under review

லதா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(22 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:லதா.png|thumb|லதா]]
[[File:லதா.png|thumb|லதா]]
லதா என்ற பெயரில் எழுதி வரும் கனகலதா (1968) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாசிரியர்.  
லதா (கனகலதா) (பிறப்பு: 1968) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர். சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிக்கையின் இணையாசிரியர். சிங்கை-மலேசியா பிரதேசத்தில் முதன்மையான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.
== பிறப்பு, கல்வி ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
லதா இலங்கை நீர்கொழும்பில் பிறந்தார். சிங்கப்பூரில் வசிக்கிறார். தந்தை கிருஷ்ணசாமி, தாயார் ரங்கேஸ்வரி. நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் தொடக்கக் கல்வியும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 11982இல் சிங்கப்பூருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்த பின் அங்கு உயர்நிலைக் கல்வியையும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேற்கல்வியையும் தொடர்ந்தார்.
லதாவின் இயற்பெயர் கனகலதா. லதா இலங்கை நீர்கொழும்பில் கிருஷ்ணசாமி, ரங்கேஸ்வரி இணையருக்கு மகளாக 1968-ல் பிறந்தார். சிங்கப்பூரில் வசிக்கிறார். நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் தொடக்கக் கல்வி பயின்றார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். 1982-ல் சிங்கப்பூருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்த பின் அங்கு உயர்நிலைக் கல்வி பயின்றார். தகவல் தொழில்நுட்பத் துறையில் மேற்கல்வியையும் தொடர்ந்தார்.
== தனி வாழ்க்கை ==
==அமைப்புப் பணிகள்==
சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு பத்திரிகையில் 1989ல் மாணவ செய்தியாளராக  சேர்ந்த லதா, மாணவர் பதிப்பின் ஆசிரியர், ஞாயிறு பதிப்பு ஆசிரியர், செய்தியாளர், செய்தி ஆசிரியர் உட்பட பல பணிகளையும் மேற்கொண்டார். தற்போது  இணை செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
லதா சிங்கப்பூரில் ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் ஆகிய நான்கு அதிகாரபூர்வ மொழிகளிலும் கவிதை ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வளர்க்கும் நோக்கில் 2015-ல் தொடங்கப்பட்ட 'சிங்கப்பூர் கவிதை விழா' அமைப்பின் நிறுவன இயக்குநர்களில் ஒருவர்.
== இலக்கிய வாழ்க்கை ==
==இதழியல்==
லதாவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘தீவெளி’ 2003இல் வெளியானது. 2004இல் ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. ’நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2007ல் வெளியானது. கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், குங்குமம் போன்ற இதழ்களிலும் வல்லினம் போன்ற மின்னிதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். சிங்கப்பூரில் தேசிய அளவில் வெளிவந்துள்ள பன்மொழித் தொகுப்புகள் பலவற்றிலும் லதாவின் கவிதைகள், சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன.  
லதா சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான [[தமிழ் முரசு]] பத்திரிகையில் 1989-ல் மாணவச் செய்தியாளராக  பணியாற்றினார். மாணவர் பதிப்பின் ஆசிரியர், ஞாயிறு பதிப்பு ஆசிரியர், செய்தியாளர், செய்தி ஆசிரியர் உட்படப் பல பொறுப்புகளை வகித்தார். தமிழ் முரசின் இணை செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
==இலக்கிய வாழ்க்கை==
லதாவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘தீவெளி’ 2003-ல் வெளியானது. 2004-ல் ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. ’நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2007-ல் வெளியானது. கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், [[குங்குமம்]] போன்ற இதழ்களிலும் [[வல்லினம்]] போன்ற மின்னிதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். சிங்கப்பூரில் தேசிய அளவில் வெளிவந்துள்ள பன்மொழித் தொகுப்புகள் பலவற்றிலும் லதாவின் கவிதைகள், சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரின்  கலை, இலக்கியம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்.  


