இடைக்காடனார்: Difference between revisions
(Removed non-breaking space character) |
|||
Line 9: | Line 9: | ||
* [[புறநானூறு]] 42 | * [[புறநானூறு]] 42 | ||
இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் 9- இல் 7 [[முல்லைத் திணை|முல்லைத்திணை]]ப் பாடல்களாகவும், 2 [[பாலைத் திணை|பாலைத்திணைப்]] பாடல்களாகவும் உள்ளன. புறநானூறு பாடலில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைப் பாடியுள்ளார். | இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் 9- இல் 7 [[முல்லைத் திணை|முல்லைத்திணை]]ப் பாடல்களாகவும், 2 [[பாலைத் திணை|பாலைத்திணைப்]] பாடல்களாகவும் உள்ளன. புறநானூறு பாடலில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைப் பாடியுள்ளார். | ||
[[File:Muthay.jpg|thumb| [http://sangacholai.in/Essays-4.1.html மூதாய்(தம்பலப்) பூச்சி http://sangacholai.in/Essays-4.1.html]]] | |||
== பாடலால் அறியவரும் செய்திகள் == | == பாடலால் அறியவரும் செய்திகள் == | ||
காலை நேரம் வந்துவிட்டது. வெள்ளை முதுகும், திருகிய கொம்பும் கொண்ட ஆண் இரலை மான் குளிர்ந்த நல்ல நீரைப் பருகிவிட்டுப் புல்லை மேய்ந்த பின்னர் நீண்ட மணலில் பிடவ மரத்து நிழலில் தன் தன் பெண் துணைமானோடு வாழும் வேளை. | |||
மழைக்காலத்தில் அரக்கு நிறத்தில் ஈயல் மூதாய்ப் பூச்சிகள் பலவாகத் தோன்றிப் பாய் விரித்திருப்பது போல ஈர மண்ணில் மேய்கின்றன (அகம் 139).மூதாய்ப் பூச்சி தம்பலப் பூச்சி, இந்திர கோபம் எனவும் அழைக்கப்படும். மழைக்காலத்தில், ஈரமான இடங்களில் இவை படைபடையாக அடைந்திருக்கும். மருத்துவ குணம் கொண்டது. இதிலிருந்து தயாரிக்கும் எண்ணெய் முடக்குவாதத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது. | |||
===== அகநானூறு 194 ===== | ===== அகநானூறு 194 ===== | ||
* முல்லைத் திணை | * முல்லைத் திணை | ||
* பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. | * பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. | ||
* பெருமழை பொழிந்த பின் புலரும் விடியற்கால வேளையில் உழவர் ஏர் பூட்டி உழுவர். அவ்வாறு உழுது புறண்டு கிடக்கும் ஈரமுள்ள செம்புழுதி கிழித்த புண் போலத் தோன்றும். அதில் விதைத்த விதை முளைத்து வளரும் | * பெருமழை பொழிந்த பின் புலரும் விடியற்கால வேளையில் உழவர் ஏர் பூட்டி உழுவர். அவ்வாறு உழுது புறண்டு கிடக்கும் ஈரமுள்ள செம்புழுதி கிழித்த புண் போலத் தோன்றும். அதில் விதைத்த விதை முளைத்து வளரும் | ||
* கிளைக்கொம்பு கொண்ட இரலைமான் ஆங்காங்கே மேய்வது போல உழவர்கள் தலையில் குடையை மாட்டிக்கொண்டு பாடிக்கொண்டே களை வெட்டுவார்கள். | * கிளைக்கொம்பு கொண்ட இரலைமான் ஆங்காங்கே மேய்வது போல உழவர்கள் தலையில் குடையை மாட்டிக்கொண்டு பாடிக்கொண்டே களை வெட்டுவார்கள். | ||
* களை எடுத்த வரகு கதிர் வாங்கும். அதனை, தலையில் குடுமி கொண்ட மயில் தன் தோகையை விரித்துக்கொண்டு மேயும். | * களை எடுத்த வரகு கதிர் வாங்கும். அதனை, தலையில் குடுமி கொண்ட மயில் தன் தோகையை விரித்துக்கொண்டு மேயும். | ||
