first review completed

தொல்காப்பியர் விருது

From Tamil Wiki

தொல்காப்பியர் விருது (Tolkappiyar award) இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கும் விருது. ஒவ்வொரு ஆண்டும் தமிழியல் ஆய்வில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கு பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும் 5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொல்காப்பியர் விருது மற்றும் இளம் அறிஞர்களுக்கான விருதுகளை 2005 முதல் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. தமிழ் மொழியை வளர்க்கவும், தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தவும் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 2014,2015,2016 மூன்று வருடங்களுக்கான விருதுகள் 2016-ல் மொத்தமாக வழங்கப்பட்டன.

தொல்காப்பியர் விருது பெற்றவர்கள்

உசாத்துணை

Central Institute of Classical Tamil, Chennai



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.