புதுமைப்பித்தன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "புதுமைப்பித்தன் (1906-1948) தமிழ் நவீன இலக்கியத்தைச் சட்டென்று முழுமைப்படுத்திய மேதை. == தனி வாழ்க்கை == புதுமைப்பித்தனே (1906-1948).சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்டவர். == இலக்கிய வாழ்க்...")
 
(மெய்ப்பு)
Line 2: Line 2:


== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
புதுமைப்பித்தனே (1906-1948).சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்டவர்.
புதுமைப்பித்தனே (1906-1948) சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்டவர்.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
Line 9: Line 9:
அக உத்வேகத்தின் சாத்தியங்களை மட்டும் நம்பி எழுதும் பாணி புதுமைப்பித்தனுடையது. கதை வடிவம், நடை ஆகியவை பற்றித் தனிக் கவனம் ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது சிறந்த படைப்புகள், எழுதும் கணத்தில் உருவாகும் தன்னிச்சையான வல்லமையுடன் உள்ளன.
அக உத்வேகத்தின் சாத்தியங்களை மட்டும் நம்பி எழுதும் பாணி புதுமைப்பித்தனுடையது. கதை வடிவம், நடை ஆகியவை பற்றித் தனிக் கவனம் ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது சிறந்த படைப்புகள், எழுதும் கணத்தில் உருவாகும் தன்னிச்சையான வல்லமையுடன் உள்ளன.


புதுமைப்பித்தனின் இலக்கியத் தளம் மிக விரிவானது. திகில் கதைகள், வேடிக்கைக் கதைகள், தத்துவக் கதைகள், மிகை யதார்த்தக் கதைகள், உருவகக் கதைகள், இயல்பு சித்திரிப்புக் கதைகள் என்று பல்வேறு வகைகளில் அவர் கதைகளை எழுதியுள்ளார்.  
புதுமைப்பித்தனின் இலக்கியத் தளம் மிக விரிவானது. திகில் கதைகள், வேடிக்கைக் கதைகள், தத்துவக் கதைகள், மிகை யதார்த்தக் கதைகள், உருவகக் கதைகள், இயல்பு சித்தரிப்புக் கதைகள் என்று பல்வேறு வகைகளில் அவர் கதைகளை எழுதியுள்ளார்.  
அவரது சமகாலத்து எழுத்தாளர்களான ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், மௌனி ஆகியோரையும் அவருடன் சேர்த்துச் சொல்வதுண்டு. இந்நால்வருக்கும் உரிய வடிவமாக சிறுகதையே இருந்தது. புதுமைப்பித்தன் நாவல் எழுத முயன்றார். முழுமை செய்ய முடியவில்லை. சிறுகதையின் வெவ்வேறு வகையான வடிவங்களையும் போக்குகளையும் இவர்கள் நால்வரும் உருவாக்கினர்.
அவரது சமகாலத்து எழுத்தாளர்களான [[ந. பிச்சமூர்த்தி]], [[கு.ப. ராஜகோபாலன்]], [[மௌனி]] ஆகியோரையும் அவருடன் சேர்த்துச் சொல்வதுண்டு. இந்நால்வருக்கும் உரிய வடிவமாக சிறுகதையே இருந்தது. புதுமைப்பித்தன் நாவல் எழுத முயன்றார். முழுமை செய்ய முடியவில்லை. சிறுகதையின் வெவ்வேறு வகையான வடிவங்களையும் போக்குகளையும் இவர்கள் நால்வரும் உருவாக்கினர்.
இவர்கள் நால்வருமே மணிக்கொடி என்ற இதழில் எழுதியவர்கள்.
இவர்கள் நால்வருமே [[மணிக்கொடி]] என்ற இதழில் எழுதியவர்கள்.


