பாரதி மகாகவியா விவாதம்: Difference between revisions
(Created page with "பாரதி மகாகவியா விவாதம் ==தொடக்கம் == 1935ல் காரைக்குடியில் பாரதிவிழாவில் பேசிய வ.ராமசாமி ஐயங்கார் 'பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு ஷேக்ஸ்பியரோ ஷெல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று ப...") |
No edit summary |
||
| Line 13: | Line 13: | ||
இச்சூழலில் [[பி.எஸ். ராமையா]] 13 டிசம்பர் 1935 இதழில் கல்கியை கோழை என வசைபாடி ஒரு கட்டுரையை எழுதினார். புதுமைப்பித்தனும் புனைபெயரில் கல்கியை கடுமையாக வசைபாடி எழுதினார். 21 டிசம்பர் 1935 தினமணியில் சிட்டி விரிவான இன்னொரு கட்டுரையை எழுதினார். 21 டிசம்பர் 1935 தினமணி இதழில் இளங்கோவன் கல்கியின் எழுத்து ஆபாசமானது என கண்டித்து எழுதினார். 28 டிசம்பர் 1936 சுதேசமித்திரனில் சிட்டி மீண்டும் ஒரு நீண்ட அழகியல்கோட்பாட்டுக் கட்டுரையை எழுதினார். | இச்சூழலில் [[பி.எஸ். ராமையா]] 13 டிசம்பர் 1935 இதழில் கல்கியை கோழை என வசைபாடி ஒரு கட்டுரையை எழுதினார். புதுமைப்பித்தனும் புனைபெயரில் கல்கியை கடுமையாக வசைபாடி எழுதினார். 21 டிசம்பர் 1935 தினமணியில் சிட்டி விரிவான இன்னொரு கட்டுரையை எழுதினார். 21 டிசம்பர் 1935 தினமணி இதழில் இளங்கோவன் கல்கியின் எழுத்து ஆபாசமானது என கண்டித்து எழுதினார். 28 டிசம்பர் 1936 சுதேசமித்திரனில் சிட்டி மீண்டும் ஒரு நீண்ட அழகியல்கோட்பாட்டுக் கட்டுரையை எழுதினார். | ||
== நீட்சி == | |||
======ஏற்பு====== | |||
1944ல் பாரதி மகாகவியா என்னும் விவாதம் எழுந்த பின்னர் வ.ரா பாரதியின் வாழ்க்கை வரலாற்றை மகாகவி பாரதியார் என்னும் தலைப்பில் எழுதினார், சக்தி காரியாலயம் அதை வெளியிட்டது. | |||
1948ல் [[சி.என். அண்ணாத்துரை]] மகாகவி பாரதியார் என்னும் நூலை எழுதினார். சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் சார்ந்த சூழலில் பாரதியார் ஒரு பிராமணக்கவிஞர், ஆரிய ஆதரவாளர் என்னும் உளப்பதிவு இருந்த காலகட்டத்தில் இந்நூல் அந்தத் தரப்பினருக்கும் பாரதியை ஏற்புடையவர் ஆக்கியது. | |||
1964ல் பாரதிக்கு தன் சொற்பொழிவுகள் வழியாக முற்போக்கு இலக்கியச் சூழலில் மதிப்பை உருவாக்கிய [[ப. ஜீவானந்தம்]] பாரதி மகாகவியே என்னும் தரப்பை ஏற்றவர். அவர் எழுதிய பாரதி வழி என்னும் நூல் வெளிவந்தது. | |||
1982ல் [[ந. சுப்புரெட்டியார்]] கண்ணன் என் கவி நூலின் கருத்தை ஒட்டியே கண்ணன் பாட்டுத்திறன் என்னும் நூலை வெளியிட்டார். பாரதி நூற்றாண்டு 1982ல் வந்ததை ஒட்டி பாரதி மகாகவியே என்னும் நோக்கில் எழுதப்பட்ட மேலும் பல நூல்கள் வெளிவந்தன. | |||
[[கார்த்திகேசு சிவத்தம்பி]] - [[அ. மார்க்ஸ்]] இணைந்து எழுதிய 'பாரதி - மறைவு முதல் மகாகவி வரை' என்ற நூல் (1982) பாரதி மகாகவியா என்னும் விவாதத்தையும், அதன்பின் உருவான மாற்றங்களையும் விரிவாக மதிப்பிடுகிறது. | |||
[[ஞானி]] பாரதி மகாகவியே என்னும் கோணத்தில் எழுதிய பாரதியின் கவித்துவம் என்னும் நூல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. | |||
======மறுப்பு====== | |||
நவீன இலக்கியச் சூழலில் பாரதியின் கவிதைகளின் இடம் மறுபரிசீலனைக்கு உள்ளாகியது. | |||
