under review

ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

From Tamil Wiki
Revision as of 16:06, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

ஜி.எஸ்.எஸ்.வி. நவின் (பிறப்பு: ஜுன் 3, 1993) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். 'கவிதைகள்' இதழின் ஆசிரியர். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ்ப் பதிப்பின் பங்களிப்பாளர்.

பிறப்பு, கல்வி

Gssv navin family.jpg

ஜி.எஸ்.எஸ்.வி. நவின் (முழுப்பெயர்: ஜி. சூரிய சண்முக வேலாயுத நவின்) திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கணேஷ், சண்முகசுந்தரி தம்பதிகளுக்கு மூத்த மகனாக ஜுன் 3, 1993 அன்று பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு சகோதரி.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார். எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியிலுள்ள பரம கல்யாணி மேல்நிலைப் பள்ளியிலும், மதுரை அமெரிக்கன் காலேஜ் மேல் நிலைப்பள்ளியிலும் பயின்றார். மேல் நிலைக்கல்வியை ஃபுஸ்கோஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் கற்றார். கோயம்புத்தூர் கற்பகம் பொறியியல் கல்லூரியில் பி.இ. (எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கிருபாலட்சுமியை பிப்ரவரி 6, 2022-ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் சென்னையில் வசித்து வரும் இவர் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகள் மானசா.

இதழியல்

தமிழ் நவீனக் கவிதைகளுக்காக தனித்த இதழ் தேவை என்னும் நோக்கில் "கவிதைகள்" மின்னிதழை 2021-ல் கவிஞர் மதாருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கவிஞர் அபி '80 நிகழ்வு

ஜி.எஸ்.எஸ்.வி. நவினின் முதல் சிறுகதை 'யாயும் ஞாயும்' 2021-ல் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வெளியானது. தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழ் விக்கி இணையதளத்தின் பங்களிப்பாளராக உள்ளார். ஆதர்ச எழுத்தாளராக நட்ஹாம்சன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சோ.தர்மன், சிவராம் காரந்த் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

கவிஞர் அபி '80 நிகழ்வை ஜூலை 2022-ல் மதுரையில் ஒருங்கிணைத்தார்.

இலக்கிய இடம்

நாட்டாரியல் இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் அதன் பல்வேறு கூறுகளைத் தன் புனைவுகளில் முயற்சித்துப் பார்க்கிறார்.

சிறுகதைகள்

வெளி இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Aug-2025, 19:51:42 IST