under review

தென்னிந்தியப் பிரமுகர்கள்

From Tamil Wiki
Revision as of 19:18, 5 March 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தென்னிந்தியப் பிரமுகர்கள் நூல்

தென்னிந்தியப் பிரமுகர்கள் (2007) அல்லயன்ஸ் பிரசுரம் வெளியிட்ட நூல். 1930 முதல் 1940 வரை சுதேசமித்திரன் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதனை எழுதியவர் கே.எஸ்.ஆர். என்னும் கே. சுந்தரராகவன்.

வெளியீடு

1930 முதல் 1940 வரை சுதேசமித்திரன் இதழில், ‘தென்னிந்தியப் பிரமுகர்கள்’ என்ற தலைப்பில், கே.எஸ்.ஆர். என்னும் கே. சுந்தரராகவன் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் கட்டுரைகளை எழுதினார். அதன் தொகுப்பே தென்னிந்தியப் பிரமுகர்கள் நூல். இதனை அல்லயன்ஸ் பதிப்பகம் 2007-ல் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

தென்னிந்தியப் பிரமுகர்கள் கட்டுரை நூலை எழுதியவர் கே.எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் கே. சுந்தரராகவன். திவான் பகதூர் சீனிவாச ராகவய்யங்காரின் பேரனான இவர், சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சுந்தரராகவன் ராவ்பகதூர் அனந்தாசார்லு, டாக்டர். உ.வே.சாமிநாத அய்யர், மகான் மணி அய்யர், சர்.வி. பாஷ்யம் ஐயங்கார், 'ஹிந்து' அதிபர் கஸ்தூரிரங்க அய்யங்கார் உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாற்றை நூல்களாக எழுதினார். அல்லயன்ஸ் பதிப்பகம் அவற்றை வெளியிட்டது.

தென்னிந்தியப் பிரமுகர்கள் - ஸி. மீனாக்ஷய்யா - சுதேசமித்திரன் இதழ் கட்டுரை

உள்ளடக்கம்

தென்னிந்தியப் பிரமுகர்கள் நூல், கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முந்தைய நூற்றாண்டிலும் தென்னிந்தியாவில் வாழ்ந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளைக் கொண்டது. இந்நூலில் கீழ்க்காணும் சான்றோர்களைப் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றன.