சிங்கப்பூர் கலை, இலக்கியம் தொடர்பான ஆழமான ஆய்வுக்கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.
லதா சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, புதுடெல்லி உலக புத்தக விழா, [[ஜார்ச் டவுன் இலக்கிய விழா|ஜார்ஜ் டவுன் இலக்கியவிழா]] உள்ளிட்ட அனைத்துலக இலக்கிய விழாக்களில் எழுத்தாளராக  உரைகள், கருத்தரங்குகளில் பங்கெடுத்தார். தேசியக் கலைகள் மன்றமும் தேசிய கல்விக் கழகமும் முதன்முறையாக  ஏற்பாடு செய்த உடனிருந்து பயிற்றுவிக்கும் இலக்கியத் திட்டத்தில் (2016) எழுத்தாளர் [[ஜெயமோகன்|ஜெயமோகனுடன்]] பங்கெடுத்தார்.


லதாவின் தீவெளி கவிதை நூல் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத் திட்டத்திலும் பாரதிதாசன் பல்கலைக்கழக இளங்கலை (தமிழ் மொழி) பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.  லதாவின் சிறுகதைகள், கவிதைகள் சிங்கப்பூர் புகுமுக வகுப்பு தமிழ் இலக்கியப் பாடநூலான இலக்கியச் சாரல் (2013), பல்கலைக்கழக பாடநூலாக உள்ள சா.கந்தசாமி தொகுத்த 'அயலகத் தமிழ் இலக்கியம்' (சாகித்ய அகாதெமி) தொகுப்பிலும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக கலைப் படிப்பு பாடத் திட்டத்திலும் இடம்பெற்றுள்ளன.
== விருதுகள், சிறப்புகள் ==


சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, புதுடெல்லி உலக புத்தக விழா, ஜார்ஜ் டவுன் இலக்கியவிழா உள்ளிட்ட அனைத்துலக இலக்கிய விழாக்களில் எழுத்தாளராக பங்கெடுத்து உரைகள், கருத்தரங்குகளில் பங்கெடுத்துள்ளார். தேசிய கலைகள் மன்றமும் தேசிய கல்விக் கழகமும் முதன்முறையாக  ஏற்பாடு செய்த உடனிருந்து பயிற்றுவிக்கும் இலக்கிய திட்டத்தில் (2016) எழுத்தாளர் ஜெயமோகனுடன் பங்கெடுத்தார்.
* ’நான் கொலை செய்யும் பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2008-ல்  சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ் மொழிப் பிரிவு) வழங்கப்பட்டது.


சிங்கப்பூரில் ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கவிதை ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வளர்க்கும் நோக்கில் 2015ல் தொடங்கப்பட்ட 'சிங்கப்பூர் கவிதை விழா' அமைப்பின் நிறுவன இயக்குநர்களில் ஒருவர்.
*லதாவின் 'தீவெளி' கவிதை நூல் தமிழ்நாட்டின்  பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத் திட்டத்திலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்  இளங்கலைப் (தமிழ் மொழி) பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
== இலக்கிய இடம் ==
*லதாவின் சிறுகதைகள், கவிதைகள் சிங்கப்பூர் புகுமுக வகுப்பு தமிழ் இலக்கியப் பாடநூலான இலக்கியச் சாரல், பல்கலைக்கழக பாடநூலாக உள்ள [[சா.கந்தசாமி]] தொகுத்த 'அயலகத் தமிழ் இலக்கியம்'(சாகித்ய அகாதெமி) தொகுப்பிலும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக கலைப் படிப்பு பாடத் திட்டத்திலும் இடம்பெற்றுள்ளன.
"உள்ளார்ந்த கோபமும் தனிமையும் இவரது கவிதையின் முக்கிய புள்ளிகள். அன்றாட நிகழ்வுகள் மீதான விமர்சனமாகவும், அகநெருக்கடி மிக்க மனவலிகளையும் குறியீட்டு தளத்தில் நிறுத்தி அவரது கவிதைகள் பேசுகின்றன. இவரது கவிதையில் தொக்கி நிற்கும் அங்கதம் சிறப்பானது" என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.
==இலக்கிய இடம்==
"உள்ளார்ந்த கோபமும் தனிமையும் இவரது கவிதையின் முக்கிய புள்ளிகள். அன்றாட நிகழ்வுகள் மீதான விமர்சனமாகவும், அகநெருக்கடி மிக்க மனவலிகளையும் குறியீட்டு தளத்தில் நிறுத்தி அவரது கவிதைகள் பேசுகின்றன. இவரது கவிதையில் தொக்கி நிற்கும் அங்கதம் சிறப்பானது" என எழுத்தாளர் [[எஸ். ராமகிருஷ்ணன்]] மதிப்பிடுகிறார்.