Line 64: | Line 63: | ||
* தோழி, இது (அவர் மீள்வதாகச் சொன்ன) கார் காலம் அன்று. பழைய நீர் புதுநீர் ஆவதற்கு அவற்றின் அயலதான வானம் முழங்குகிறது. அதனை கேட்டு மயில் கூட்டம் முன்பு பெய்த மழையை எண்ணி மடத்தனமாக ஆடவும் செய்கின்றன. பிடவம் பூக்களும் பூத்துவிட்டன. | * தோழி, இது (அவர் மீள்வதாகச் சொன்ன) கார் காலம் அன்று. பழைய நீர் புதுநீர் ஆவதற்கு அவற்றின் அயலதான வானம் முழங்குகிறது. அதனை கேட்டு மயில் கூட்டம் முன்பு பெய்த மழையை எண்ணி மடத்தனமாக ஆடவும் செய்கின்றன. பிடவம் பூக்களும் பூத்துவிட்டன. | ||
===== நற்றிணை 142 ===== | ===== நற்றிணை 142 ===== | ||
முல்லைத் திணை | |||
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. | |||
வானமே இடிந்து விழுவது போல மழை பொழிந்திருக்கும் கடைசி நாள். | |||
தொங்கல் கயிற்றின் காலில் பண்ணிய முடிச்சுடன் கூடிய உறி, தோல் பையில் தீ மூட்டும் ஞெலிகோல், முதுகில் பால் பானை ஆகியவற்றுடன் சென்ற இடையன் பால் விற்று மீள்கிறான். | |||
தூறல் மழையின் திவலைகள் அவனை நனைத்துக் கொண்டிருக்கின்றன. கையிலிருக்கும் ஊன்றுகோலில் ஒடுங்கிக்கொண்டு அவன் நிற்கிறான். வாயிலே ‘மடி’ ஒலி எழுப்புகிறான். | |||
ஆட்டு மந்தை பாதுகாப்பாக அவனிடம் நிற்கின்றது. பொய்யாத புது வருவாய் (யாணர்) உடையவன் அவன். | |||
அவன் இருக்கும் முல்லை நிலந்தான் என் குறுமகள் இருக்கும் ஊர். | |||
===== நற்றிணை 316 ===== | ===== நற்றிணை 316 ===== | ||
* முல்லைத் திணை | * முல்லைத் திணை | ||
Line 91: | Line 97: | ||
== பாடல்நடை == | == பாடல்நடை == | ||
===== அகநானூறு 139 ===== | ===== அகநானூறு 139 ===== | ||
<poem> | [[பாலைத் திணை]] பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது<poem> | ||
துஞ்சுவது போல இருளி, விண் பக | துஞ்சுவது போல இருளி, விண் பக | ||
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு | இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு | ||
Line 111: | Line 117: | ||
கருவிக் கார்இடி இரீஇய | கருவிக் கார்இடி இரீஇய | ||
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே | பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே | ||
</poem> | </poem>(தூங்குவது போல் இருட்டு. விழிப்பது போல் வானத்தைப் பிளக்கும் மின்னல். மழையைத் தூக்கிக்கொண்டு ஏறும் மேகங்கள் நெஞ்சு நடுங்க ஓயாமல் முழங்கும் இடி. இப்படி மழை பொழிந்த கடைசி நாள்.மழையைக் கொட்டித் தீர்த்துவிட்டதால் மேகங்கள் வெள்ளையாகி மலையில் வைகறை நேரத்தில் உலாவுகின்றன. காலை நேரம் வந்துவிட்டது. வெள்ளை முதுகும், திருகிய கொம்பும் கொண்ட ஆண் இரலை மான் குளிர்ந்த நல்ல நீரைப் பருகிவிட்டுப் புல்லை மேய்ந்த பின்னர் நீண்ட மணலில் பிடவ மரத்து நிழலில் தன் தன் பெண் துணைமானோடு வாழும் வேளை.அரக்கு நிறத்தில் ஈயல் மூதாய்ப் பூச்சிகள் பலவாகத் தோன்றிப் பாய் விரித்திருப்பது போல ஈர மண்ணில் மேய்கின்றன. | ||
தோழி! அவர் இன்னும் வரவில்லை. அப்படி என்றால் அவர் திரும்பிவிடுவேன் என்று சொன்னது இடி முழங்கும் இந்தக் கார் காலம் இல்லையா?) | |||
