under review

செவியறிவுறூஉ

From Tamil Wiki
Revision as of 00:14, 23 March 2025 by Jayashree (talk | contribs)

செவியறிவுறூஉ பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசனுக்குக் கூறப்படும் நீதி மற்றும் நல்லறிவு புகட்டுதல் குறித்துக் கூறும் புறத்துறை.

செவியறிவுறூஉ தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அறத்தினை அறிந்த செங்கோல் மன்னவனுக்கு வீரத்திற்கு வழுவில்லாத பெரும் கருத்தினை உணரும்படி கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

மறம்திரி(வு) இல்லா மன்பெரும் சூழ்ச்சி
அறம் தெரி கோலாற்(கு) அறிய உரைத்தன்று (கொளு.33)

வெண்பா

அந்தணர் சான்றோர் அரும்தவத்தோர் தம்முன்னோர்
தந்தை தாய் என்று இவர்க்குத் தார் வேந்தே - முந்தை
வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி
மொழி நின்று கேட்டான் முறை 221

"வேந்தே! சான்றோர், மூத்தோர், பெற்றோர் போன்றோர் கூறும் அறிவுறைகளை அடக்கத்துடன் கேடு ஒழுகுதலே மிக்க நலம் பயக்கும்’ என்பது வெண்பா காட்டும் அறிவுரை.

தொல்காப்பியம் பெரியோர் நடுவே சினந்து கொள்ளுவதும், தன்னையே வியந்து கொள்ளும் செருக்கும் இன்றி தாழ்ந்து ஒழுகுதல் கடமை” என்று கேட்போன் உளம் கொள்ளுமாறு சொல்வதைச் செவியுறை எனக் கூறுகிறது.

செவியுறை தானே
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே- செய்யுளியல் 1371

பாடல்கள்

இத்துறைப் பாடல்கள் புறநானூற்றில் 8 உள்ளன.

  • பாண்டியன் அறிவுடை நம்பி செவியில் பிசிராந்தையார் கூறியது - புறநானூறு 184
    • வரியை இரக்க உணர்வோடு வாங்குக! விளைந்த நெல்லை அறுத்துச் சமைத்துக் கவளமாக யானைக்கு நல்கினால் பல நாள் கொடுக்கலாம். விளைச்சலில் யானை புகுந்து உண்டால் அஃது உண்பதைக் காட்டிலும் அதன் காலில் மிதிபட்டு அழியும் நெல் அதிகமல்லவா? உணர்ந்து வரி வாங்குக!

இலக்கணம்

அடிக்குறிப்புகள்

  1. ↑ தொல்காப்பியம், புறத்திணையியல், 87

இதர இணைப்புகள்


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2023, 08:26:22 IST