second review completed

குறிஞ்சி பிரபா

From Tamil Wiki
குறிஞ்சி பிரபா

குறிஞ்சி பிரபா (பிறப்பு: மே 13, 1989) தமிழில் எழுதிவரும் கவிஞர், பாடலாசிரியர், உதவி இயக்குனர்.

பிறப்பு, கல்வி

குறிஞ்சி பிரபா கடலூர் சேத்தியாத்தோப்பில் துரை மீனாட்சி சுந்தரம், அன்புச்செல்வி இணையருக்கு மே 13, 1989-ல் பிறந்தார். உடன்பிறந்தாவர்கள் ஒரு சகோதரர், ஒரு சகோதரி. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புலுள்ள தே.கோ.ம மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்காட்சித் தொடர்பியலில் (viscom) இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

குறிஞ்சி பிரபா ஜூன் 30, 2022-ல் காயத்திரியை திருமணம் செய்து கொண்டார்.

திரை வாழ்க்கை

குறிஞ்சி பிரபா 'பிசாசு 2' படத்தில் மிஷ்கினுடன் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். தெகிடி, சரபம், கூட்டாளி, ஸ்டார் ஆகிய படங்களில் பாடலாசிரியராக இருந்தார். யாழினி சேனல், கண்மணி தொலைக்காட்சித் தொடருக்கான பாடல்களின் ஆசிரியர்.

இலக்கிய வாழ்க்கை

குறிஞ்சி பிரபாவின் முதல் கவிதை 'ஈழக்கடிதம்' கருஞ்சட்டைத்தமிழர் இதழில் 2007-இல் வெளியானது. முதல் நூல் 'அமித்ரா குட்டியின் புத்தர்' உயிர்மை வெளியீடாக 2013-இல் வந்தது. 2019-இல் 'மீட்பள்' கவிதைத்தொகுப்பு வெளியானது. ஜெயமோகன், எஸ் ராமக்கிருஷ்ணன், பிரபஞ்சன், பஷீர், வண்ணதாசன், பாவண்ணன், தேவதச்சன், எம்.யுவன், அ.முத்துலிங்கம், சேரன் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர் இளம் தளிர் விருது 2014.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • அமித்ரா குட்டியின் புத்தர் (2013)
  • மீட்பள் (2019)

இணைப்புகள்


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.