===== நற்றிணை 142 ===== | ===== நற்றிணை 142 ===== | ||
<poem> | [[முல்லைத் திணை]] வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.<poem> | ||
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள், | வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள், | ||
பாணி கொண்ட பல் கால் மெல் உறி | பாணி கொண்ட பல் கால் மெல் உறி | ||
Line 125: | Line 135: | ||
முல்லை சான்ற கற்பின், | முல்லை சான்ற கற்பின், | ||
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே. | மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே. | ||
</poem> | </poem>(வானமே இடிந்து விழுவது போல மழை பொழிந்திருக்கும் கடைசி நாள். தொங்கல் கயிற்றின் காலில் பண்ணிய முடிச்சுடன் கூடிய உறி, தோல் பையில் தீ மூட்டும் ஞெலிகோல், முதுகில் பால் பானை ஆகியவற்றுடன் சென்ற இடையன் பால் விற்று மீள்கிறான். தூறல் மழையின் திவலைகள் அவனை நனைத்துக் கொண்டிருக்கின்றன. கையிலிருக்கும் ஊன்றுகோலில் ஒடுங்கிக்கொண்டு அவன் நிற்கிறான். வாயிலே ‘மடி’ ஒலி எழுப்புகிறான். ஆட்டு மந்தை பாதுகாப்பாக அவனிடம் நிற்கின்றது. பொய்யாத புது வருவாய் (யாணர்) உடையவன் அவன். அவன் இருக்கும் முல்லை நிலந்தான் என் குறுமகள் இருக்கும் ஊர்.) | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(01).pdf சங்கத் தமிழ் புலவர் வரிசை, புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்] | * [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(01).pdf சங்கத் தமிழ் புலவர் வரிசை, புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்] |
Revision as of 05:11, 27 January 2023
இடைக்காடனார், சங்க காலப் புலவர்களுள் ஒருவர். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இடைக்காடனார் பாடிய பாடல்களாகப் பத்துப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
இடைக்காடனார், இடைக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முல்லைத் திணைப் பாடல்களைக் கூடுதலாகப் பாடியிருப்பதனால், இடைக்காடனார் ஆயர் குலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். "இடைக்காடர் ஊசிமுறி" என்னும் நூல் இவர் பெயரால் வழங்கப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
சங்கத் தொகை நூல்களில் இடைக்காடனார் பாடிய பாடல்களாகப் பத்துப் பாடல்கள் உள்ளன. அவை:
- அகநானூறு 139, 194, 274, 284, 304, 374
- குறுந்தொகை 251
- நற்றிணை 142, 316
- புறநானூறு 42
இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் 9- இல் 7 முல்லைத்திணைப் பாடல்களாகவும், 2 பாலைத்திணைப் பாடல்களாகவும் உள்ளன. புறநானூறு பாடலில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைப் பாடியுள்ளார்.
பாடலால் அறியவரும் செய்திகள்
காலை நேரம் வந்துவிட்டது. வெள்ளை முதுகும், திருகிய கொம்பும் கொண்ட ஆண் இரலை மான் குளிர்ந்த நல்ல நீரைப் பருகிவிட்டுப் புல்லை மேய்ந்த பின்னர் நீண்ட மணலில் பிடவ மரத்து நிழலில் தன் தன் பெண் துணைமானோடு வாழும் வேளை.