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
புதுமைப்பித்தனின பெரும்பாலான கதைகள் தாவிச் செல்லும் சொற்றொடர்களில் எள்ளலும் விமரிசனமும் ஒலிக்க அமைந்துள்ளன. விதிவிலக்காக ‘சாப விமோசனம்’ போன்ற கதைகளில் உருவகக் கவித்துவம் கொண்ட நடையும் ‘செல்லம்மாள்’ போன்ற கதைகளில் கச்சிதமான சித்திரிப்பு நடையும் உள்ளன. சிறுகதை வடிவம் மிகையின்றி அமைந்த புதுமைப்பித்தன் கதைகள் அனேகமாக ஏதுமில்லை. ஆனால், அவ்வடிவம் பற்றிய தெளிவானதொரு பிரக்ஞை அவரிடம் இருந்ததன் தடயமும் எல்லாக் கதைகளிலும் உள்ளது.
புதுமைப்பித்தனின பெரும்பாலான கதைகள் தாவிச் செல்லும் சொற்றொடர்களில் எள்ளலும் விமரிசனமும் ஒலிக்க அமைந்துள்ளன. விதிவிலக்காக ‘சாப விமோசனம்’ போன்ற கதைகளில் உருவகக் கவித்துவம் கொண்ட நடையும் ‘செல்லம்மாள்’ போன்ற கதைகளில் கச்சிதமான சித்திரிப்பு நடையும் உள்ளன. சிறுகதை வடிவம் மிகையின்றி அமைந்த புதுமைப்பித்தன் கதைகள் அனேகமாக ஏதுமில்லை. ஆனால், அவ்வடிவம் பற்றிய தெளிவானதொரு பிரக்ஞை அவரிடம் இருந்ததன் தடயமும் எல்லாக் கதைகளிலும் உள்ளது.
புதுமைப்பித்தனின் விமரிசகர்கள், அவர் தன் கதைப் பாணியையும் நடையையும் அடிக்கடி மாற்றிக்கொண்டது வலுவான தேடல் இல்லாமையினால்தான் என்றும் பெரும் படைப்பாளிகள் எவரிடமும் இத்தகைய பதற்றம் இருந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். உத்தி விஷயத்தில் புதுமைப்பித்தன் கொண்ட மிகையான பரபரப்பு அவருடைய மிகப் பெரிய பலவீனம் என்பதில் ஐயமில்லை. எல்லாப் படைப்புகளிலும் ஊடுருவும் தன்முனைப்பு மிக்க படைப்பாளியின் குரல், வடிவம் கோரும் முழுமையைத் தர முயலாத பொறுமையின்மை, கரு முதிரும் முன்பே எழுத நேரும் அவசரம் முதலியவை புதுமைப்பித்தனின் பெரும் குறைபாடுகள். ஆனால் சமரசமின்றி தன் அந்தரங்கத்தை நோக்கிய பாய்ச்சலை மேற்கொண்டவர் அவர். அத்தீவிரத்தைப் பிற ஈடுபாடுகள் திசைதிருப்ப அவர் அனுமதித்ததில்லை. அதுவே அவரைப் பெரும் படைப்பாளியாக ஆக்குகிறது.
புதுமைப்பித்தனின் விமரிசகர்கள், அவர் தன் கதைப் பாணியையும் நடையையும் அடிக்கடி மாற்றிக்கொண்டது வலுவான தேடல் இல்லாமையினால்தான் என்றும் பெரும் படைப்பாளிகள் எவரிடமும் இத்தகைய பதற்றம் இருந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். உத்தி விஷயத்தில் புதுமைப்பித்தன் கொண்ட மிகையான பரபரப்பு அவருடைய மிகப் பெரிய பலவீனம் என்பதில் ஐயமில்லை. எல்லாப் படைப்புகளிலும் ஊடுருவும் தன்முனைப்பு மிக்க படைப்பாளியின் குரல், வடிவம் கோரும் முழுமையைத் தர முயலாத பொறுமையின்மை, கரு முதிரும் முன்பே எழுத நேரும் அவசரம் முதலியவை புதுமைப்பித்தனின் பெரும் குறைபாடுகள். ஆனால் சமரசமின்றி தன் அந்தரங்கத்தை நோக்கிய பாய்ச்சலை மேற்கொண்டவர் அவர். அத்தீவிரத்தைப் பிற ஈடுபாடுகள் திசை திருப்ப அவர் அனுமதித்ததில்லை. அதுவே அவரைப் பெரும் படைப்பாளியாக ஆக்குகிறது.
புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி போன்றவர்கள் இலக்கியத் திறனாய்வுகள் எழுதியிருக்கின்றனர்.
புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி போன்றவர்கள் இலக்கியத் திறனாய்வுகள் எழுதியிருக்கின்றனர்.



Revision as of 02:19, 22 January 2022

புதுமைப்பித்தன் (1906-1948) தமிழ் நவீன இலக்கியத்தைச் சட்டென்று முழுமைப்படுத்திய மேதை.

