புலம்பல்

From Tamil Wiki

புலம்பல் : சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. துயரப்பாடலாக அமைவது.

இலக்கணம்

காவியமாக ஆகாத நீண்ட பாடல்கள் சிற்றிலக்கியங்கள் எனப்படுகின்றன. பெரும்பாலான சிற்றிலக்கியங்கள் நாட்டார் மரபில் இருந்து உருவாகி வந்தவையாக இருக்கும். தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகள் பட்டியல் கூறும் 381 நூல்வகைகளில் புலம்பலும் ஒன்று.

புலம்பல் என்பது அந்நூலில் வரும் ஒரு புனைவுக்கதாபாத்திரம் அல்லது பாடலாசிரியர் நீண்ட தன்னுரையாடலாக தன் துயரைச் சொல்வது. இது ஒப்பாரிப்பாடல்களில் இருந்து உருவாகி வந்த வடிவம்.

உதாரணங்கள்

தொன்மம்

மகாபாரதத்தின் பிற்கால இணைப்பான ஸ்த்ரீபர்வம் புலம்பல் என்னும் நிகழ்த்துகலை வடிவம் இலக்கியத்துக்குள் நுழைந்தமைக்கான தொன்மையான உதாரணமாகும்.

நாட்டார் கலை

சந்திரமதி புலம்பல், நல்லதங்காள் புலம்பல் போன்று நாட்டார் மரபில் நிகழ்த்துகலை சார்ந்த பல புலம்பல் வடிவங்கள் உள்ளன

நவீன இலக்கியம்

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் முதுமை உளறல் என்னும் பெயரில் புதிய செய்யுளாக எழுதிய நூல் புலம்பல் என்னும் வகைமைக்கு உதாரணமாகச் சொல்லத்தக்கது

பிரிவுகள்

கிறிஸ்தவ புலம்பல் பாடல்கள்

ஏசுகிறிஸ்துவின் சிலுவையேற்றம் (சிலுவைப்பாடு) நிகழ்வை புலம்பல் வடிவில் பல கிறிஸ்தவ அறிஞர்கள் எழுதியுள்ளனர்

  • 1884 மறைதிரு மாசிலாமணி- சிலுவை தியானம்
  • 1911 பெயர் தெரியா ஆசிரியர்- துக்க சிந்து
  • 1922 சவரிமுத்துப் பிள்ளை- நீசமாவகன் அல்லது ஆண்டவர் அம்மானை
  • 1926 மு.நல்ல சாமி - சிலுவை தியானமாலை
  • 1926 ஏ.தேவசகாயம் -சிலுவை வியாகூல பூரணி
  • 1931 கிராஸ் மேஸ்திரி - புதிய துக்கப்பாட்டுகள்
  • 1975 அந்தோணிக்குட்டி அண்ணாவியார் பாடல்கள்
  • 1980 பி. கெ.ஜார்ஜ் -பன்னிரு பதிகம்
  • 1981 ஜி.சே.வேதநாயகர் -நெஞ்சுருவட்கம்
  • 1982 ஏ.பி. முத்துத்தம்பி - இயேசுநாதரின் திருப்பாடு ஒப்பாரி
  • 2009 சூ. இன்னாசி - சிலுவைப்பாடு
இஸ்லாமிய புலம்பல் பாடல்கள்