under review

திருவாவடுதுறை கக்காயி நடராஜசுந்தரம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected error in line feed character)
Line 2: Line 2:
== இளமை, கல்வி ==
== இளமை, கல்வி ==
திருவாவடுதுறை [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை]]யின் மூத்த சகோதரி தயாளம்மாள் என்பவருக்கு ஏப்ரல் 27, 1912 அன்று நடராஜசுந்தரம் பிள்ளை பிறந்தார். வீட்டில் தாயும் மாமாவும் அழைத்த 'கக்காயி’ என்ற செல்லப் பெயர் நிலைத்துவிட்டது.

நடராஜசுந்தரம் பிள்ளை தயாளம்மாளிடம் வாய்ப்பாட்டும் தாய்மாமா [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை|ராஜரத்தினம் பிள்ளை]]யிடம் நாதஸ்வரமும் கற்றார்.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
Line 7: Line 8:
== இசைப்பணி ==
== இசைப்பணி ==
நடராஜசுந்தரம் பிள்ளை 1930-ஆம் ஆண்டு [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை|ராஜரத்தினம் பிள்ளை]]யுடன் இணைந்து கச்சேரிகளில் வாசிக்கத் தொடங்கினார். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தனியாக குழு அமைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். நடராஜசுந்தரம் பிள்ளை வாய்ப்பாட்டுக் கச்சேரிகளும் செய்திருக்கிறார்.

ராகம் வாசிப்பதில் புகழ் பெற்றிருந்த நடராஜசுந்தரம் பிள்ளையின் வஸந்தபைரவி, லதாங்கி, ஷண்முகப்ரியா, கரஹரப்ரியா, நாயகி ராக ஆலாபனைகள் கற்பனை செறிந்து, விரலடிகள் மற்றும் பிருகாக்களுடன் சிறப்பானவை. நீண்ட நேரம் மந்தரஸ்தாயி சஞ்சாரம் செய்வது நடராஜசுந்தரம் பிள்ளையின் தனிச்சிறப்பு.

சிலகாலம் திருவாவடுதுறை ஆதீன வித்வானாக இருந்திருக்கிறார். திருவாவடுதுறை ஸந்நிதானம் நடராஜசுந்தரம் பிள்ளையின் பல்லவி வாசிப்புக்கு ஏழரைப் பவுன் தங்கப் பதக்கமும் சங்கிலியும் பரிசளித்து கௌரவித்திருக்கிறார்.

'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளை [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை]]யுடன் சேர்ந்து ’கச்சேரிசெட்’ என்ற தலைப்பில் சில இசைத்தட்டுக்களையும், தனியாக சில இசைத்தட்டுக்களையும் வெளியிட்டிருக்கிறார்.

====== மாணவர்கள் ======
====== மாணவர்கள் ======

Revision as of 20:14, 12 July 2023

திருவாவடுதுறை 'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளை (1912-மே 23, 1956) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையின் மூத்த சகோதரி தயாளம்மாள் என்பவருக்கு ஏப்ரல் 27, 1912 அன்று நடராஜசுந்தரம் பிள்ளை பிறந்தார். வீட்டில் தாயும் மாமாவும் அழைத்த 'கக்காயி’ என்ற செல்லப் பெயர் நிலைத்துவிட்டது.

நடராஜசுந்தரம் பிள்ளை தயாளம்மாளிடம் வாய்ப்பாட்டும் தாய்மாமா ராஜரத்தினம் பிள்ளையிடம் நாதஸ்வரமும் கற்றார்.

தனிவாழ்க்கை

ஸ்வாமிமலை வேணுப்பிள்ளையின் மகள் கமலாவை நடராஜசுந்தரம் பிள்ளை மணந்தார். இவர்களுக்கு கலியபெருமாள், சாமிநாதன், முருகன், நேருஜி என நான்கு மகன்கள், சாந்தகுமாரி, பிரேமா, உமாராணி என மூன்று மகள்கள்.

இசைப்பணி

நடராஜசுந்தரம் பிள்ளை 1930-ஆம் ஆண்டு ராஜரத்தினம் பிள்ளையுடன் இணைந்து கச்சேரிகளில் வாசிக்கத் தொடங்கினார். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தனியாக குழு அமைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். நடராஜசுந்தரம் பிள்ளை வாய்ப்பாட்டுக் கச்சேரிகளும் செய்திருக்கிறார்.

ராகம் வாசிப்பதில் புகழ் பெற்றிருந்த நடராஜசுந்தரம் பிள்ளையின் வஸந்தபைரவி, லதாங்கி, ஷண்முகப்ரியா, கரஹரப்ரியா, நாயகி ராக ஆலாபனைகள் கற்பனை செறிந்து, விரலடிகள் மற்றும் பிருகாக்களுடன் சிறப்பானவை. நீண்ட நேரம் மந்தரஸ்தாயி சஞ்சாரம் செய்வது நடராஜசுந்தரம் பிள்ளையின் தனிச்சிறப்பு.

சிலகாலம் திருவாவடுதுறை ஆதீன வித்வானாக இருந்திருக்கிறார். திருவாவடுதுறை ஸந்நிதானம் நடராஜசுந்தரம் பிள்ளையின் பல்லவி வாசிப்புக்கு ஏழரைப் பவுன் தங்கப் பதக்கமும் சங்கிலியும் பரிசளித்து கௌரவித்திருக்கிறார்.

'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளை டி. என். ராஜரத்தினம் பிள்ளையுடன் சேர்ந்து ’கச்சேரிசெட்’ என்ற தலைப்பில் சில இசைத்தட்டுக்களையும், தனியாக சில இசைத்தட்டுக்களையும் வெளியிட்டிருக்கிறார்.

மாணவர்கள்

திருவாவடுதுறை 'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளையிடம் கற்ற முக்கியமான மாணவர்கள்:

  • கோவிலூர் ராமலிங்கம் பிள்ளை
  • திருமருகல் கோவிந்தராஜ பிள்ளை
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருவாவடுதுறை 'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளை நீரிழிவு நோயால் உடல்நலம் குன்றியிருந்தார். மே 23, 1956 அன்று மரணம் அடைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

✅Finalised Page