"சிங்கப்பூர் எழுத்தாளர்களில் லதா இன்றைக்கு முக்கியமான எழுத்தாளராக தன் எழுத்தாற்றலால் எழுந்து வந்திருக்கிறார். சிங்கப்பூர் வாழ்வை உள்ளும் புறமுமாக நின்று எழுதுகிற பார்வை அவருக்கு வாய்த்திருக்கிறது," எழுத்தாளர் சு.வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.
"சிங்கப்பூர் எழுத்தாளர்களில் லதா இன்றைக்கு முக்கியமான எழுத்தாளராக தன் எழுத்தாற்றலால் எழுந்து வந்திருக்கிறார். சிங்கப்பூர் வாழ்வை உள்ளும் புறமுமாக நின்று எழுதுகிற பார்வை அவருக்கு வாய்த்திருக்கிறது," எழுத்தாளர் [[சு. வேணுகோபால்|சு.வேணுகோபால்]] குறிப்பிட்டுள்ளார்.


"லதாவின் கவிதைகள் அரசியல் உணர்வில் தீவிரம் அதிதீவிரமாக உணர்வெழுச்சியைப் பிரதியிடுகின்றன. ஏனைய சந்தர்ப்பங்களில் சாதாரணமாக – ஆனால் ஆழத்தை நோக்கி விரிகின்றன. இந்த மூன்று தன்மைகளில் மூன்றாவதே அவருக்கான வழியாகத் தென்படுகிறது. அது காலம், இடம், பொருள் என்ற எல்லைகளுக்குள்ளும் வகைப்படுத்தல்களுக்குள்ளும் சிக்குண்டு முட்டி மோதாமல் அகன்ற பரப்பில் விரிவு கொண்டு நிகழ்கிறது. இந்த நிகழ்வுக்கு நிறுத்தமேயில்லை. அது தொடரி" என்று  கவிஞர் கருணாகரன் எழுதியுள்ளார்.
"லதாவின் கவிதைகள் அரசியல் உணர்வில் தீவிரம் அதிதீவிரமாக உணர்வெழுச்சியைப் பிரதியிடுகின்றன. ஏனைய சந்தர்ப்பங்களில் சாதாரணமாக – ஆனால் ஆழத்தை நோக்கி விரிகின்றன. இந்த மூன்று தன்மைகளில் மூன்றாவதே அவருக்கான வழியாகத் தென்படுகிறது. அது காலம், இடம், பொருள் என்ற எல்லைகளுக்குள்ளும் வகைப்படுத்தல்களுக்குள்ளும் சிக்குண்டு முட்டி மோதாமல் அகன்ற பரப்பில் விரிவு கொண்டு நிகழ்கிறது. இந்த நிகழ்வுக்கு நிறுத்தமேயில்லை. அது தொடரி" என்று  கவிஞர் கருணாகரன் குறிப்பிட்டுள்ளார்.
== விருதுகள் ==
==நூல்கள்==
* லதா எழுதிய ’நான் கொலை செய்யும் பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2008இல்  சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ் மொழிப் பிரிவு) வழங்கப்பட்டது.
=====கவிதை=====
== நூல்கள் ==
*தீவெளி (சுய வெளியீடு, 2003)
===== கவிதை =====
*பாம்புக் காட்டில் ஒரு தாழை (காலச்சுவடு 2004)
* தீவெளிசுய வெளியீடு (2003),
*யாருக்கும் இல்லாத பாலை (க்ரியா பதிப்பகம், 2016)
* பாம்புக் காட்டில் ஒரு தாழை, காலச்சுவடு (2004, 2005, 2007)
=====சிறுகதைகள்=====
* யாருக்கும் இல்லாத பாலை, க்ரியா பதிப்பகம் (2016)
*நான் கொலை செய்யும் பெண்கள்  (சுய வெளியீடு, 2007), (காலச்சுவடு, 2008)
===== சிறுகதைகள் =====
*சீனலட்சுமி (தமிழினி பதிப்பகம், 2022)
* நான் கொலை செய்யும் பெண்கள்  சுய வெளியீடு (2007), காலச்சுவடு (2008)
=====மொழிபெயர்ப்பு=====
* சீனலட்சுமி, தமிழினி பதிப்பகம் (2022)
*The Goddess in the Living Room (சிறுகதைகள், Epigram, Singapore)
 
