first review completed

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1982

From Tamil Wiki
Revision as of 10:49, 26 January 2023 by Tamizhkalai (talk | contribs)
இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள் - 1982

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1982

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி பிரும்மம் பிரபஞ்சன் கணையாழி
பிப்ரவரி மைதானத்து மரங்கள் கந்தர்வன் செம்மலர்
மார்ச் கண்ணீர் மழை சந்திரமதி தாமரை
ஏப்ரல் வலி தெரியாத ரணங்கள் வி. கௌரி ஆனந்த விகடன்
மே கல்கி மாலன் கல்கி
ஜூன் ஒரு பஸ் நிற்க மறுக்கிறது அழகாபுரி அழகப்பன் குமுதம்
ஜூலை ...ப்பா தி. ஜானகிராமன் தினமணி கதிர்
ஆகஸ்ட் ஆளுக்கொரு குகை லக்ஷ்மி விழிகள்
செப்டம்பர் உயிர் எஸ். சகுபர் ஷாதிக் கல்கி
அக்டோபர் முடி கொண்டான் ம.வே. சிவகுமார் அமுதசுரபி
நவம்பர் சங்கிலி வண்ணதாசன் தீபம்
டிசம்பர் சொக்கா அ. நாகராஜன் இதயம் பேசுகிறது

1982-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை

1982-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, பிரபஞ்சன் எழுதிய ‘பிரும்மம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. கரிச்சான் குஞ்சு இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை திருப்பூர் கிருஷ்ணன் தேர்ந்தெடுத்தார்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.