under review

எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா): Difference between revisions

From Tamil Wiki
(Moved categories to bottom of article)
(Corrected text format issues)
Line 6: Line 6:
== பதிப்பாளர் ==
== பதிப்பாளர் ==
க்ரியா ராமகிருஷ்ணன் தோழி ஜெயலட்சுமியுடன் இணைந்து 1974-ல் ‘க்ரியா பதிப்பகத்தை’ சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரில் தொடங்கினார். [[க்ரியா பதிப்பகம்]] மூலம் க்ரியாவின் ’தற்காலத் தமிழ் அகராதி’ உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். பதிப்புத்துறையில் பல்வேறு தொழில் நுட்பங்களைப் புகுத்தினார். சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் என பல தலைப்புகளின் கீழ் இப்பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. 1978-ஆம் ஆண்டிலிருந்து இந்தி, வங்கமொழி, கன்னடம், என பல மொழிகளில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் வெளியிட்டது.

உலக இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளான லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’, ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’; மருத்துவ நூலான டேவிட் வெர்னரின் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’; தமிழ்க் கல்வெட்டியல் குறித்த ஆங்கில நூலான [[ஐராவதம் மகாதேவன்|ஐராவதம் மகாதேவனின்]] ‘எர்லி தமிழ் எபிகிராஃபி’ என்று விரியும் ‘க்ரியா’வின் நூல் வரிசையில் வெளியானவைதான் [[சுந்தர ராமசாமி]]யின் ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’, [[அம்பை]]யின் ‘வீட்டின் மூலையில் சமையலறை’, [[இமையம்|இமையத்தின்]] ‘கோவேறு கழுதைகள்’, [[ந. முத்துசாமி|ந.முத்துசாமி]]யின் ‘மேற்கத்திக் கொம்புமாடுகள்’, [[பூமணி]]யின் ‘அஞ்ஞாடி’ போன்ற நூல்கள் க்ரியா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளன.

[[File:’தற்காலத் தமிழ் அகராதி’.jpg|thumb|’தற்காலத் தமிழ் அகராதி’]]
[[File:’தற்காலத் தமிழ் அகராதி’.jpg|thumb|’தற்காலத் தமிழ் அகராதி’]]
== க்ரியா அகராதி ==
== க்ரியா அகராதி ==
"பதிப்புத் தொழிலின் மூலவளமான மொழியைப் பெருக்குறதுபத்தி யோசிச்சப்ப, எங்களுக்கான முக்கியமான தொழில் கருவி அகராதிங்கிறதை என்னோட நண்பரும் பேராசிரியருமான இ. அண்ணாமலை காட்டினார். அகராதி வேலைகள்ல இறங்கினப்போ, பதிப்பு வேலைகளும் அகராதி வேலைகளும் பரஸ்பரம் ஒண்ணுக்கொண்ணு செழுமைப்படுத்துறதை உணர்ந்தோம். பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் கைகோத்தார்." என க்ரியா அகராதி தொடங்கியதைப் பற்றி க்ரியா ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

தற்காலத் தமிழுக்கான அகராதியான ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’, தமிழில் மட்டும் அல்ல, இந்திய மொழிகளிலேயே திருத்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட (Revised Edition) முதல் அகராதி. பார்வையற்றோருக்கான முதல் ‘ப்ரெய்ல்’ அகராதி. 80 லட்சம் வார்த்தைகளைக் கொண்ட தமிழ்ச் சொல்வங்கி. சிங்கப்பூர் பாடத்திட்டத்தில் ‘க்ரியா’ அகராதி சேர்க்கப்பட்டுள்ளது.

[[File:எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா ராமகிருஷ்ணன்)2.jpg|thumb|எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா ராமகிருஷ்ணன்)]]
[[File:எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா ராமகிருஷ்ணன்)2.jpg|thumb|எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா ராமகிருஷ்ணன்)]]
Line 104: Line 102:
* [https://www.noolulagam.com/books-by-publisher/137/crea-publishers/?sortby&view க்ரியா பதிப்பகம் மூலம் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள்]
* [https://www.noolulagam.com/books-by-publisher/137/crea-publishers/?sortby&view க்ரியா பதிப்பகம் மூலம் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள்]
* [https://writerasai.blogspot.com/2013/06/blog-post.html க்ரியா ராமகிருஷ்ணன்: ஆசை]
* [https://writerasai.blogspot.com/2013/06/blog-post.html க்ரியா ராமகிருஷ்ணன்: ஆசை]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:37, 3 July 2023

எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா ராமகிருஷ்ணன்)

எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா ராமகிருஷ்ணன்) (1944 - நவம்பர் 17, 2020) தமிழ்ப் பதிப்பாளர். அகராதியியலாளர், ‘க்ரியா’ பதிப்பகத்தின் நிறுவனர். க்ரியா பதிப்பகத்தின் மூலம் தற்காலத் தமிழ் அகராதியை உருவாக்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா) 1944-ல் சென்னையில் பிறந்தார். தாய்மொழி தெலுங்கு. க்ரியா ராமகிருஷ்ணன் லயோலா கல்லூரியில் சமூகப்பணி துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்.கே.சுவாமி விளம்பர நிறுவனத்தில் பணியாற்றினார். மனைவி ஜெயலட்சுமி.

எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா ராமகிருஷ்ணன்)

பதிப்பாளர்

க்ரியா ராமகிருஷ்ணன் தோழி ஜெயலட்சுமியுடன் இணைந்து 1974-ல் ‘க்ரியா பதிப்பகத்தை’ சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரில் தொடங்கினார். க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் ’தற்காலத் தமிழ் அகராதி’ உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். பதிப்புத்துறையில் பல்வேறு தொழில் நுட்பங்களைப் புகுத்தினார். சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் என பல தலைப்புகளின் கீழ் இப்பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. 1978-ஆம் ஆண்டிலிருந்து இந்தி, வங்கமொழி, கன்னடம், என பல மொழிகளில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் வெளியிட்டது. உலக இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளான லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’, ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’; மருத்துவ நூலான டேவிட் வெர்னரின் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’; தமிழ்க் கல்வெட்டியல் குறித்த ஆங்கில நூலான ஐராவதம் மகாதேவனின் ‘எர்லி தமிழ் எபிகிராஃபி’ என்று விரியும் ‘க்ரியா’வின் நூல் வரிசையில் வெளியானவைதான் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’, அம்பையின் ‘வீட்டின் மூலையில் சமையலறை’, இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’, ந.முத்துசாமியின் ‘மேற்கத்திக் கொம்புமாடுகள்’, பூமணியின் ‘அஞ்ஞாடி’ போன்ற நூல்கள் க்ரியா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளன.

’தற்காலத் தமிழ் அகராதி’

க்ரியா அகராதி

"பதிப்புத் தொழிலின் மூலவளமான மொழியைப் பெருக்குறதுபத்தி யோசிச்சப்ப, எங்களுக்கான முக்கியமான தொழில் கருவி அகராதிங்கிறதை என்னோட நண்பரும் பேராசிரியருமான இ. அண்ணாமலை காட்டினார். அகராதி வேலைகள்ல இறங்கினப்போ, பதிப்பு வேலைகளும் அகராதி வேலைகளும் பரஸ்பரம் ஒண்ணுக்கொண்ணு செழுமைப்படுத்துறதை உணர்ந்தோம். பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் கைகோத்தார்." என க்ரியா அகராதி தொடங்கியதைப் பற்றி க்ரியா ராமகிருஷ்ணன் கூறுகிறார். தற்காலத் தமிழுக்கான அகராதியான ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’, தமிழில் மட்டும் அல்ல, இந்திய மொழிகளிலேயே திருத்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட (Revised Edition) முதல் அகராதி. பார்வையற்றோருக்கான முதல் ‘ப்ரெய்ல்’ அகராதி. 80 லட்சம் வார்த்தைகளைக் கொண்ட தமிழ்ச் சொல்வங்கி. சிங்கப்பூர் பாடத்திட்டத்தில் ‘க்ரியா’ அகராதி சேர்க்கப்பட்டுள்ளது.

எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா ராமகிருஷ்ணன்)

அமைப்புச் செயல்பாடுகள்

ந. முத்துசாமியுடன் இணைந்து கூத்துப்பட்டறை ஆரம்பித்தார். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆரம்பிக்க முக்கியப்பங்காற்றினார். மொழிக்காக இயங்கும் மொழி அறக்கட்டளையை உருவாக்கினார்.

