் உரைநடை இலக்கியத்தில் கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள், கடிதங்கள் மற்றும் புனைவுகள் உள்ளன. இவற்றில் வெ. சாமிநாத சர்மா எழுதிய அவள் பிரிவு என்னும் நூல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை

தமிழில் துயர இலக்கியம் என ஒன்று உண்டா? ஜெயமோகன்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Oct-2025, 21:21:34 IST