under review

தொகைநிலைச் செய்யுள்

From Tamil Wiki
Revision as of 10:52, 13 February 2022 by Subhasrees (talk | contribs) (தொகைநிலைச் செய்யுள் - முதல் வரைவு)

தொகைநிலைச் செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒருவராலோ அல்லது பலராலோ பல பாடல்களாக இயற்றப்பட்டு, பொருள், இடம், காலம், தொழில், பாட்டு, அளவு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒன்றாகத் தொகுக்கப்பட்டவை தொகை எனப்பெயர் பெற்ற செய்யுள்கள்.

ஒருவராலோ பலராலோ இயற்றப்படுவது தொகை என்பது பொதுவான இலக்கணம். பொருள் முதலியவற்றால் ஒத்திருந்து தொகை எனப் பெயர்பெறுவன என்பது சிறப்பிலக்கணம். இது தவிர பிறவற்றால்(எகா: சினை) தொகுக்கப்பட்டு தொகை எனப் பெயர் பெறும் நூல்களும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டு

இவற்றில் இனியவை நாற்பதும், திருவங்கமலையும் பண்பு, சினை என்ற பிறவற்றால் தொகுக்கப்பட்டதற்கு சான்றாகும்.

உசாத்துணை

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.