=====தொகுப்புகள்=====
===== மொழிபெயர்ப்பு =====
*தாத்தா, பாட்டியின் கடிதங்கள், (Letters from grandma and grandpa, National Library Board, Singapore, 2008)
* The Goddess in the Living Room (சிறுகதைகள்), Epigram, Singapore
*இலக்கியம் வளர்த்த தமிழவேள் சாரங்கபாணி (G.Sarangapany’s Literary Leagacy, (Published by NAC & Tamil Murasu, 2013)
===== லதாவின் கவிதைகள்/சிறுகதைகள்/கட்டுரைகள் இடம்பெற்ற தொகுப்புகள் சில =====
=====லதாவின் படைப்புகள் இடம்பெற்ற தொகுப்புகள்=====
* '''Words, Home and Nation''' - (பன்மொழித் தொகுப்பு) '''Centre for the Arts, National University of Singapore, 1995'''
*Words, Home and Nation - (பன்மொழித் தொகுப்பு) Centre for the Arts, National University of Singapore (1995)
* '''Rhythms’ a Singaporean Millennial Anthology of Poetry ('''நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பு) National Arts Council of Singapore, 2000
*Rhythms a Singaporean Millennial Anthology of Poetry (நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பு) National Arts Council of Singapore (2000)
* கனவும் விடிவும் (தற்காலத் தமிழ்ப்பெண் கவிஞர்கள், இந்திய சாகித்திய அகாதமி)
*கனவும் விடிவும் (தற்காலத் தமிழ்ப்பெண் கவிஞர்கள், இந்திய சாகித்திய அகாதமி)
* Fifty on 50, National Arts Council of Singapore, 2009
*Fifty on 50, National Arts Council of Singapore (2009)
* Tumasik: Contemporary Writing from Singapore, Autumn Hill Books and National Arts Council of Singapore, 2009, 2010
*Tumasik: Contemporary Writing from Singapore (Autumn Hill Books and National Arts Council of Singapore, 2009)
* Reflecting on the Merlion, an anthology of poems, National Arts Council of Singapore, 2009
*Reflecting on the Merlion, an anthology of poems (National Arts Council of Singapore, 2009)
* Dari Jendela Zaman Ini (சிங்கப்பூர், மலேசியக் கவிதைகளின் பன்மொழித் தொகுப்பு, (Institut Terjemaha Negara Malaysia, Kuala Lumpur and National Arts Council of Singapore, 2010)  
*Dari Jendela Zaman Ini (சிங்கப்பூர், மலேசியக் கவிதைகளின் பன்மொழித் தொகுப்பு, (Institut Terjemaha Negara Malaysia, Kuala Lumpur and National Arts Council of Singapore, 2010)
* UNION : 15 Years of Drunken Boat, 50 Years of Writing From Singapore, Ethos Books, Singapore, 2015
*UNION: 15 Years of Drunken Boat, 50 Years of Writing From Singapore, Ethos Books, Singapore, 2015
* Eye/Feel/Write: Experiments in Ekphrasis, Squircle Line Press, Singapore, 2015
* Eye/Feel/Write: Experiments in Ekphrasis (Squircle Line Press, Singapore, 2015)
* SG Poems 2015-2016, Ethos Books, Singapore, 2016
*SG Poems 2015-2016 (Ethos Books, Singapore, 2016)
* Canopy, The Select Centre publication, 2018.
*Canopy (The Select Centre publication, 2018)
* Internation anthologies: Ayalaga tamizh ilakkiyam  (compiled by Sa. Kandasamy. Sahitya Akademi , 2004,2009, 2010, 2016, 2017) Anthology of Diaspora Tamil poems (Tamil Literary Garden of Canada, 2013),  கண்களுக்கு அப்பால், இதயத்திற்கு அருகில் Anthology of Diaspora Short Stories (Sahitya Akademi, India, 2014), Anthology of Tamil Diaspora Poems (Sahitya Akademi, India, 2017),   Unwinding: the global anthology of Contemporary Tamil short stories (Emerald Publishers , 2020) and various Tamil literary journals in in India, Malaysia, Sri Lanka, France, Germany and New York (Words Without Borders, 2016).
*Internation anthologies: அயலக தமிழ் இலக்கியம் (compiled by Sa. Kandasamy. Sahitya Akademi, 2004,2009, 2010, 2016, 2017)
* Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore (ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்ப்பூரிலும் தமிழர், Indian Heritage Centre and Institute of Policy Studies, 2019, 2021
* Anthology of Diaspora Tamil poems (Tamil Literary Garden of Canada, 2013)
 