இலக்கிய வாழ்க்கை

காம்யு, காஃப்கா, யானிஸ் வருஃபாகிஸ் வரை பல்வேறு இலக்கியம், பொருளாதாரம், விவசாயம், மருத்துவம் என பலவகை மொழிபெயர்ப்புகளைக் கொணர்ந்தார். நண்பர்களுடன் சேர்ந்து ‘கசடதபற’ இதழை நடத்தினார். ஃபிரஞ்சிலிருந்து நேரடி மொழிபெயர்ப்புகள் வர உதவினார்.

இலக்கிய இடம்

"ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘க்ரியா’ பதிப்பகம் வெளியிட்ட ஐராவதம் மகாதேவனின் ‘The Early Tamil Epigraphy’ நூலை ராமகிருஷ்ணன் மிகச் சிறப்பாகச் செம்மையாக்கம் செய்து வெளியிட்டார். அவரது பங்களிப்புகளில் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ உட்பட பல புத்தகங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘க்ரியா அகராதி’ தெற்காசிய மொழிகளின் நவீன அகராதிகளிலேயே மிகச் சிறந்தது. மிகவும் கடினமான புத்தகங்களையும் மிக நேர்த்தியாகவும் ஆழ்ந்த அக்கறையுடனும் அவர் செம்மையாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்." என ‘தி இந்து’ என்.ராம் மதிப்பிடுகிறார்.

மறைவு

  • கொரானா தொற்று காரணமாக தன் எழுபத்து ஆறாவது வயதில் நவம்பர் 17, 2020-ல் காலமானார். க்ரியா ராமகிருஷ்ணனுக்கான நினைவுக்கட்டுரைகளைத் தொகுத்து “தமிழில் புத்தகக் கலாச்சாரம்" என்ற பெயரில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது.

நூல்கள்

பதிப்பித்தவை
  • காவிரி வெறும் நீரல்ல
  • நிரபராதிகளின் காலம்
  • போலி அடையாளம்
  • காகிதப் பாவைகள்
  • யாருக்கும் இல்லாத பாவை
  • இதுவரை
  • ரமாவும் உமாவும்
  • பருவநிலை மாற்றம்
  • மெர்சோ மறுவிசாரணை (காமெல் தாவுத்)
  • காவிரிக் கரையில் அப்போது
  • பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்
  • தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)
  • அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்)
  • அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
  • ஃபாரென்ஹீட் 451
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை
  • சாவு சோறு
  • The BBi Combinatory Dictionary of English
  • புதிய அலை இயக்குநர்கள்
  • குறுந்தொகை
  • பறவைகள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)
  • தவளைக்கல் சிறுமி
  • பொடுபொடுத்த மழைத்தூத்தல்
  • தீமையின் மலர்கள்
  • சின்னச் சின்ன வாக்கியங்கள்
  • விசாரணை
  • கொலைச் சேவல்
  • ருபாயியத் - ஒமர் கய்யாம்
  • தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்
  • சின்னச் சின்ன வாங்கியங்கள்
  • செடல்
  • முத்தி
  • Social Dimensions of Modern Tamil
  • மேற்கத்திக் கொம்பு மாடுகள்
  • அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  • க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம்
  • சித்து
  • சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை…
  • மழை மரம்
  • ழாக்ப்ரொவர் சொற்கள்
  • தாவோதேஜிங் லாவோட்சு
  • வீடியோ மாரியம்மன்
  • மாங்கொட்ட சாமி
  • அபாயம்
  • கடவு
  • கொண்டலாத்தி
  • Zen awakening to your original face
  • Zen heart, zen mind
  • பெத்தவன்
  • கோவேறு கழுதைகள்
  • நன்மாறன் கோட்டைக் கதை
  • மால்குடி மனிதர்கள்
  • அமைதி என்பது நாமே
  • காற்று, மணல், நட்சத்திரங்கள் (அந்த்லான் து செந்த் எக்கபெரி)
  • செல்லாத பணம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  • எங் கதெ
  • நறுமணம்
  • மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்
  • வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)
  • Early Tamil Epigraphy
  • கூலித் தமிழ்
  • முதல் மனிதன்
  • அந்நியன்
  • லூயி மால்
  • நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்
  • An English Dictionary of the Tamil Verb
  • குட்டி இளவரசன்
  • மண் பாரம்
  • கீழை நாட்டுக் கதைகள்
  • ஆறுமுகம்
  • காண்டாமிருகம்

உசாத்துணை

இணைப்புகள்

✅Finalised Page