மகாகவி பாரதியார் விருது
From Tamil Wiki
மகாகவி பாரதியார் விருது, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.
மகாகவி பாரதியார் விருது
மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், பாரதியாரின் படைப்புகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கும், பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைப்போருக்கும், பாரதி இயல் வளர்ச்சிக்கு உழைப்பவர்களுக்கும் 1997 முதல் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் கொண்டது.
மகாகவி பாரதியார் விருது பெற்றோர் (2021 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 1997 | கவிஞர் மதிவண்ணன் |
2 | 1998 | குமரி அனந்தன் |
3 | 1999 | வலம்புரி ஜான் |
4 | 2000 | கவிஞர் வாலி |
5 | 2001 | பெ.சு. மணி |
6 | 2002 | கே.வி. கிருஷ்ணன் |
7 | 2003 | ரா.அ. பத்மநாபன் |
8 | 2004 | சீனி. விசுவநாதன் |
9 | 2006 | தமிழருவி மணியன் |
10 | 2007 | கவிஞர் சௌந்தரா கைலாசம் |
11 | 2008 | முனைவர் இரா.மணியன் |
12 | 2009 | டாக்டர் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் |
13 | 2010 | நா.மம்மது |
14 | 2011 | முனைவர் இரா. பிரேமா |
15 | 2012 | பாரதிக் காவலர் கு. இராமமூர்த்தி |
16 | 2013 | முனைவர் கு. ஞானசம்பந்தன் |
17 | 2014 | முனைவர் இளசை சுந்தரம் |
18 | 2015 | கவிஞர் பொன்னடியான் |
19 | 2016 | பேராசிரியர் முனைவர் ச. கணபதிராமன் |
20 | 2017 | முனைவர் சு. பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன் |
21 | 2018 | மா.பாரதி சுகுமாரன் |
22 | 2019 | முனைவர் ப.சிவராஜி |
23 | 2020 | கவிஞர் பூவை செங்குட்டுவன் |
24 | 2021 | பாரதி கிருஷ்ணகுமார் |
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.