under review

நடராஜகுரு: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
No edit summary
Line 1: Line 1:
[[File:நடராஜகுரு.jpg|thumb|333x333px|நடராஜகுரு]]
[[File:நடராஜகுரு.jpg|thumb|333x333px|நடராஜகுரு]]
[[File:நடராஜகுரு1.png|thumb|300x300px|நடராஜகுரு]]
[[File:நடராஜகுரு1.png|thumb|300x300px|நடராஜகுரு]]
நடராஜகுரு (நடராஜன்) (1895 - 1973) சிந்தனையாளர், தத்துவ அறிஞர், அத்வைதி, ஆன்மிகவாதி. நாராயண குருவின் மாணவர். நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கினார், அவரின் சிந்தனைகளை கேரள எல்லையிலிருந்து விடுவித்து உலகம் முழுக்க கொண்டு சென்றவர். நாராயணகுருவின் சிந்தனைகளை மேலைநாட்டுச் சிந்தனையாளர்களுடன் இணைத்து உரையாடி கீழைமேலைச் சிந்தனை சந்திப்பை உருவாக்கினார்.
நடராஜகுரு (முனைவர் நடராஜன்) (1895 - 1973) சிந்தனையாளர், தத்துவ அறிஞர், அத்வைதி, ஆன்மிகவாதி. நாராயண குருவின் மாணவர். நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கினார், அவரின் சிந்தனைகளை கேரள எல்லையிலிருந்து விடுவித்து உலகம் முழுக்க கொண்டு சென்றவர். நாராயணகுருவின் சிந்தனைகளை மேலைநாட்டுச் சிந்தனையாளர்களுடன் இணைத்து உரையாடி கீழைமேலைச் சிந்தனைச் சந்திப்பை உருவாக்கினார்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்(SNDP) அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்பு(பத்மநாபன்) வின் சிறிய மகனாக 1895-ல் நடராஜன் பிறந்தார். இலங்கை கண்டியில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். சென்னை ராஜதானி கல்லூரியில் உயிரியலிலும் நிலவியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்(SNDP) அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்பு( பத்மநாபன்) வின் சிறிய மகனாக 1895-ல் நடராஜன் பிறந்தார். இலங்கை கண்டியில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். சென்னை ராஜதானி கல்லூரியில் உயிரியலிலும் நிலவியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
== ஆன்மிக வாழ்க்கை ==
== ஆன்மிக வாழ்க்கை ==
===== நாராயணகுருவைச் சந்தித்தல் =====  
===== நாராயணகுருவைச் சந்தித்தல் =====  

Revision as of 14:45, 7 April 2024

நடராஜகுரு
நடராஜகுரு

நடராஜகுரு (முனைவர் நடராஜன்) (1895 - 1973) சிந்தனையாளர், தத்துவ அறிஞர், அத்வைதி, ஆன்மிகவாதி. நாராயண குருவின் மாணவர். நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கினார், அவரின் சிந்தனைகளை கேரள எல்லையிலிருந்து விடுவித்து உலகம் முழுக்க கொண்டு சென்றவர். நாராயணகுருவின் சிந்தனைகளை மேலைநாட்டுச் சிந்தனையாளர்களுடன் இணைத்து உரையாடி கீழைமேலைச் சிந்தனைச் சந்திப்பை உருவாக்கினார்.

பிறப்பு, கல்வி

ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்(SNDP) அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்பு( பத்மநாபன்) வின் சிறிய மகனாக 1895-ல் நடராஜன் பிறந்தார். இலங்கை கண்டியில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். சென்னை ராஜதானி கல்லூரியில் உயிரியலிலும் நிலவியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஆன்மிக வாழ்க்கை

நாராயணகுருவைச் சந்தித்தல்

முதுகலைப் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நடராஜகுரு நாராயணகுருவைச் சந்தித்தார். அவரைத் தன் பணிக்கு அளிக்கும்படி நாராயண குருவே டாக்டர் பல்புவிடம் கோரினார். அதன்பின் நடராஜகுரு அவருடன் வர்க்கலை ஆசிரமத்தில் தங்கினார். நாராயணகுருவின் சீடராக இருந்து கீழைத் தத்துவத்தைக் கற்றார். நாராயணகுருவின் தத்துவ நூல்கள் பலவும் நடராஜ குருவுக்கு கற்பிக்கும் பொருட்டு கூறப்பட்டு நடராஜ குருவால் எழுதியெடுக்கப்பட்டவை. மூன்று வருடம் சென்னையில் அத்வைத ஆசிரமம் எனும் அமைப்பின் கீழ் தலித்துக்கள் மத்தியில் பணியாற்றினார். பின்பு பிச்சையேற்கும் வாழ்க்கை மேற்கொண்டு பாரதம் முழுக்க ஆறுவருடம் அலைந்தார். நாராயணகுரு ஸ்தாபித்த வர்க்கலை உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