மழைக்காலத்தில் அரக்கு நிறத்தில் ஈயல் மூதாய்ப் பூச்சிகள் பலவாகத் தோன்றிப் பாய் விரித்திருப்பது போல ஈர மண்ணில் மேய்கின்றன (அகம் 139).மூதாய்ப் பூச்சி தம்பலப் பூச்சி, இந்திர கோபம் எனவும் அழைக்கப்படும். மழைக்காலத்தில், ஈரமான இடங்களில் இவை படைபடையாக அடைந்திருக்கும். மருத்துவ குணம் கொண்டது. இதிலிருந்து தயாரிக்கும் எண்ணெய் முடக்குவாதத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது.
அகநானூறு 194
- முல்லைத் திணை
- பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது.
- பெருமழை பொழிந்த பின் புலரும் விடியற்கால வேளையில் உழவர் ஏர் பூட்டி உழுவர். அவ்வாறு உழுது புறண்டு கிடக்கும் ஈரமுள்ள செம்புழுதி கிழித்த புண் போலத் தோன்றும். அதில் விதைத்த விதை முளைத்து வளரும்
- கிளைக்கொம்பு கொண்ட இரலைமான் ஆங்காங்கே மேய்வது போல உழவர்கள் தலையில் குடையை மாட்டிக்கொண்டு பாடிக்கொண்டே களை வெட்டுவார்கள்.
- களை எடுத்த வரகு கதிர் வாங்கும். அதனை, தலையில் குடுமி கொண்ட மயில் தன் தோகையை விரித்துக்கொண்டு மேயும்.
- பின்னர் அந்த மயில் வலிமையான இலைகளைக் கொண்ட குருந்த மரத்தில் ஏறி இருந்துகொண்டு, கிளியோட்டும் மகளிர் பாடுவது போலக் குரல் எழுப்பி அகவும். இப்படி மயில் அகவும் கார் காலம் இது அல்லவா தோழி!
- போரை முடித்துக்கொண்டு தேரில் ஏறிக் குதிரையை முடுக்கிக்கொண்டு வந்துவிடுவேன் என்று நம்மிடம் சொல்லிச் சென்றாரே அந்தக் கார்காலம் இது அல்லவா, தோழி?
அகநானூறு 274
- முல்லைத் திணை
- தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது
- வானம் இடி முழங்கிப் பெருமழை பொழியும் நள்ளிரவு. தலையை ஆட்டும் செம்மறி ஆடுகள் பாதுகாப்பாக இருப்பதற்காக இடையன் அவற்றுடன் தனியே நிற்கிறான்.
- தீக்கடைக்கோலில் மூட்டிய தீ அவனது தொங்கும் பந்தத்தில் எரிந்துகொண்டிருக்கிறது. பால் பானை, அதனைத் தாங்கும் வலிமையான கயிற்றால் கட்டிய உறி, நனையாமல் ஒருபக்கம் போர்த்தியிருக்கும் தோல், ஒருபக்கம் வீசும் நீர்த் திவலைகளில் நனையும் உடல், கையில் ஊன்றுகோல் ஆகியவற்றுடன் நிற்கிறான்.
- கைவிரலை மடித்து வாயில் வைத்து ஒலி எழுப்புகிறான். அந்த ஒலியைக் கேட்டு குட்டிகளைப் பிடிக்க வரும் குள்ளநரிக் கூட்டம் பயந்து முள்ளுக்காட்டில் பாய்தோடுகிறது.
- இப்படிப்பட்ட முல்லை நிலத்தில்தான் என் குறுமகள் வாழும் ஊர் இருக்கிறது.
அகநானூறு 284
- முல்லைத் திணை
- வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது
- தோற்றத்தில் சிறிய இலை கொண்ட நெல்லிக்காய் போன்ற கண் கொண்ட முயல், முடம் பட்டு விளைந்திருக்கும் வரகின் கதிரை உண்ணும்.
- தண்ணீர் உண்ணும் குடங்கை, போன்ற தன் காது வளையாமல் கொடிப் புதருக்குள் ஒடுங்கி உறங்கும். பின் எழுந்து தன் துணைமுயலுடன் காட்டுமுற்றத்தில் கொஞ்சமாகத் தெளிந்திருக்கும் நீரைக் கண்டறிந்து உண்ணும்.