*Anthology of Diaspora Short Stories (Sahitya Akademi, India, 2014)
===== லதா தொகுத்த நூல்கள் =====
*Anthology of Tamil Diaspora Poems (Sahitya Akademi, India, 2017)
 
*Unwinding: the global anthology of Contemporary Tamil short stories (Emerald Publishers, 2020)
* தாத்தா, பாட்டியின் கடிதங்கள், (Letters from grandma and grandpa, National Library Board, Singapore, 2008)
*Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore (ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்ப்பூரிலும் தமிழர், Indian Heritage Centre and Institute of Policy Studies, 2019, 2021)
* இலக்கியம் வளர்த்த தமிழவேள் சாரங்கபாணி (G.Sarangapany’s Literary Leagacy, (Published by NAC & Tamil Murasu, 2013)
==உசாத்துணை==
 
*[https://www.prose.sg/latha-bio Latha: Biography]
== உசாத்துணை ==
*[https://www.sramakrishnan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/ சிங்கப்பூர் எழுத்தாளர்கள்: எஸ். ராமகிருஷ்ணன்]
* [https://www.prose.sg/latha-bio Latha: Biography]
*[http://vallinam.com.my/navin/?p=2302 லதா சிறுகதைகள் : சிங்கப்பூர் சமகாலப் படைப்புகள்]
* [https://www.sramakrishnan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/ சிங்கப்பூர் எழுத்தாளர்கள்: எஸ். ராமகிருஷ்ணன்]
*[https://vallinam.com.my/version2/?p=7713 மௌனங்களின் உக்கிரத்தைப் பேசும் லதாவின் கதைகள்]
* [http://vallinam.com.my/navin/?p=2302 லதா சிறுகதைகள் : சிங்கப்பூர் சமகாலப் படைப்புகள்]
*[https://vallinam.com.my/version2/?p=8645 லதா: சிங்கையின் தனித்துவ படைப்பாளி]
* [https://vallinam.com.my/version2/?p=7713 மௌனங்களின் உக்கிரத்தைப் பேசும் லதாவின் கதைகள்]
*[https://vallinam.com.my/version2/?p=7713 மௌனங்களின் உக்கிரத்தைப் பேசும் லதாவின் கதைகள்]
* [https://vallinam.com.my/version2/?p=8645 லதா: சிங்கையின் தனித்துவ படைப்பாளி]
*[https://vallinam.com.my/version2/?p=7710 நகர்ந்து கொண்டேயிருக்கும் உயிருள்ள கோள்]
* [https://vallinam.com.my/version2/?p=7713 மௌனங்களின் உக்கிரத்தைப் பேசும் லதாவின் கதைகள்]
==இணைப்புகள்==
* [https://vallinam.com.my/version2/?p=7710 நகர்ந்து கொண்டேயிருக்கும் உயிருள்ள கோள்]
== இணைப்புகள் ==
[https://vallinam.com.my/version2/?p=7721 “விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” – லதா]
[https://vallinam.com.my/version2/?p=7721 “விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” – லதா]


{{Being created}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 23:06, 30 August 2023

லதா

லதா (கனகலதா) (பிறப்பு: 1968) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர். சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிக்கையின் இணையாசிரியர். சிங்கை-மலேசியா பிரதேசத்தில் முதன்மையான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

லதாவின் இயற்பெயர் கனகலதா. லதா இலங்கை நீர்கொழும்பில் கிருஷ்ணசாமி, ரங்கேஸ்வரி இணையருக்கு மகளாக 1968-ல் பிறந்தார். சிங்கப்பூரில் வசிக்கிறார். நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் தொடக்கக் கல்வி பயின்றார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். 1982-ல் சிங்கப்பூருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்த பின் அங்கு உயர்நிலைக் கல்வி பயின்றார். தகவல் தொழில்நுட்பத் துறையில் மேற்கல்வியையும் தொடர்ந்தார்.