நடராஜ குருவுக்கும் நாராயணகுருவின் எஸ்.என்.டி.பி அமைப்புக்கும் நடுவே முரண்பாடுகள் ஏற்பட்டன. எஸ்.என்.டி.பி ஒரு ஈழவ சாதி அமைப்பாக மாறுவதையும் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதையும் எதிர்த்து 1921-ல் அவ்வமைப்பை விட்டு நடராஜ குரு வெளியேறினார். இந்தியா முழுவதும் பல இடங்களில் அலைந்து திரிந்த நடராஜகுரு ஊட்டிக்கு வந்தார். அவருக்கு அமைப்புகளில் நம்பிக்கை இருக்கவில்லை. தனியாக வாழ்வதற்காக 1923-ல் ஊட்டி ஃபெர்ன் ஹில் பகுதியில் ஒரு தேயிலை தொழிற்சாலை இருந்த பகுதியை தானமாக பெற்று அதில் தன் கையாலேயே மண்ணாலும் தகரத்தாலும் கட்டப்பட்ட குடிசையில் நாராயணகுருகுலத்தைத் துவங்கினார். நாராயணகுருவின் மரணம் வரை அங்கு தன்னந்தனிமையிலேயே படித்தும் தியானம் செய்தும் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த பகுதி பிறருக்கு தெரிந்திருக்கவில்லை. அங்கே அனாதைக்குழந்தைகளுக்கான ஒரு கல்விநிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் அதை முன்னெடுக்க முடியவில்லை. நாராயணகுருவின் உடல்நிலை மோசமானதால் நடராஜகுரு மீண்டும் வர்க்கலைக்குச் சென்று நாராயணகுருவுடன் தங்கினார்.

தத்துவக் கல்வி
நாராயண குருகுலம் வர்க்கலா

நாராயணகுரு நடராஜ குருவை மேற்கத்திய தத்துவம் கற்க பிரான்ஸ் போகும்படி கேட்டுக் கொண்டார். நடராஜகுரு பாரீஸில் உள்ள சார்போன் பல்கலையில் முனைவர் படிப்புக்கு பதிவு செய்துகொண்டார். உலகப்புகழ்பெற்ற தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக அவர் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார. Le Facteur Personnel dans le Processus Educatif (Personal factor in Education) என்ற தலைப்பில் ஐந்தாண்டுகள் ஆராய்ச்சி செய்து தன் ஆய்வைச் சமர்ப்பித்தார். கல்வியியல் குறித்த அவரது ஆய்வு யுனெஸ்கோ அமைப்பினால் உலக கல்வி முன்வரைவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவருக்கு சிறப்பு பாராட்டுகளுடன் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றார். இக்காலகட்டத்தில் அவர் காந்தியையும் தாகூரையும் சந்தித்தார். 1930-ல் ஜெனிவா தேசிய கல்லூரியில் உயர்பெளதிக ஆசிரியராக (International Fellowship School in Geneva, Switzerland) ஐந்து வருடம் பணியாற்றினார்.