- இதுபோன்ற முல்லைநிலம் தருவிய ஊர் சிறுகுடி.
- கற்பாறைகள் நிறைந்த ஊரின் சிறுகுடியில் வாழும் மறவர் தினையரிசியில் காய்ச்சிய கள்ளை உண்பர்.
- கையில் தெறிகோல், விசைகொண்ட வில் ஆகியவற்றோடு வேட்டைக்குச் சென்று முல்லைக் காட்டில் மானைத் தேடுவர்.
- அவர்கள் வாழும் இடந்தான் என் காதலி வாழும் ஊர்.
அகநானூறு 304
- முல்லைத் திணை
- பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
- மேகம் வானத்தை மூடி மழை பொழிகிறது. நீர் நிறைந்த நுங்கு போலவும், பேயின் கண்ணீர்த் துளிகள் போலவும் மழைக் கட்டிகள் நீரில் விழுந்து மிதக்கின்றன.
- பெருமழை நின்று மழைத் தூறல் விழுகிறது. வைகறை முடிந்து விடிந்துகொண்டிருக்கும் காலம்.
- செந்நிற மணல் தெரியும்படி தெளிந்து ஓடும் நீரைப் பருகிய பெண்மான் தன் குட்டியையும், ஆண்மானையும் தழுவிக்கொண்டு, குருந்த மரத்தடியில் தங்கியிருக்கிறது.
- வண்டுகள் ஊதுவதால் பிடவம் பூக்கள் மலர்கின்றன. மயில்கள் ஆடுகின்றன. மணிக்கற்களோடு கலந்துகிடக்கும் பவளக் கற்கள் போல காயாம் பூக்கள் அழகுடன் பூத்துக் கிடக்கின்றன. வானில் ஈசலும் தரையில் மூதாய்ப் பூச்சிகளும் நிறைந்து செல்கின்றன.
- “இப்படி நிலமெல்லாம் அழகுடன் திகழும் கார் காலத்தில் அவர் போர்ப்பாசறையில் வேந்தனின் வினையைத் தான் மேற்கொண்டிருக்கிறார். எனக்கு அருள் புரியாத அவர் அறநெறியாளர் அல்லர்” என்று என்னோடு பிணக்குப் போட்டுக்கொண்டு என் மாயவள் நொந்துகொண்டிருப்பாளோ?
அகநானூறு 374
- முல்லைத் திணை
- பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது
- கடலில் நீரை முகந்து சென்று, திசைகள் இருளும்படி, நிலம் தெரியாதபடி நீர் ஓடுமாறு, சுழன்று துன்புற்று, மேகம் பிளப்பது போல் பலவாறு மின்னி, தாழ்ந்து பணிவது போல நிலத்தருகில் வந்து, சோர்ந்துவிட்டது போல இடி முழக்கம் இல்லாமல் மழை பொழிகிறது.
- பாணர் யாழிசை போன்ற ஒலியுடன் மழை பொழிகிறது.
- மழை பொழிந்து நின்ற விடியற் காலத்தில் மணல் மேடுகளில் மூதாய்ப் பூச்சிகள் குறு குறுவென ஓடுகின்றன.
- நீலமணியும் பவளமணியும் போலக் கொட்டிக் கிடக்கும் காயாம் பூக்களுக்கு இடையில் மூதாய்ப் பூச்சிகள் ஓடுகின்றன. இப்படி கார்காலம் செம்மாந்த பொலிவுடன் தோன்றுகிறது.
- இப்போது அந்தக் கார்காலத்தின் மாலைக் காலம். தேரோட்டுவதில் தேர்ச்சி பெற்றவனே, நம் தேர் செல்லட்டும்.
- பருத்த தோளும், சிறுத்த இடையும், திருந்திய அணிகலனும் கொண்ட காதல் மனைவி நம் விருந்தைப் பெறட்டும்.
