under review

திவாகரர்

From Tamil Wiki
Revision as of 11:15, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திவாகரர் (பொ.யு. 9-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். திவாகர நிகண்டு நூலின் ஆசிரியர்

வாழ்க்கைக் குறிப்பு

திவாகரர் பிங்கலந்தை செய்த பிங்கலர் எனும் ஆசிரியரின் தந்தை. சிலர் இவர் சமண சமயம் சார்ந்தவர் என்றும், விநாயகர் வணக்கம் கூறுவதால் ஈசனுக்குரிய ஐம் முகங்களெனச் சைவ மரபை ஒட்டிக் கூறுவதாலும், சைவ சித்தாந்திகளையொட்டித் தத்துவம் 25 என்பதாலும், ஊர்தி, படை, கொடி கூறும் இடங்களிலும் சிவனையே முன்வைப்பதனலும், சாணம் புண்ணிய சாந்தம் என உரைப்பதாலும் சிலர் அவரைச் சைவ சமயத்தவர் என்றும் கூறுவர்.

காலம்

சளுக்குவேந்தர், அரட்டர் எனும் பிரயோகங்களின் அடிப்படையில் எஸ். வையாபுரிப் பிள்ளை திவாகரரின் காலத்தை நிறுவ முற்பட்டார். சளுக்கரைப் பெருவேந்தராகவும் பொ.யு. 750 முதல் 950 வரை அறியப்பட்ட அரட்டரைக் குறுநில வேந்தராகவும் திவாகரர் கூறுவதால் சளுக்கர் பிரபலராய் விளங்கிய பொ.யு. 10-12-ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதினார்.

தெ.பொ. மீனாட்சிசுந்தரம் அரட்டர் தம் சாம்ராஜ்யத்தை எட்டாம் நூற்றாண்டில் நிறுவுவதற்கு முன்னர் திவாகரம் தோன்றியது என்று கருதினர்.

மு. அருணாச்சலம் அரட்டர் ஆண்ட பொ.யு 725-912 காலகட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் திவாகரம் தோன்றியது என்று கருதினார்.

இலக்கிய வாழ்க்கை

சேந்தனார் திவாகரரை திவாகர நிகண்டு நூலை எழுத ஊக்குவித்தார். திவாகரர் தான் எழுதிய நிகண்டு நூலை அவருக்குச் சமர்ப்பித்தார். இது 'சேந்தன் திவாகரம்' என்றும் அழைப்பட்டது. இது பத்துத் தொகுதிகளும், இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பத்தியிரண்டு சூத்திரங்களும் (2251) கொண்டது.

மதிப்பீடு

"செங்கதிர் வரத்திற் முன்றுந் திவாகரர்" என்று சூடாமணி நிகண்டுப் பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூல் பட்டியல்

  • திவாகர நிகண்டு

உசாத்துணை


✅Finalised Page