அமைப்புப்பணிகள்

நடராஜ குரு மாணவர்களுடன்
நாராயணகுருகுலம்

1928-ல் நாராயணகுரு சமாதியான போது அவரது பிராதனசீடர் குமாரன் ஆசான் ஏற்கனவே இறந்துவிட்டார். சகோதரன் அய்யப்பன், டி.கெ.மாதவன் போன்ற பலர் எஸ்.என்.டி.பி அமைப்பை விட்டு விலகிவிட்டனர். அவ்வமைப்பு அன்று ஈழவ சாதியினரான ஓடு, கயிறு தொழில்முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு சாதி அமைப்பாக மாறியது. புலையர்கள் வெளியேற்றப்பட்டனர். சபா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது. நாராயணகுருவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு தேவை என உணர்ந்த நடராஜ குரு தீவிரமற்ற நடைமுறை விதிகளுடன் கூடிய 'நாராயணகுருகுலம்' எனும் அமைப்பை நிறுவினார். அதன் தலைமையகம் வர்க்கலாவில் உள்ளது. சார்போனில் நடராஜகுருவின் சக மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் அவரது முக்கிய மாணவரானதும் நடவடிக்கைகள் மேலும் விரிவடைந்தன. நடராஜ குரு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். 1933-ல் நடராஜகுரு இந்தியா திரும்பினார். இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தபின் மீண்டும் ஊட்டிக்கே திரும்பிவந்து ஊட்டி நாராயணகுருகுலத்தை மீண்டும் ஆரம்பித்தார். 1956-ல் உலகப்பயணம் செய்தார். நாராயணகுருகுலம் நடராஜகுருவுக்குப் பின்னர் அவரது மாணவரான நித்ய சைதன்ய யதியால் தலைமைதாங்கப்பட்டது. அதன் தலைமையிடம் கேரளத்தில் வர்க்கலையில் உள்ளது. நித்ய சைதன்ய யதியின் மறைவுக்குப் பின்னர் அதன் தலைவராக முனி நாராயணபிரசாத் உள்ளார்.

ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டி

உலகசிந்தனைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பயிலும் நோக்குடன் 'ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டி' என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். ஒட்டுமொத்த தத்துவப்பார்வையை கற்பிக்கக்கூடிய ஒன்றாக இந்த கல்விநிறுவனம் செயல்படவேண்டும் என நடராஜகுரு ஆசைப்பட்டார்.

தத்துவம்

பிரெட் ஹாஸ் ( சக்திதாரா), குரு நித்யா, நடராஜ குரு, ஜான் ஸ்பியர்ஸ், மங்களாந்தா

நடராஜகுரு தத்துவ தளத்தில் இந்திய ஞானமரபை ஒற்றைப்படையாகவும் மதம் சார்ந்தும் விளக்க முயன்ற முயற்சிகளை எதிர்த்து நாராயணகுருவால் முன்வைக்கப்பட்ட உரையாடல் தன்மை கொண்ட தத்துவார்த்த அணுகுமுறையை வலியுறுத்தினார். நாராயணகுருவால் முன்வைக்கப்பட்ட செயலூக்கம் கொண்ட புதிய அத்வைத நோக்கை மேலைநாட்டு கருத்து முதல்வாத நோக்குகளுடன் இணைத்து விரிவாக விளக்கினார். ஹெகல், காண்ட், குரோச்சே, ஹென்றிபெர்க்சன் ஆகிய மேல்நாட்டு சிந்தனையாளர்களின் கருத்துக்களுடன் நாராயண குருவின் சிந்தனைகளை இணைத்து உரையாடியதன் வழியாக தனக்குரிய முதல்முழுமைவாத தத்துவ நோக்கு ஒன்றை உருவாக்கினார். இதன் மூலம் வலுவான ஒரு கீழைமேலைச் சிந்தனைச் சந்திப்பை உருவாக்கினார். ”அனேகமாக இந்திய சிந்தனையில் அரவிந்தருக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட முக்கியமான சிந்தனைப் பாய்ச்சல் இதுவே.” என ஜெயமோகன் குறிப்பிட்டார்.

ஒற்றைப்படை நோக்கல்லாத, சிந்தனையின் பலதள முரணியக்கம் குறித்து நடராஜகுருவுக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது. பல்வேறு சிந்தனைப்போக்குகள் மோதி முயங்கி முன்செல்லும் ஒரு பேரொழுக்காக இந்திய ஞான மரபை அவர் உருவகித்தார். இக்காரணத்தால் அவர் சமகாலத்தைய இந்துஞானமரபுச் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்களிடம் மோத நேர்ந்தது. நடராஜ குரு இந்திய சிந்தனைமரபை தத்துவ விவாதப் பரப்பாகக் காண முயன்றார். மீபொருண்மை [Metaphysics] மரபை அத்தத்துவத்தின் ஒரு வெளிப்பாடாகக் கொண்டார். இந்துஞான மரபை ஆன்மீகமான உண்மைகள் அடங்கிய பாரம்பரியச் செல்வமாக காணும் நோக்கையும் மத மீட்பு நோக்கையும் அவர் நிராகரித்தார். பகவத்கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம் ஆகிய தத்துவ நூல்கள் என்றும், தத்துவநூல் ஏற்றும் மறுத்தும் விளக்கியும் விவாதிக்கப்படவேண்டியது என்றும் வலியுறுத்தினார்.

