under review

செனோய்

From Tamil Wiki
Revision as of 12:03, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Pagan races of the Malay Peninsula (1906) (14594908837).jpg

தீபகற்ப மலேசியாவின் வகுக்கப்பட்ட மூன்று பழங்குடி இனக்குழுக்களுள் ஒன்று செனோய் பழங்குடி. இப்பழங்குடியில் ஆறு உட்பிரிவுகள் உள்ளன.

செனோய் உட்பிரிவுகள்

செனோய் பிரிவில் மொத்தம் ஆறு உட்பிரிவு பழங்குடியினர் உள்ளனர்.

  1. தெமியார் (Temiar),
  2. செமாய் (Semai),
  3. ஜா ஹூட் (Jah Hut),
  4. சே வோங் (Che Wong),
  5. செமோக் பேரி (Semoq Beri),
  6. மஹ் மேரி (Mah Meri)

மொழி

செனோய் பழங்குடியினரில் சே வோங் பிரிவினர் Northern Aslian குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுவர். தெமியார், செமாய், ஜா ஹூட் Central Aslian குடும்ப மொழிகளையும், செமொக் பேரி, மஹ் மேரி Southern Aslian குடும்பத்து மொழிகளையும் பேசுவர்.

பின்னனி

செனோய் பழங்குடியினர் மலாயா தீபகற்பத்திற்கு பொ.மு 8000 முதல் 6000 வரையான காலகட்டத்தில் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. செனோய் மக்களுக்கு முன்னரே குடியிருந்த நெக்ரிதோ பழங்குடியுடன் செனோய் பழங்குடி கலந்து வாழ்ந்து வந்திருக்கலாமென நம்பப்படுகிறது. செனோய் பழங்குடியினரின் மரபணு சோதனைகளிலிருந்து ஒரு பாதி நெக்ரீதோ பழங்குடியின மூதாதையர்களிடமிருந்தும், மறுபாதி இந்தோசீனா நாடுகளான கம்போடியா, வியட்நாமிலிருந்து இடம்பெயர்ந்தவர்களிருந்தும் வந்தவர்களென நம்பப்படுகிறது. செமாய் பழங்குடி 4000 வருடங்களுக்கு முன் தென்கிழக்காசியாவுக்கு தங்கள் மொழியுடனும் தொழில்நுட்பத்துடனும் குடிபுகுந்த ஆஸ்திரோ-ஆசிய மொழி பேசும் விவசாயிகளின் வழித்தோன்றல்கள். செனோய் பழங்குடியினர் ‘Mongoloid’ முக, உடல் தோற்றம் கொண்டவர்கள்.

வாழிடம்

நன்றி: jakoa.gov.my

செனோய் பழங்குடிகள் தீபகற்ப மலேசியாவின் நடுப் பகுதியில் வாழ்கின்றனர். அதில், பஹாங், திரங்கானு மாநிலங்கள் அடங்கும்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Jan-2023, 11:40:39 IST