குறுந்தொகை 251
- முல்லைத் திணை
- இது கார்காலமன்று; இப்பொழுது பெய்வது காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழை" என்று தோழி வற்புறுத்திக் கூறி ஆற்று வித்தது.
- தோழி, இது (அவர் மீள்வதாகச் சொன்ன) கார் காலம் அன்று. பழைய நீர் புதுநீர் ஆவதற்கு அவற்றின் அயலதான வானம் முழங்குகிறது. அதனை கேட்டு மயில் கூட்டம் முன்பு பெய்த மழையை எண்ணி மடத்தனமாக ஆடவும் செய்கின்றன. பிடவம் பூக்களும் பூத்துவிட்டன.
நற்றிணை 142
முல்லைத் திணை
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
வானமே இடிந்து விழுவது போல மழை பொழிந்திருக்கும் கடைசி நாள்.
தொங்கல் கயிற்றின் காலில் பண்ணிய முடிச்சுடன் கூடிய உறி, தோல் பையில் தீ மூட்டும் ஞெலிகோல், முதுகில் பால் பானை ஆகியவற்றுடன் சென்ற இடையன் பால் விற்று மீள்கிறான்.
தூறல் மழையின் திவலைகள் அவனை நனைத்துக் கொண்டிருக்கின்றன. கையிலிருக்கும் ஊன்றுகோலில் ஒடுங்கிக்கொண்டு அவன் நிற்கிறான். வாயிலே ‘மடி’ ஒலி எழுப்புகிறான்.
ஆட்டு மந்தை பாதுகாப்பாக அவனிடம் நிற்கின்றது. பொய்யாத புது வருவாய் (யாணர்) உடையவன் அவன்.
அவன் இருக்கும் முல்லை நிலந்தான் என் குறுமகள் இருக்கும் ஊர்.
நற்றிணை 316
- முல்லைத் திணை
- பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது
- இந்தக் கருநிற மழைமேகம் மௌவல் மலரைப் பூக்கச்செய்து தன் அழகை வரவழைத்துக்கொண்டு தன் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
- கயல்மீன் போன்ற கண்ணும், கனத்த காதுக்குழையும் கொண்டவளே! இந்தப் பூக்கள் உன் பற்கள் விரிவது போல் காணப்படுகின்றன என்று உன் நெற்றியை நீவிக்கொண்டு சொன்னவர் சென்றுவிட்டார்.
- அவர் உன்னை நயந்து திரும்பி வருவதற்கு முன்பாகவே மலையடுக்கம் புதையும்படி மழைக்கால் இறக்கி, மழை பொழிந்துகொண்டு பரந்த வெளியில் இடி முழங்குகிறது.
புறநானூறு 42
- திணை வாகை
- துறை அரசவாகை
- பாடப்பட்ட மன்னன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
- இடைவிடாத கொடையும், போருமாகவே இருக்கும் தலைவ! உன் யானையோ மலை போல் உள்ளது. உன் படையோ கடல் போல் முழங்குகிறது. உன் வேலோ மின்னிக்கொண்டே இருக்கிறது. இதனால் உலகின் அரசர்களெல்லாம் நடுங்குகின்றனர்.
- இது குற்றமற்ற செயல் அன்று.
- இது உனக்குப் புதியதும் அன்று. உன் நாட்டில் ஆற்றுநீர் மோதல் அன்றிப் பிற மோதல் இல்லாமல் களைந்தெறிவாயாக.
- போர்ப் பூசல் கனவிலும் இல்லாமல் புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போல நாட்டில் செங்கோலாட்சி புரிவாயாக.
- புன்செய் நில நாட்டின்மீது (பாண்டிய நாட்டின்மீது) போர் தொடுக்க வேண்டாம். உன் நாடு வளமான நாடு.
- இதன் மடைநீரில் அரித்து நீ கொள்ளும் வாளை, உழும்போது புரளும் ஆமை, கரும்பில் தொடுத்திருக்கும் தேன், துறையில் மகளிர் பறித்த குவளை ஆகியவற்றை புன்செய் நில மக்களுக்கு விருந்தாகத் தருபவர்கள் உன் நாட்டு மக்கள். அந்த நாட்டின்மீது நீ போர் தொடுக்கிறாய்.