1958 ல் [[க.நா.சுப்ரமணியம்]] கவிதைகள் குறித்த விவாதத்தில் பாரதியின் மழை போன்ற சில கவிதைகளைக் குறிப்பிட்டு அக்கவிதைகளுக்கு நிகரான நல்ல கவிதைகளை அவர் அதிகமும் எழுதிவிடவில்லை என்றும், பெரும்பாலானவை இசைப்பாடல்களும் தோத்திரப்பாடல்களுமே என்று கருத்துரைத்தார். | |||
1958ல் சுந்தர ராமசாமி எழுதிய நான் காணும் பாரதி என்னும் கட்டுரையில் பாரதியின் கவிதைகளின் இடத்தை மறுத்து, பாரதியின் பங்களிப்பு தமிழ் உரைநடையை உருவாக்கியதிலேயே அவருடைய முதன்மைப் பங்களிப்பு உள்ளது என்றார். | |||
2011 ல் [[ஜெயமோகன்]] மகாகவி என்னும் அடையாளம் ஒரு பண்பாட்டின் முகமாகத் திகழும் பெருங்கவிஞர்களுக்குரியது என்றும், [[பாலைபாடிய பெருங்கடுங்கோ]] , [[கபிலர்]], [[இளங்கோவடிகள்|இளங்கோ]], [[கம்பர்]], [[நம்மாழ்வார்]] போன்றவர்களே தமிழின் மகாகவிகள் என்று சொல்லப்படமுடியும் என்றும் குறிப்பிட ,அதை ஒட்டி விவாதம் உருவாகியது. அதற்கு [[ஜடாயு]], [[எம்.டி. முத்துக்குமாரசாமி]], [[நரசய்யா]] போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுதினார்கள். | |||
Revision as of 13:06, 4 August 2025
பாரதி மகாகவியா விவாதம்
தொடக்கம்
1935ல் காரைக்குடியில் பாரதிவிழாவில் பேசிய வ.ராமசாமி ஐயங்கார் 'பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு ஷேக்ஸ்பியரோ ஷெல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசினார். அதை அவருடன் பயணம் செய்த ந.ராமரத்தினம் மணிக்கொடி இதழில் எழுதினார். பாரதியாரை மகாகவி என்று வ.ரா குறிப்பிட்டு வந்தார்.
டி.கே.சிதம்பரநாத முதலியார் முன்னெடுத்த செவ்வியல் ரசனைமரபைச் சார்ந்தவரான பி.ஸ்ரீ. ஆச்சார்யா 1935 செப்டெம்பரில் தினமணி வெளியிட்ட பாரதி மலர் இதழில் நெல்லை நேசன் என்ற பெயரில் இதற்கு மறுப்பு எழுதினார். வீரமுரசு என்னும் அக்கட்டுரையில் பாரதியார் தேசியகவியே ஒழிய மகாகவி அல்ல என்று சொன்னார். அதற்கு ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தினமணியில் எழுதினார்கள்.
தொடர்ந்து 3 நவம்பர் 1935 ஆனந்தவிகடன் இதழில் ஓர் இலக்கிய மாணாக்கன் என்னும் பெயரில் வெளியான கடிதத்தில் கல்கி நெல்லைநேசனுக்கு ஆதரவளித்து, வ.ரா ஓர் எழுத்தறியாதவர் (நிரக்ஷரகுக்ஷி) என எழுதினார். பாரதி தேசியக்கவி என ஒப்புக் கொள்ளலாம் என்றும், வால்மீகி, காளிதாசர், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, முதலியவர்களுக்கு நிகராகச் சொல்லமுடியாது என்றும் எழுதினார்.
நவம்பர் 1935 இதழில் இதற்கு வ.ரா கடுமையாக பதிலளித்தார். பாரதியார் கம்பன், ஷெல்லி, ஆண்டாள் ஆகிய மூவரும் கலந்த கலவையான பெருங்கவிஞர் என காலம் நிரூபிக்கும் என எழுதினார். 7 டிசம்பர் 1935 சுதேசமித்திரனில் அதற்கு கல்கி பதிலளித்தார். பாரதியின் வள்ளிப்பாட்டு போன்றவை விரசமானவை என கல்கி எழுதினார். அதற்கு 15 டிசம்பர் 1935 சுதேசமித்திரன் இதழில் வ.ரா பதிலளித்தார்.
இச்சூழலில் சிட்டி பம்பாய் ஸ்டேண்டேட் என்னும் ஆங்கில இதழில் இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதை தமிழாக்கம் செய்து 11 டிசம்பர் 1935 தினமணி இதழில் வெளியிட்டார். 12 டிசம்பர் 1935 இதழில் இன்னொரு கட்டுரையையும் எழுதினார். ஆங்கில இலக்கிய விமர்சன மரபை தான் கற்றறிந்துள்ளதாகச் சொன்ன சிட்டி கல்கி முதலியோர் நவீன ஆங்கில இலக்கிய விமர்சன மரபில் வாசிப்பின்மையால்தான் பாரதியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டார்.
