பரிமேலழகர்
பரிமேலழகர், திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் முதன்மையானவர். இவர் பரிபாடலுக்கு உரை எழுதியுள்ளார். திருமுருகாற்றுப்படைக்கும் உரை எழுதியதாகக் கூறப்படுகிறது.
பிறந்த ஊர்
படிக்காசுப் புலவர் இயற்றிய தொண்டைமண்டல சதகத்தின் 16-ஆவது பாடல் இது:
"வள்ளற்சிலைப்பெரு மாணச்சர்சாத்தர் வழுதிமுதற்
றள்ளுவனார்க்குந்த் தலையான பேரையுந் தன்னுரையை
விள்ளுவனார்க்குத் திருக்காஞ்சி வாழ்பரி மேலழகன்
வள்ளுவனார்க்கு வழிகாட்டினான் றொண்டை மண்டலமே"
இந்தப் பாடல் மூலம் பரிமேலழகர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என அறியவருகிறது.
காலம்
தொல்காப்பியத்தில் இல்லாத, நன்னூல் குறிப்பிடும் "ஒரு பொருட் பன்மொழி" என்பதை பரிமேலழகர் தனது உரையில் பயன்படுத்துவதால் 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் எனக் கருதலாம்.
பரிமேலழகரது திருக்குறள் உரையில் இவருக்கு முன்னவர்களான காளிங்கர் மற்றும் இளம்பரிதியாரின் உரைகள் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களது காலம் 13- ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுவதால், பரிமேலழகரது காலம் 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என கருதப்படுகிறது. காஞ்சி அருளாளப் பெருமான் கோயில் கல்வெட்டு குறிப்பிடும் பரிமேலழகிய பெருமான் தாதரே திருக்குறளுக்கு உரைசெய்த பரிமேலழகர் என்பது அறிஞர் கருத்து. இதனால் பரிமேலழகர் காலம் 1271-ஆம் ஆண்டை ஒட்டியதாக இருக்கலாம்.
உரை எழுதிய நூல்கள்
உசாத்துணை
- பரிபாடல் மூலமும் பரிமேலழகர் இயற்றிய உரையும், உ.வே.சாமிநாதையர் பதிப்பு, 1918. ஆர்க்கைவ் தளம்
- தமிழ் இலக்கிய வரலாறு-பதிமூன்றாம் நூற்றாண்டு-தமிழ் மின்னூலகம்-
- தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, மு. அருணாசலம், (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005), சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம்.பக்கம் 42-68.
- திருக்குறள் - பரிமேலழகர் உரை, தமிழ் இணையக் கல்விக்கழகம்
- பரிமேலழகரின்றி வள்ளுவம் இல்லை, இந்திரா பார்த்தசாரதி, 2009
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.