under review

நேச நாயனார்

From Tamil Wiki
Revision as of 08:28, 26 August 2023 by Logamadevi (talk | contribs)
நேச நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

நேச நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நேச நாயனார், காம்பீலி என்ற ஊரில் வாழ்ந்தவர். சிவ பக்தர்.

சிவத்தொண்டு

நேச நாயனார், சிவனடியார்களிடம் மிகுந்த நேசம் கொண்டவராக இருந்தார். ஆடை நெசவு செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்த இவர், வாக்கினால் சிவநாமத்தைத் துதித்தும், மனத்தால் எப்பொழுதும் சிவனைச் சிந்தித்தும் வந்தார். தான் செய்துவந்த நெசவுத் தொழில் மூலம் சிவனடியார்களுக்கு ஆடை, கோவணம் போன்றவற்றை நெய்து அன்புடன் அளித்து வந்தார்.

இப்பணியை விடாது தம் இறுதிக்காலம் வரை செய்து சிவ பதம் அடைந்தார் என்று பெரிய புராணம் கூறுகிறது.

நேசனுக்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

நேச நாயனாரின் சிவத் தொண்டு

ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கி,
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப்
பாங்கு உடை உடையும் கீளும் பழுதுஇல் கோவணமும் நெய்வார்

நேச நாயனார், சிவபதம் பெற்றது

உடையொடு நல்ல கீளும் ஒப்பு இல் கோவணமும் நெய்து,
விடையவர் அடியார் வந்து வேண்டு மாறு ஈயும் ஆற்றால்
இடை அறாது அளித்து, நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி,
அடைவு உறு நலத்தர் ஆகி, அரன் அடி நீழல் சேர்ந்தார்

குரு பூஜை

நேச நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page