விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

From Tamil Wiki
Revision as of 21:09, 10 January 2022 by Madhusaml (talk | contribs) (Created page with "'''விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்''' தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களாலும், அவரது நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். அவரது குறிப்பிடத்தக்க படைப்பான “...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களாலும், அவரது நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். அவரது குறிப்பிடத்தக்க படைப்பான “விஷ்ணுபுரம்” புதினத்தின் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இதன் தலைமை இடம் தற்போது கோவை. 2009 ஆகத்து மாதம் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. வி. அரங்கசாமி. இப்போது கோவையை மையமாக்கி செயல்படுகிறது. ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதினை வழங்கி வருகிறது.

நோக்கம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது. நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கவனப்படுத்துவதும் ஆராய்வதும்தான் இலக்குகள். அதன்பொருட்டு கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் நடத்துகிறது.

விஷ்ணுபுரம் 2010 முதல் இலக்கியவட்டம் வருடம்தோறும் இலக்கியவிருதுகளை வழங்கிவருகிறது

நிகழ்ச்சிகள்

விஷ்ணுபுரம் விருது விழா

  • விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா 2010 [ கோவை ] ஆ.மாதவன்[1]
  • விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா 2011 [கோவை] [பூமணி]
  • விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா 2012 [தேவதேவன்] [ஊட்டி][2][3]
  • விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா 2013 [கோவை][தெளிவத்தை ஜோசப்][4]
  • விஷ்ணுபுரம் விருது ஞானக்கூத்தனுக்கு 2014 டிசம்பர்
  • விஷ்ணுபுரம் விருது தேவதச்சனுக்கு 2015 டிசம்பர்
  • விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது 2016
  • விஷ்ணுபுரம் விருது சீ.முத்துசாமிக்கு வழங்கப்பட்டது 2017[5]
  • 2017 - சீ. முத்துசாமி[6]
  • விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ராஜ் கௌதமனுக்கு வழங்கப்பட்டது 2018[7]
  • விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபிக்கு வழங்கப்பட்டது 2019[8]
  • விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு வழங்கப்பட்டது 2020[9]
  • விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது (அறிவிப்பு) 2021[10][11][12]

விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது விழா

  • 2017 - சபரிநாதனுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
  • 2018 - கண்டராதித்தனுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
  • 2019 - ச. துரைக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
  • 2020 - வேணு வெட்ராயனுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
  • 2021 - மதாருக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா

பிற விழாக்கள்

  • நாஞ்சில் நாடன் விழா (2010) - சென்னை
  • கலாப்ரியா படைப்புக் களம் (2010) - கோவை
  • யுவன் சந்திரசேகர் கவிதையரங்கு (2011) - கன்னியாகுமரி
  • தேவதேவன் கவிதை அரங்கு (2011) - நாகர்கோயில்
  • கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு (2013) - ஆலப்புழா
  • ராய் மாக்ஸம் விழா (2015) - சென்னை
  • எம்.ஏ.சுசீலா பாராட்டு விழா (2018) - சென்னை
  • அரசன் பாரதம் நிறைவு விழா (2020) - கோவை
  • புவியரசு 90 (2021) - கோவை

ஆய்வரங்குகள்

  • கலாப்பிரியா படைப்புக்களம் (2010) - கோவை (படைப்புகள் மீதான விமர்சன அரங்கம்)
  • உதகை கவிதையரங்கு (2010) - நாராயணகுருகுலம் - உதகை
  • தேவதேவன் கவிதையரங்கு (2011) - திற்பரப்பு
  • உதகை காவிய அரங்கு (2011) - நாராயணகுருகுலம் - உதகை
  • யுவன் கவிதையரங்கு (2011) - கன்னியாகுமரி
  • விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு [2012 ]காரைக்குடி
  • இலக்கியவிவாத அரங்கு ஊட்டி 2012
  • கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு[ 2012] ஆலப்புழா
  • இலக்கிய விவாத அரங்கு ஏற்காடு [2013]
  • வெண்முரசு விவாத அரங்கு மூணாறு 2014
  • இலக்கிய விவாத அரங்கு ஊட்டி [2014]

வாசகர் சந்திப்புகள்

  • ஊட்டி இலக்கியச் சந்திப்பு மே 2015
  • இளையவாசகர் சந்திப்பு ஈரோடு பெப்ருவரி 2016
  • இளையவாசகர் சந்திப்பு கொல்லிமலை மார்ச் 2016
  • இளையவாசகர் சந்திப்பு கோவை மார்ச் 2016
  • இளையவாசகர் சந்திப்பு ஊட்டி ஏப்ரல் 2016
  • சிங்கப்பூர் இலக்கியச் சந்திப்பு செப்டெம்பர் 2016

இணைய உரையாடல்கள்

வெளி இணைப்புகள்