வரலாற்று வஞ்சி
From Tamil Wiki
Revision as of 11:32, 12 February 2022 by Subhasrees (talk | contribs) (வரலாற்று வஞ்சி - முதல் வரைவு)
வரலாற்று வஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்காக படை செல்லும் எழுச்சியை வஞ்சிப்பாவில் பாடுவது வரலாற்று வஞ்சி.[1]
இதில் படையின் ஆரவாரம், ஆற்றல் ஆகியவை வஞ்சிப்பாவில் பாடப்படும். [2] [3] [4][5]
கருவி நூல்கள்
குறிப்புகள்
- ↑ ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால் தூசிப் படையைச் சொல்வது தானை மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்; செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி; விரித்துஒரு பொருளை விளம்பின்அப் பெயராம். இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869
- ↑ வரலாற்று வஞ்சியே வனப்பு ஆற்றல் கல்வி மரபு குணம் குடி வஞ்சியால் வழுத்தலே - பிரபந்த தீபம் 44
- ↑ பார்த்துநற் குலமுறை பிறப்புமேம் பாட்டுடன் பலசிறப்புங் கீர்த்தியும் பதியவஞ் சிப்பாவி னாற்தொகுத் தேபுலவர் பகரின்வரலாற்று வஞ்சி பிரபந்த தீபிகை 15
- ↑ பிரபந்த மரபியல் 39
- ↑ விழுமிய குலமுறை பிறப்பு மேம்பாட்டின் பலசிறப் பிசையையும் வஞ்சிப்பாவால் வழுத்துதல் வரலாற்று வஞ்சியா மென்ப - முத்துவீரியம் - 1072
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.