நாராயணகுரு முன்வைத்த தூய வேதாந்தத்தை மேற்கத்திய தத்துவ மொழியில் நடராஜகுரு விளக்கினார். நாராயணகுருவின் சிந்தனைகளை நவீன மேலைத்தத்துவ தர்க்கமுறைகளைப் பயன்படுத்தி விளக்கினார். நாராயணகுரு முன்வைத்த அத்வைத நோக்கை தூய முதல்முழுமைவாதமாக [Absolutism] வளர்த்தார். இதற்காக நடராஜகுரு ஐரோப்பா முழுக்க பலமுறை பயணம் செய்தார். பற்பல நாடுகளில் நாராயண குருகுலத்தின் கிளைகளை அமைத்தார். அவரது மாணவர்களில் பிற்காலங்களில் இந்திய சமூக ஆன்மீக வாழ்வில் மிக முக்கியமானவர்களாக கருதப்பட்ட பலர் உள்ளனர்.

நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி
மாணவர்கள்
  • ஜான் ஸ்பியர்ஸ்
  • மங்கலானந்தா
  • சிதம்பர தீர்த்தா
  • வினய சைதன்யா
  • குரு ஃப்ரெடி
  • நித்ய சைதன்ய யதி
  • முனி நாராயண பிரசாத்

எழுத்து

நடராஜகுரு ஆங்கிலத்தில் மட்டுமே அவரது நூல்களை எழுதினார். ஃபிரெஞ்சிலும் சில நூல்கள் எழுதினார். அவருக்கு மலையாளம் ஆழமாகத் தெரிந்திருக்கவில்லை. The world of Guru, One Hundred Verses of the Self Instruction, Autobiography of an absolutist, Wisdom, Man Woman Dialectics முதலிய இருபது நூல்கள் அவரால் எழுதப்பட்டன.

ஊட்டி ஃபெர்ன்ஹில் குருகுலத்தில் தங்கியிருந்து நடராஜ குரு ’The Word Of Guru’ என்ற பகவத்கீதை உரையை எழுதினார். 1950-ல் நடராஜகுரு உலகக் குடிமகன் என்று தன்னை அழைத்துக்கொண்ட காரி டேவிஸை சந்தித்தார். எந்த நாட்டுக்கும் குடியுரிமை கொள்ளாத ஒரு கலாச்சாரத்துக்காக அவர் போராடிக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து நடராஜ குரு பணியாற்றினார். ஓர் உலக அரசுக்கான முன்வரைவை அவர்கள் உருவாக்கினர். 'An Integrated Science of the Absolute' என்ற நூலை இரு தொகுதிகளாக எழுதி முடித்தார். நாராயணகுருவின் நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். நடராஜகுரு பகவத்கீதைக்கு எழுதிய உரை மிக முக்கியமான தத்துவநூலாக முக்கிய ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பகவத்கீதையை தத்துவக் கோணத்தில் விளக்கி எழுதப்பட்ட பெரும்பாலும் எல்லா நூல்களிலும் இந்நூலின் பாதிப்பு வெளிப்படையாக தெரிகிறது என்று நித்ய சைதன்ய யதி குறிப்பிட்டார். நித்ய சைதன்ய யதியுடன் நடராஜ குரு நிகழ்த்திய பயணத்தைப் பற்றி நித்ய சைதன்ய யதி ’குருவும் சீடனும்’ என்ற நூலாக எழுதினார். ப.சாந்தி இதை தமிழில் மொழிபெயர்த்தார்.

மறைவு

நடராஜ குரு 1973-ல் காலமானார். அவரது சமாதி வர்க்கலாவில் உள்ளது. அங்கே அவர் நினைவாக ஒரு பிரார்த்தனைக்கூடமும் தத்துவ நூலகமும் உள்ளன.

நூல்கள் பட்டியல்

  • The Word of the Guru: Life and Teachings of Narayana Guru
  • Vedanta Revalued and Restated
  • Autobiography of an Absolutist
  • The Bhagavad Gita, Translation and Commentary
  • An Integrated Science of the Absolute (Volumes I, II)
  • Wisdom: The Absolute is Adorable
  • Saundarya Lahari of Sankara
  • The Search for a Norm in Western Thought
  • The Philosophy of a Guru
  • Memorandum on World Government
  • World Education Manifesto
  • Dialectical Methodology
  • Anthology of the Poems of Narayana Guru
நடராஜகுரு பற்றிய நூல்
  • குருவும் சீடனும் - நித்ய சைதன்ய யதி

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page