under review

வாஸ்தோ

From Tamil Wiki
Revision as of 21:09, 2 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Date and header format correction)

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

வாஸ்தோ

வாஸ்தோ (நவம்பர் 9, 1980) தமிழில் கதைகளை எழுதிவரும் எழுத்தாளர். மோட்டார் சைக்கள் பயணி. திரைநடிகர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

வாஸ்தோவின் இயற்பெயர் இரா.கந்த நாகராஜன். நாகர்கோவிலில் நவம்பர் 9, 1980-ல் எஸ்.எம்.ராஜகோபால் - ஆர். சுப்புலெக்‌ஷ்மிக்கு பிறந்தார். நாகர்கோவில் ஹோம் சர்ச் இங்கிலீஷ் ப்ரைமரி ஸ்கூலில் ஆரம்பக்கல்வி. எஸ்.எ.பி. பள்ளியில் உயர்நிலைக்கல்வி. நூர்உல் இஸ்லாம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்

தனிவாழ்க்கை

வாஸ்தோ 2000-2012 வரையில் வங்கி ஊழியராக இருந்தார். 2012 முதல் தற்பொழுது வரையிலும் வாடகைக்கார் (Friendstrack Call Taxi ) நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

வாஸ்தோ அஞ்சலையும் நானும் என்னும் கதையை 2014ல் எழுதினார் 2017ல் வெளியாகியது. சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதா, நகுலன், கோணங்கி, வா.மு. கோமு ஆகியவர்களின் செல்வாக்கு தனக்குண்டு என்கிறார்

விருதுகள்

ஜீரோ டிகிரி - தமிழரசி அறக்கட்டளை சார்பாக நிகழ்த்திய போட்டியில் போகோ என்னும் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது

நூல்கள்

  • அஞ்சலையும் நானும்
  • 100% கோபத்தைக் கண்களில் காட்டிய பெண்
  • சர்ரியலிசமும் சாம்பார் ரசமும்
  • போஹோ