under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1988

From Tamil Wiki
Revision as of 21:04, 19 July 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Internal link name கணையாழி to கணையாழி;)
இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1988

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1988

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி இன்னொரு முகம் மும்தாஜ் யாசீன் கல்கி
பிப்ரவரி நியாயங்கள் மாறும் ஜோதிர்லதா கிரிஜா தினமணி கதிர்
மார்ச் அவன் நதியானான் அவள் ஓடையானாள்! வண்ணதாசன் குங்குமம்
ஏப்ரல் பழைய தண்டவாளம் ஷங்கன்னா கணையாழி (இதழ்)
மே அஃறிணை பா. தங்கராஜ் தினமணி கதிர்
ஜூன் இறுக மூடிய கதவுகள் ஆர்.சூடாமணி கல்கி
ஜூலை புலியும் புதைமணலும் மீனாதாஸ் ஆனந்த விகடன்
ஆகஸ்ட் பஞ்சாயத்து தமயந்தி ஆனந்த விகடன்
செப்டம்பர் எதிர்கொள்ளல் சுந்தர ராமசாமி காலச்சுவடு
அக்டோபர் மாண்புமிகு மக்கள் இந்திரா சௌந்தர்ராஜன் கலைமகள்
நவம்பர் அவனும் தேன்கலர் செருப்பும்...! மாலினி புவனேஷ் தினமணி கதிர்
டிசம்பர் இன்னும் ஒரு குசேலர் ராஜேந்திரகுமார் அமுதசுரபி

1988-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை

1988-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய ‘மாண்புமிகு மக்கள்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. மகரிஷி இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை கொ.மா. கோதண்டம் தேர்வு செய்தார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jan-2023, 05:56:08 IST