வரலாற்று வஞ்சி

From Tamil Wiki
Revision as of 11:49, 12 February 2022 by Subhasrees (talk | contribs) (Formatting)

வரலாற்று வஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்காக படை செல்லும் எழுச்சியை வஞ்சிப்பாவில் பாடுவது வரலாற்று வஞ்சி.[1]

இதில் படையின் ஆரவாரம், ஆற்றல் ஆகியவை வஞ்சிப்பாவில் பாடப்படும்[2][3].

கருவி நூல்கள்

குறிப்புகள்

  1. ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
    தூசிப் படையைச் சொல்வது தானை
    மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
    ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;
    செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
    விரித்துஒரு பொருளை விளம்பின்அப் பெயராம்.

    இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869

  2. பிரபந்த மரபியல் 39
  3. விழுமிய குலமுறை பிறப்பு மேம்பாட்டின்
    பலசிறப் பிசையையும் வஞ்சிப்பாவால்
    வழுத்துதல் வரலாற்று வஞ்சியா மென்ப

    - முத்துவீரியம் - 1072

  4. வரலாற்று வஞ்சியே வனப்பு ஆற்றல் கல்வி
    மரபு குணம் குடி வஞ்சியால் வழுத்தலே 

    - பிரபந்த தீபம் 44

  5. பார்த்துநற் குலமுறை பிறப்புமேம் பாட்டுடன்
    பலசிறப்புங் கீர்த்தியும்
    பதியவஞ் சிப்பாவி னாற்தொகுத் தேபுலவர்
    பகரின்வரலாற்று வஞ்சி

    பிரபந்த தீபிகை 15

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்