being created

காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இயற்பெயர் மறைந்து, சிறப்புப் பெயரே பலருக்கு இயல்பாகவே அமைந்துவிடுகின்றது. அப்பட்டிப்பட்ட சங்காலப் புலவர்களுள் நச்செள்ளையாரும் ஒருவர். 6-ஆம் பத்துப் பதிகத்தி னிறுதியில், ‘யாத்த செய்யுளடங்கிய கொள்கைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார்‘
இயற்பெயர் மறைந்து, சிறப்புப் பெயரே பலருக்கு இயல்பாகவே அமைந்துவிடுகின்றது. அப்பட்டிப்பட்ட சங்காலப் புலவர்களுள் நச்செள்ளையாரும் ஒருவர். பதிற்றுப்பத்தின் 6-ஆம் பத்துப் பதிகத்தில் ‘யாத்த செய்யுளடங்கிய கொள்கைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார்‘ என்பதால் இவர் பெண்பாற்புலர் என்பது தெ ளிவாகிறது என  [[ரா.ராகவையங்கார்|ரா. ராகவையங்கார்]] குறிப்பிடுகிறார்<ref>[http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ நச்செள்ளையாரும் பிறரும்-இரா இராகவையங்கார்]</ref>.


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
Line 71: Line 71:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://rssairam.blogspot.com/2013/02/blog-post_5917.html]
[https://rssairam.blogspot.com/2013/02/blog-post_5917.html]
[https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/nov/03/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3269915.html மாகூர் திங்களும் சேரலாதனும்,  தினமணி , நவம்பர் 2019]





Revision as of 06:42, 29 December 2022

காக்கைபாடினியார் நச்செள்ளையார் கடைச்சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் இயற்றிய 12 பாடல்கள் எட்டுத்தொகை நூல்களில் உள்ளன. கரைந்து தலைவனின் வரவை அறிவித்த காக்கையைப் பாடியதால் 'காக்கைபாடினியார்' என சிறப்புப் பெயர் பெற்றார். தன் மகன் போரில் வீர மரணம் அடைந்ததைக்கேட்டு ஈன்ற பொழுதினும் மகிழ்ந்த தாயைப் பாடிய புறநானூற்றுப் பாடலும் புகழ்பெற்றது.

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் மறைந்து, சிறப்புப் பெயரே பலருக்கு இயல்பாகவே அமைந்துவிடுகின்றது. அப்பட்டிப்பட்ட சங்காலப் புலவர்களுள் நச்செள்ளையாரும் ஒருவர். பதிற்றுப்பத்தின் 6-ஆம் பத்துப் பதிகத்தில் ‘யாத்த செய்யுளடங்கிய கொள்கைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார்‘ என்பதால் இவர் பெண்பாற்புலர் என்பது தெ ளிவாகிறது என ரா. ராகவையங்கார் குறிப்பிடுகிறார்[1].

இலக்கிய வாழ்க்கை

நச்செள்ளையார் பதிற்றுப்பத்தில்ஆறாம் பத்தில், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் மன்னனைப் பற்றி பத்துப் பாடல்கள் பாடி தொள்ளாயிரம் பலம் பொன்னும், நூறாயிரம் பொற்காசுகளும் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.. பதிற்றுப்பத்தில் பாடியுள்ள ஒரே பெண்பாற்புலவர் இவரே.

பொருளீட்டப் பிரிந்து சென்ற தலைவன், தன் மனைவி பிரிவினால் உருகி இளைத்து, துயருற்று இருப்பாள் என எண்னி திரும்பி வருகிறான். தலைவி மலர்ச்சியுடன் இருப்பதைப்பார்த்து அவளைக் கவனித்துக்கொண்டதற்காக நன்றி சொல்கிறான். தலைவி தன் முற்றத்தில் காக்கை கரைந்ததால் சென்றவர் வருவர் என உறுதி கொண்டு, உடல் பூரித்தாள். உன் நன்றிக்குரியது காக்கையே எனத் தோழியின் கூற்றாக குறுந்தொகையில் (210) காக்கையைப் பாடியதால் காக்கைபாடினியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

புறநானூற்றில்(278) தன் மகன் போரில் புறமுதுகிட்டான் என்ற செய்தி உண்மையானால் அவன் பாலுண்ட முலைகளை அறுத்தெறிவேன் என்ற அன்னை அவன் வீரமரணம் அடைந்ததைக்கண்டு 'ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே'

பாடலின் வழி அறிய வரும் செய்திகள்

  • காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் சங்க காலம் தொட்டு நிலவியது.
  • போரில் புறமுதுகிடல் மிகவும் இழிவாகக் கருதப்பட்டது. புறமுதுகிட்டவனை தாயும் வேண்டாள். வீர மரணம் போற்றப்பட்டது.
  • துணங்கைக் கூத்து ஆடல் வழக்கத்தில் இருந்தது. மன்னனும் மக்களுடன் கைகோர்த்து கூத்தில் பங்குகொண்டான்





பாடல் நடை

திண்தேர் நள்ளிகானத்து அண்டர்

பல்ஆ பயந்த நெய்யில், தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு

எழுகலத்து ஏந்தினும் சிறிது; என்தோழி

பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே


புறநானூறு

நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

முளரி மருங்கின் முதியோள் சிறுவன்

படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற

மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்

முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்

செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய

படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே.

(நரம்புகள் தோன்றிய, வற்றிய மெலிந்த தோள்களையும், தாமரை இலை போன்ற வயிற்றையும் உடைய முதியவளிடம், அவள் மகன் பகைவரின் படையைக் கண்டு நிலைகுலைந்து, புறமுதுகு காட்டி இறந்தான் என்று பலரும் கூறினர். அதைக் கேட்ட அத்தாய், தீவிரமாக நடைபெற்ற போரைக்கண்டு அஞ்சி என் மகன் தோற்றோடி இறந்தது உண்மையானால், அவன் பால் உண்ட என் முலைகளை அறுத்திடுவேன் என்று, வாளைக் கையிலேந்திப் போர்களத்திற்குச் சென்றாள். அங்கே, குருதி தோய்ந்த போர்க்களத்தில், கீழே விழுந்து கிடந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துத், தன் மகனின் உடலைத் தேடினாள். சிதைந்து பலதுண்டுகளாகிய விழுப்புண்பட்ட அவன் உடலைக் கண்டு, அவனைப் பெற்ற பொழுது அடைந்ததைவிட பெருமகிழ்ச்சி அடைந்தாள்.)






உசாத்துணை

[1]

மாகூர் திங்களும் சேரலாதனும், தினமணி , நவம்பர் 2019






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.