- மலையிலிருந்து நிலத்தில் பாயும் ஆறு போலப் புலவர்கள் உன்னை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.
- நீயோ கூற்றுவன் போல இருபெரு வேந்தர்களின் மண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்
பாடல்நடை
அகநானூறு 139
பாலைத் திணை பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
துஞ்சுவது போல இருளி, விண் பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்;
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை;
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவைபோற் பாஅய், பல உடன்
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ;
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்!
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே
(தூங்குவது போல் இருட்டு. விழிப்பது போல் வானத்தைப் பிளக்கும் மின்னல். மழையைத் தூக்கிக்கொண்டு ஏறும் மேகங்கள் நெஞ்சு நடுங்க ஓயாமல் முழங்கும் இடி. இப்படி மழை பொழிந்த கடைசி நாள்.மழையைக் கொட்டித் தீர்த்துவிட்டதால் மேகங்கள் வெள்ளையாகி மலையில் வைகறை நேரத்தில் உலாவுகின்றன. காலை நேரம் வந்துவிட்டது. வெள்ளை முதுகும், திருகிய கொம்பும் கொண்ட ஆண் இரலை மான் குளிர்ந்த நல்ல நீரைப் பருகிவிட்டுப் புல்லை மேய்ந்த பின்னர் நீண்ட மணலில் பிடவ மரத்து நிழலில் தன் தன் பெண் துணைமானோடு வாழும் வேளை.அரக்கு நிறத்தில் ஈயல் மூதாய்ப் பூச்சிகள் பலவாகத் தோன்றிப் பாய் விரித்திருப்பது போல ஈர மண்ணில் மேய்கின்றன.
தோழி! அவர் இன்னும் வரவில்லை. அப்படி என்றால் அவர் திரும்பிவிடுவேன் என்று சொன்னது இடி முழங்கும் இந்தக் கார் காலம் இல்லையா?)
நற்றிணை 142
முல்லைத் திணை வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே- பொய்யா யாணர்,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,
முல்லை சான்ற கற்பின்,
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.
(வானமே இடிந்து விழுவது போல மழை பொழிந்திருக்கும் கடைசி நாள். தொங்கல் கயிற்றின் காலில் பண்ணிய முடிச்சுடன் கூடிய உறி, தோல் பையில் தீ மூட்டும் ஞெலிகோல், முதுகில் பால் பானை ஆகியவற்றுடன் சென்ற இடையன் பால் விற்று மீள்கிறான். தூறல் மழையின் திவலைகள் அவனை நனைத்துக் கொண்டிருக்கின்றன. கையிலிருக்கும் ஊன்றுகோலில் ஒடுங்கிக்கொண்டு அவன் நிற்கிறான். வாயிலே ‘மடி’ ஒலி எழுப்புகிறான். ஆட்டு மந்தை பாதுகாப்பாக அவனிடம் நிற்கின்றது. பொய்யாத புது வருவாய் (யாணர்) உடையவன் அவன். அவன் இருக்கும் முல்லை நிலந்தான் என் குறுமகள் இருக்கும் ஊர்.)
உசாத்துணை
- சங்கத் தமிழ் புலவர் வரிசை, புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- அகநானூறு 139, தமிழ்த்துளி இணையதளம்
- அகநானூறு 194, தமிழ்த்துளி இணையதளம்
- அகநானூறு 274, தமிழ்த்துளி இணையதளம்
- அகநானூறு 284, தமிழ்த்துளி இணையதளம்
- அகநானூறு 304, தமிழ்த்துளி இணையதளம்
- அகநானூறு 374, தமிழ்த்துளி இணையதளம்
- குறுந்தொகை 251;, தமிழ் சுரங்கம் இணையதளம்
- நற்றிணை 142, தமிழ்த்துளி இணையதளம்
- நற்றிணை 316, தமிழ்த்துளி இணையதளம்
- புறநானூறு 42, தமிழ்த்துளி இணையதளம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.