இச்சூழலில் பி.எஸ். ராமையா 13 டிசம்பர் 1935 இதழில் கல்கியை கோழை என வசைபாடி ஒரு கட்டுரையை எழுதினார். புதுமைப்பித்தனும் புனைபெயரில் கல்கியை கடுமையாக வசைபாடி எழுதினார். 21 டிசம்பர் 1935 தினமணியில் சிட்டி விரிவான இன்னொரு கட்டுரையை எழுதினார். 21 டிசம்பர் 1935 தினமணி இதழில் இளங்கோவன் கல்கியின் எழுத்து ஆபாசமானது என கண்டித்து எழுதினார். 28 டிசம்பர் 1936 சுதேசமித்திரனில் சிட்டி மீண்டும் ஒரு நீண்ட அழகியல்கோட்பாட்டுக் கட்டுரையை எழுதினார்.
நீட்சி
ஏற்பு
1944ல் பாரதி மகாகவியா என்னும் விவாதம் எழுந்த பின்னர் வ.ரா பாரதியின் வாழ்க்கை வரலாற்றை மகாகவி பாரதியார் என்னும் தலைப்பில் எழுதினார், சக்தி காரியாலயம் அதை வெளியிட்டது.
1948ல் சி.என். அண்ணாத்துரை மகாகவி பாரதியார் என்னும் நூலை எழுதினார். சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் சார்ந்த சூழலில் பாரதியார் ஒரு பிராமணக்கவிஞர், ஆரிய ஆதரவாளர் என்னும் உளப்பதிவு இருந்த காலகட்டத்தில் இந்நூல் அந்தத் தரப்பினருக்கும் பாரதியை ஏற்புடையவர் ஆக்கியது.
1964ல் பாரதிக்கு தன் சொற்பொழிவுகள் வழியாக முற்போக்கு இலக்கியச் சூழலில் மதிப்பை உருவாக்கிய ப. ஜீவானந்தம் பாரதி மகாகவியே என்னும் தரப்பை ஏற்றவர். அவர் எழுதிய பாரதி வழி என்னும் நூல் வெளிவந்தது.
1982ல் ந. சுப்புரெட்டியார் கண்ணன் என் கவி நூலின் கருத்தை ஒட்டியே கண்ணன் பாட்டுத்திறன் என்னும் நூலை வெளியிட்டார். பாரதி நூற்றாண்டு 1982ல் வந்ததை ஒட்டி பாரதி மகாகவியே என்னும் நோக்கில் எழுதப்பட்ட மேலும் பல நூல்கள் வெளிவந்தன.
கார்த்திகேசு சிவத்தம்பி - அ. மார்க்ஸ் இணைந்து எழுதிய 'பாரதி - மறைவு முதல் மகாகவி வரை' என்ற நூல் (1982) பாரதி மகாகவியா என்னும் விவாதத்தையும், அதன்பின் உருவான மாற்றங்களையும் விரிவாக மதிப்பிடுகிறது.
ஞானி பாரதி மகாகவியே என்னும் கோணத்தில் எழுதிய பாரதியின் கவித்துவம் என்னும் நூல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது.
மறுப்பு
நவீன இலக்கியச் சூழலில் பாரதியின் கவிதைகளின் இடம் மறுபரிசீலனைக்கு உள்ளாகியது.
1958 ல் க.நா.சுப்ரமணியம் கவிதைகள் குறித்த விவாதத்தில் பாரதியின் மழை போன்ற சில கவிதைகளைக் குறிப்பிட்டு அக்கவிதைகளுக்கு நிகரான நல்ல கவிதைகளை அவர் அதிகமும் எழுதிவிடவில்லை என்றும், பெரும்பாலானவை இசைப்பாடல்களும் தோத்திரப்பாடல்களுமே என்று கருத்துரைத்தார்.
1958ல் சுந்தர ராமசாமி எழுதிய நான் காணும் பாரதி என்னும் கட்டுரையில் பாரதியின் கவிதைகளின் இடத்தை மறுத்து, பாரதியின் பங்களிப்பு தமிழ் உரைநடையை உருவாக்கியதிலேயே அவருடைய முதன்மைப் பங்களிப்பு உள்ளது என்றார்.
2011 ல் ஜெயமோகன் மகாகவி என்னும் அடையாளம் ஒரு பண்பாட்டின் முகமாகத் திகழும் பெருங்கவிஞர்களுக்குரியது என்றும், பாலைபாடிய பெருங்கடுங்கோ , கபிலர், இளங்கோ, கம்பர், நம்மாழ்வார் போன்றவர்களே தமிழின் மகாகவிகள் என்று சொல்லப்படமுடியும் என்றும் குறிப்பிட ,அதை ஒட்டி விவாதம் உருவாகியது. அதற்கு ஜடாயு, எம்.டி. முத்துக்குமாரசாமி, நரசய்யா போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுதினார்கள்.