தனி வாழ்க்கை

புதுமைப்பித்தனே (1906-1948) சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

நடுநாயகமான படைப்பாளி. புதுமைப்பித்தன் இதழாளராகப் பணியாற்றினார். சில மொழிபெயர்ப்புகளையும் ஓரிரு கவிதைகளையும் எழுதினார். அவரது சாதனைகள் சிறுகதைகளிலேயே உள்ளன.

அக உத்வேகத்தின் சாத்தியங்களை மட்டும் நம்பி எழுதும் பாணி புதுமைப்பித்தனுடையது. கதை வடிவம், நடை ஆகியவை பற்றித் தனிக் கவனம் ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது சிறந்த படைப்புகள், எழுதும் கணத்தில் உருவாகும் தன்னிச்சையான வல்லமையுடன் உள்ளன.

புதுமைப்பித்தனின் இலக்கியத் தளம் மிக விரிவானது. திகில் கதைகள், வேடிக்கைக் கதைகள், தத்துவக் கதைகள், மிகை யதார்த்தக் கதைகள், உருவகக் கதைகள், இயல்பு சித்தரிப்புக் கதைகள் என்று பல்வேறு வகைகளில் அவர் கதைகளை எழுதியுள்ளார். அவரது சமகாலத்து எழுத்தாளர்களான ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், மௌனி ஆகியோரையும் அவருடன் சேர்த்துச் சொல்வதுண்டு. இந்நால்வருக்கும் உரிய வடிவமாக சிறுகதையே இருந்தது. புதுமைப்பித்தன் நாவல் எழுத முயன்றார். முழுமை செய்ய முடியவில்லை. சிறுகதையின் வெவ்வேறு வகையான வடிவங்களையும் போக்குகளையும் இவர்கள் நால்வரும் உருவாக்கினர். இவர்கள் நால்வருமே மணிக்கொடி என்ற இதழில் எழுதியவர்கள்.

இலக்கிய இடம்

புதுமைப்பித்தனின பெரும்பாலான கதைகள் தாவிச் செல்லும் சொற்றொடர்களில் எள்ளலும் விமரிசனமும் ஒலிக்க அமைந்துள்ளன. விதிவிலக்காக ‘சாப விமோசனம்’ போன்ற கதைகளில் உருவகக் கவித்துவம் கொண்ட நடையும் ‘செல்லம்மாள்’ போன்ற கதைகளில் கச்சிதமான சித்திரிப்பு நடையும் உள்ளன. சிறுகதை வடிவம் மிகையின்றி அமைந்த புதுமைப்பித்தன் கதைகள் அனேகமாக ஏதுமில்லை. ஆனால், அவ்வடிவம் பற்றிய தெளிவானதொரு பிரக்ஞை அவரிடம் இருந்ததன் தடயமும் எல்லாக் கதைகளிலும் உள்ளது. புதுமைப்பித்தனின் விமரிசகர்கள், அவர் தன் கதைப் பாணியையும் நடையையும் அடிக்கடி மாற்றிக்கொண்டது வலுவான தேடல் இல்லாமையினால்தான் என்றும் பெரும் படைப்பாளிகள் எவரிடமும் இத்தகைய பதற்றம் இருந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். உத்தி விஷயத்தில் புதுமைப்பித்தன் கொண்ட மிகையான பரபரப்பு அவருடைய மிகப் பெரிய பலவீனம் என்பதில் ஐயமில்லை. எல்லாப் படைப்புகளிலும் ஊடுருவும் தன்முனைப்பு மிக்க படைப்பாளியின் குரல், வடிவம் கோரும் முழுமையைத் தர முயலாத பொறுமையின்மை, கரு முதிரும் முன்பே எழுத நேரும் அவசரம் முதலியவை புதுமைப்பித்தனின் பெரும் குறைபாடுகள். ஆனால் சமரசமின்றி தன் அந்தரங்கத்தை நோக்கிய பாய்ச்சலை மேற்கொண்டவர் அவர். அத்தீவிரத்தைப் பிற ஈடுபாடுகள் திசை திருப்ப அவர் அனுமதித்ததில்லை. அதுவே அவரைப் பெரும் படைப்பாளியாக ஆக்குகிறது. புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி போன்றவர்கள் இலக்கியத் திறனாய்வுகள் எழுதியிருக்கின்றனர்.

படைப்புகள்

கவிதைகள்

சிறுகதைகள்

மொழிபெயர்ப்புகள்

அரசியல் நூலகள்

திரைப்படைத்துறை

விவாதங்கள்

இறுதிக்காலம்

உசாத்துணைகள்