எம்.சௌந்தரபாண்டியன்
எம்.சௌந்தரபாண்டியன் ( - 27 மார்ச் 2025) முத்து காமிக்ஸ் சௌந்தரபாண்டியன். பதிப்பாளர், வெளியீட்டாளர். தமிழகத்தின் புகழ்பெற்ற படக்கதை வெளியீட்டகமான முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் நிறுவனங்களை உருவாக்கியவர்.
வெளியீடுகள்
தமிழில் அமர் சித்திரக் கதை மற்றும் இந்திரஜால் காமிக்ஸ், ஃபால்கன் போன்ற மொழிமாற்றம் செய்யப்பட்ட காமிக்ஸ் இதழ்கள் வெளிவந்து வரவேற்பைப் பெற்றன. அமர் சித்திரகதையின் தமிழ்ப்பதிப்பை அச்சிட்டு அளிப்பதற்காக வண்ண அச்சு இயந்திரத்தை வாங்கும்பொருட்டு 1971ல் சிவகாசியில் இருந்து சௌந்தர பாண்டியன் ஒரு படக்கதை வெளியீட்டகத்தைத் தொடங்க ஆர்வம்கொண்டார்.
ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த The Steel Claw என்னும் படக்கதையின் உரிமையை லண்டன் சென்று வாங்கிவந்து அதை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அதன் பொருட்டு முத்து காமிக்ஸ் என்னும் வெளியீட்டகத்தை சிவகாசியில் தொடங்கினார். இரும்புக்கை மாயாவி என்னும் படக்கதை 1972 ஜனவரியில் வெளியானது.
தொடர்ச்சியாக முத்து காமிக்ஸ் ஏராளமான படக்கதைகளை வெளியிட்டது. அதன் சாகச நாயகர்கள் தமிழில் சிறுவர்கள் நடுவே புகழ்பெற்றார்கள். தொலைக்காட்சி வருகைக்குப் பின் படக்கதை வாசிக்கும் ஆர்வம் குறைந்தது. ஆகவே முத்து காமிக்ஸ் பின்னடைவைச் சந்தித்தது.
பின்னர் சௌந்தரபாண்டியனின் மகன் அசோகன் இணையத்தை பயன்படுத்தி முத்து காமிக்ஸுக்கு மீண்டும் ஒரு தொடக்கத்தை அளித்து நூல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
மறைவு
சௌந்தரபாண்டியன் 27 மார்ச் 2025 அன்று சிவகாசியில் மறைந்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Mar-2025, 21:44:28 IST