under review

மெலாயு ப்ரோதோ

From Tamil Wiki
Revision as of 14:49, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
Pagan races of the Malay Peninsula (1906) (14778446871).jpg

தீபகற்ப மலேசியாவின் வகுக்கப்பட்ட மூன்று பழங்குடிகளில் ஒன்று மெலாயு ப்ரோதோ. இந்த பழங்குடி இனத்தில் மொத்தம் ஆறு உட்பிரிவுகள் உள்ளன.

உட்பிரிவுகள்

மெலாயு ப்ரோதோ பிரிவில் ஆறு உட்பிரிவு பழங்குடியினர் உள்ளனர்:

  1. தெமுவான் (Temuan)
  2. ஜகூன் (Jakun)
  3. செமெலாய் (Semelai)
  4. ஓராங் குவாலா (Orang Kuala)
  5. ஓராங் செலேதார் (Orang Seletar)
  6. ஓராங் கானாக் (Orang Kanaq)

மொழி

ஆறு உட்பிரிவுகளைக் கொண்ட மெலாயு ப்ரோதோ பழங்குடியில் செமெலாய் பழங்குடியினர் மட்டும் Central Aslian மொழிகளைப் பேசுகின்றனர். மற்ற இனக்குழுவினர் மலாய் மொழியைப் பேசுபவர்கள்.

வாழிடம்

மெலாயு ப்ரோதோ பழங்குடியினர் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பஹாங், ஜொகூர் மாநிலங்களில் வாழ்கின்றனர். மெலாயு ப்ரோதோ பழங்குடிகள் கடற்கரை, ஆறுகளின் கரையோரம், பள்ளத்தாக்குகளில் வசித்து வந்தனர். இப்போது, அரசாங்கம் கட்டித் தந்த வீடுகளில் வசிக்கின்றனர். ப்ரோதோமலாய் பழங்குடியினரின் பலருக்குச் சுயமாக மேய்ச்சல் நிலம் உள்ளது.

நன்றி: jakoa.gov.my

பின்னணி

மெலாயு ப்ரோதோ பழங்குடியினர் சுண்டா பசிஃபிகிலிருந்து (Sunda Pacific) தீபகற்ப மலேசியாவிற்குள் குடியேறினர். சுண்டா பசிஃபிக் என்பது 2.6 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் குறைந்திருந்தபோது இருந்த நிலப்பரப்பு. சுண்டா பசிஃபிகில் இன்றைய போர்னியோ, சுமத்ரா, ஜாவா, மலேசிய தீபகற்பம் அடங்கும். ‘Layer Cake’ கோட்பாட்டின் கீழ் மெலாயு ப்ரோதோ நெக்ரீதோ, செனோய்க்கு அடுத்து மூன்றாவதாக மலேசிய தீபகற்பத்திற்குள் குடியேறினர்.

தொழில்

மெலாயு ப்ரோதோ பழங்குடியினர் கடலோடிகளாகவும் விவசாயிகளாகவும் இருக்கின்றனர்.

உசாத்துணை

மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை


✅Finalised Page