அமைப்புப் பணிகள்

லதா சிங்கப்பூரில் ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் ஆகிய நான்கு அதிகாரபூர்வ மொழிகளிலும் கவிதை ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வளர்க்கும் நோக்கில் 2015-ல் தொடங்கப்பட்ட 'சிங்கப்பூர் கவிதை விழா' அமைப்பின் நிறுவன இயக்குநர்களில் ஒருவர்.

இதழியல்

லதா சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு பத்திரிகையில் 1989-ல் மாணவச் செய்தியாளராக பணியாற்றினார். மாணவர் பதிப்பின் ஆசிரியர், ஞாயிறு பதிப்பு ஆசிரியர், செய்தியாளர், செய்தி ஆசிரியர் உட்படப் பல பொறுப்புகளை வகித்தார். தமிழ் முரசின் இணை செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

லதாவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘தீவெளி’ 2003-ல் வெளியானது. 2004-ல் ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. ’நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2007-ல் வெளியானது. கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், குங்குமம் போன்ற இதழ்களிலும் வல்லினம் போன்ற மின்னிதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். சிங்கப்பூரில் தேசிய அளவில் வெளிவந்துள்ள பன்மொழித் தொகுப்புகள் பலவற்றிலும் லதாவின் கவிதைகள், சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரின் கலை, இலக்கியம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்.

லதா சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, புதுடெல்லி உலக புத்தக விழா, ஜார்ஜ் டவுன் இலக்கியவிழா உள்ளிட்ட அனைத்துலக இலக்கிய விழாக்களில் எழுத்தாளராக உரைகள், கருத்தரங்குகளில் பங்கெடுத்தார். தேசியக் கலைகள் மன்றமும் தேசிய கல்விக் கழகமும் முதன்முறையாக ஏற்பாடு செய்த உடனிருந்து பயிற்றுவிக்கும் இலக்கியத் திட்டத்தில் (2016) எழுத்தாளர் ஜெயமோகனுடன் பங்கெடுத்தார்.

விருதுகள், சிறப்புகள்

  • ’நான் கொலை செய்யும் பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2008-ல் சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ் மொழிப் பிரிவு) வழங்கப்பட்டது.
  • லதாவின் 'தீவெளி' கவிதை நூல் தமிழ்நாட்டின் பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத் திட்டத்திலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் (தமிழ் மொழி) பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • லதாவின் சிறுகதைகள், கவிதைகள் சிங்கப்பூர் புகுமுக வகுப்பு தமிழ் இலக்கியப் பாடநூலான இலக்கியச் சாரல், பல்கலைக்கழக பாடநூலாக உள்ள சா.கந்தசாமி தொகுத்த 'அயலகத் தமிழ் இலக்கியம்'(சாகித்ய அகாதெமி) தொகுப்பிலும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக கலைப் படிப்பு பாடத் திட்டத்திலும் இடம்பெற்றுள்ளன.

இலக்கிய இடம்

"உள்ளார்ந்த கோபமும் தனிமையும் இவரது கவிதையின் முக்கிய புள்ளிகள். அன்றாட நிகழ்வுகள் மீதான விமர்சனமாகவும், அகநெருக்கடி மிக்க மனவலிகளையும் குறியீட்டு தளத்தில் நிறுத்தி அவரது கவிதைகள் பேசுகின்றன. இவரது கவிதையில் தொக்கி நிற்கும் அங்கதம் சிறப்பானது" என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

"சிங்கப்பூர் எழுத்தாளர்களில் லதா இன்றைக்கு முக்கியமான எழுத்தாளராக தன் எழுத்தாற்றலால் எழுந்து வந்திருக்கிறார். சிங்கப்பூர் வாழ்வை உள்ளும் புறமுமாக நின்று எழுதுகிற பார்வை அவருக்கு வாய்த்திருக்கிறது," எழுத்தாளர் சு.வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.

