ராணி காமிக்ஸ்
ராணி காமிக்ஸ் (1984) தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்பட்ட படக்கதைகள். மாதஇதழாக இக்கதைகள் வெளியிடப்பட்டன. அமெரிக்க, ஐரோப்பிய படக்கதைகளின் தமிழ் வடிவங்களும், தமிழிலேயே வரையப்பட்டவையும் வெளியிடப்பட்டன.
தமிழ்ச் சித்திரக் கதைகள் பட்டியல்
வெளியீடு
ராணி காமிக்ஸ் தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்பட்டது. ராணி வாராந்தரி இதழின் ஆசிரியர்குழுவே இதையும் அமைத்தனர்.
முல்லை தங்கராசன் ஆசிரியத்துவத்தில் எம்.சௌந்தரபாண்டியன் தொடங்கிய முத்து காமிக்ஸ் ஐரோப்பிய அமெரிக்க படக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு 1972 முதல் வெளியிடப்பட்டன. அதன் வெற்றியைக் கண்ட தினத்தந்தி குழுமம் ராணி காமிக்ஸ் என்னும் மாத வெளியீட்டை 1984-ல் தொடங்கியது. 500 நூல்கள் வெளிவந்ததும் 2000 த்தில் நிறுத்தப்பட்டது.
நூல்கள்
ராணி காமிக்ஸில் ஜேம்ஸ்பாண்ட் கதைநாயகனாகத் தோன்றும் கதைகள் நிறைய வெளியிடப்பட்டன. மாயாவி (வேதாளர், Phantom) கதைகளும் வெளியிடப்பட்டன. பன்னிரண்டு ஆண்டுக்காலத்தில் வெளியான ஐநூறு படக்கதைகளில் பலவும் சிறுவர்களால் பெரிதும் விரும்பப்பட்டன.
உசாத்துணை
- ராணி காமிக்ஸ்
- ராணி காமிக்ஸ் புத்தகங்கள் | Rani Comics Books Free Download
- Tamil comics: new media, revival, and the recovery of history
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:17 IST