  • பனகல் ராஜா
  • பொப்பிலி மஹாராஜா
  • திவான்பஹதூர் ஸர் டி.என். சிவஞானம் பிள்ளை
  • திவான்பஹதூர் பி. கேசவப்பிள்ளை, CIE.
  • ராவ்பஹதூர் பி.எஸ். கிருஷ்ண ராவ்
  • டாக்டர் எஸ். ரங்காசாரியார்
  • ராவ்பஹதூர் ஸாது சேஷய்யா
  • ராவ்பஹதூர் கே.வி. ரங்கசாமி அய்யங்கார்
  • ஸர் எம். காந்தராஜ அர்ஸ் KCSI.
  • எஸ். சங்கர சுப்பய்யர், CIE.
  • நவாப் வாலாஜா
  • பி. செஞ்சல் ராவ், CIE.
  • பி. கிருஷ்ண அய்யங்கார், CIE.
  • கஞ்சம் வெங்கடரத்னம் பந்துலு
  • திவான்பஹதூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார்
  • எஸ். ரங்கஸ்வாமி ஐயங்கார்
  • டாக்டர் எம்.ஸி. நஞ்சுண்ட ராவ்
  • திவான்பஹதூர் டாக்டர் ஸர் ஆர். வெங்கடரத்னம் நாயுடு, எம்.ஏ
  • ராஜ தர்ம ப்ரவீண தம்பு செட்டி, CIE.
  • திவான்பஹதூர் வெங்காஸாமி ராயர்
  • ராஜகார்ய ப்ரஸக்த ராவ்பஹதூர் ஏ. நரஸிம்ஹ அய்யங்கார்
  • கனம் கே. பெர்ராஜு பந்துலு காரு
  • ஷம்ஸ்-உல்-உலேமா மௌலானா
  • முஹமது அப்துல் ரஹின் ஷாடிர்
  • ராவ்பஹதூர் கே.பி. ராமநாத அய்யர்
  • ராவ்பஹதூர் ஸி. ஜம்புலிங்க முதலியார், CIE.
  • ஸர் அஹமது தம்பி மரக்காயர்
  • ராவ்பஹதூர் கே. வீரேசலிங்கம் பந்துலு
  • ஸ்ரீநிவாச ராகவய்யங்கார், CIE
  • சி. ராமாநுஜம் செட்டியார்
  • சர்.சி. தியாகராய செட்டியார்
  • பி. எம். மதுரைப்பிள்ளை
  • திருமணம் வேதாத்ரீசதாச முதலியார்
  • ஆற்காடு நாராயணசாமி முதலியார்
  • நவாப் ஸர் அமீன்ஜங் பஹதூர், K.C.I.E
  • நவாப் ஸர் பரிடூன் ஜங் பகதூர், K.C.I.E
  • மோஷின் - உல் - முல்க்
  • கே.டி. பால், O.B.E
  • ஸர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார். K.C.I.E.
  • ராவ்பஹதூர் எஸ். அப்புசாஸ்திரியார்
  • ஸர் மகம்மது உஸ்மான், K.C.I.E.
  • ஆர். என். ஆரோக்கியசாமி முதலியார்
  • நவாப் சையது முகம்மது சாஹேப் பஹதூர்
  • ஸர் எம். ராமச்சந்திரராவ் பந்துலு
  • திருவாங்கூர் மஹாராஜா ஸ்ரீ விசாகம் திருநாள்
  • ஸ்ரீ ஆயில்யம் திருநாள், G.C.S.I
  • ஸ்ரீஜகந்நாத ராஜாமணி
  • ராஜ தேவ், C.I.E.
  • ஸர். விஜயராமா, K.C.S.I.
  • ஸி. மீனாக்ஷய்யா
  • தென்னாட்டுத் திலகம் திவான் பஹதூர் எம்.ஓ. பார்த்தசாரதி ஐயங்கார்
  • ஸ்ரீ முத்துசுவாமி தீக்ஷிதர்
  • போலீஸ் ராகவாச்சாரியார்
  • கெ. நாராயண ராவ்
  • கனம் ஸர் அப்துர் ரஹீம், K.C.S.I.
  • நவாப் சையது ஹூசேன் பில்கிராமி
  • ஸர். சி. கிருஷ்ணன்
  • ஏ. ஆர். ராஜராஜ வர்மா, M.A., MRAS
  • ஹாஜி முகமது அப்துல் ஹாதி பாதுஷா ஸாஹேப்
  • பம்மல் விஜயரங்க முதலியார்
  • எல்.ஸி. வில்லியம்ஸ்
  • எச்.வி. நஞ்சுண்டய்யா, C.I.E.
  • எஸ். சத்தியநாதன்
  • ஸ்ரீமான் கஸ்தூரிரங்க அய்யங்கார்
  • காதி அநந்தாசார்ய ஸ்வாமிகள்
  • அபிநவ பாஷ்யகார அநந்தாழ்வான் ஸ்வாமி
  • டாக்டர் ஆர். சாமா சாஸ்திரி
  • சிவாபி நவ நரஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகள்
  • மஹாமஹோபாத்யாய டாக்டர் கணபதி சாஸ்திரி
  • விரூபாக்ஷ சாஸ்திரிகள்
  • தண்டபாணிஸ்வாமி தீக்ஷிதர்
  • என். வைத்யநாத சாஸ்திரிகள்
  • எம். ராஜு சாஸ்திரியார்
  • வெங்கடரங்காச்சாரியார்
  • பி. ரங்காச்சாரியார்
  • எஸ்.வி. சுப்பராயாச்சார்
  • ராமசுப்பா சாஸ்திரிகள்
  • ஸ்ரீரங்காசாரிய ஸ்வாமி
  • எம். கங்காதர சாஸ்திரி, C.I.E.
  • பி.வி. பஞ்சாபகேச சாஸ்திரிகள்
  • வளைய கோதவர்ம ராஜா
  • லஷ்மணஸூரி

மதிப்பீடு

தென்னிந்தியப் பிரமுகர்கள் நூல் ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, அக்கால சென்னை ராஜதானி மற்றும் தென்னிந்தியாவில் வாழ்ந்த சான்றோர்களது வரலாற்றின் தொகுப்பு. அக்காலச் சான்றோர்களின் குறிப்பிடத்தகுந்த வாழ்க்கை வரலாற்று நூலாக தென்னிந்தியப் பிரமுகர்கள் நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page