"லதாவின் கவிதைகள் அரசியல் உணர்வில் தீவிரம் அதிதீவிரமாக உணர்வெழுச்சியைப் பிரதியிடுகின்றன. ஏனைய சந்தர்ப்பங்களில் சாதாரணமாக – ஆனால் ஆழத்தை நோக்கி விரிகின்றன. இந்த மூன்று தன்மைகளில் மூன்றாவதே அவருக்கான வழியாகத் தென்படுகிறது. அது காலம், இடம், பொருள் என்ற எல்லைகளுக்குள்ளும் வகைப்படுத்தல்களுக்குள்ளும் சிக்குண்டு முட்டி மோதாமல் அகன்ற பரப்பில் விரிவு கொண்டு நிகழ்கிறது. இந்த நிகழ்வுக்கு நிறுத்தமேயில்லை. அது தொடரி" என்று கவிஞர் கருணாகரன் குறிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

கவிதை
  • தீவெளி (சுய வெளியீடு, 2003)
  • பாம்புக் காட்டில் ஒரு தாழை (காலச்சுவடு 2004)
  • யாருக்கும் இல்லாத பாலை (க்ரியா பதிப்பகம், 2016)
சிறுகதைகள்
  • நான் கொலை செய்யும் பெண்கள் (சுய வெளியீடு, 2007), (காலச்சுவடு, 2008)
  • சீனலட்சுமி (தமிழினி பதிப்பகம், 2022)
மொழிபெயர்ப்பு
  • The Goddess in the Living Room (சிறுகதைகள், Epigram, Singapore)
தொகுப்புகள்
  • தாத்தா, பாட்டியின் கடிதங்கள், (Letters from grandma and grandpa, National Library Board, Singapore, 2008)
  • இலக்கியம் வளர்த்த தமிழவேள் சாரங்கபாணி (G.Sarangapany’s Literary Leagacy, (Published by NAC & Tamil Murasu, 2013)
லதாவின் படைப்புகள் இடம்பெற்ற தொகுப்புகள்
  • Words, Home and Nation - (பன்மொழித் தொகுப்பு) Centre for the Arts, National University of Singapore (1995)
  • Rhythms a Singaporean Millennial Anthology of Poetry (நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பு) National Arts Council of Singapore (2000)
  • கனவும் விடிவும் (தற்காலத் தமிழ்ப்பெண் கவிஞர்கள், இந்திய சாகித்திய அகாதமி)
  • Fifty on 50, National Arts Council of Singapore (2009)
  • Tumasik: Contemporary Writing from Singapore (Autumn Hill Books and National Arts Council of Singapore, 2009)
  • Reflecting on the Merlion, an anthology of poems (National Arts Council of Singapore, 2009)
  • Dari Jendela Zaman Ini (சிங்கப்பூர், மலேசியக் கவிதைகளின் பன்மொழித் தொகுப்பு, (Institut Terjemaha Negara Malaysia, Kuala Lumpur and National Arts Council of Singapore, 2010)
  • UNION: 15 Years of Drunken Boat, 50 Years of Writing From Singapore, Ethos Books, Singapore, 2015
  • Eye/Feel/Write: Experiments in Ekphrasis (Squircle Line Press, Singapore, 2015)
  • SG Poems 2015-2016 (Ethos Books, Singapore, 2016)
  • Canopy (The Select Centre publication, 2018)
  • Internation anthologies: அயலக தமிழ் இலக்கியம் (compiled by Sa. Kandasamy. Sahitya Akademi, 2004,2009, 2010, 2016, 2017)
  • Anthology of Diaspora Tamil poems (Tamil Literary Garden of Canada, 2013)
  • Anthology of Diaspora Short Stories (Sahitya Akademi, India, 2014)
  • Anthology of Tamil Diaspora Poems (Sahitya Akademi, India, 2017)
  • Unwinding: the global anthology of Contemporary Tamil short stories (Emerald Publishers, 2020)
  • Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore (ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்ப்பூரிலும் தமிழர், Indian Heritage Centre and Institute of Policy Studies, 2019, 2021)

உசாத்துணை

இணைப்புகள்

“விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” – லதா


✅Finalised Page