under review

கி.சந்திரசேகரன்: Difference between revisions

From Tamil Wiki
Line 25: Line 25:
== மறைவு ==
== மறைவு ==
கி.சந்திரசேகரன் ஆகஸ்ட் 28, 1988-ல் மறைந்தார்
கி.சந்திரசேகரன் ஆகஸ்ட் 28, 1988-ல் மறைந்தார்
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
கி.சந்திரசேகரன் தொடக்ககாலத்தில் கவனிக்கத்தக்க சிறுகதைகளை எழுதியிருக்கிறார். [[சுந்தர ராமசாமி]] அவரை இளமையில் கவர்ந்த சிறுகதையாசிரியராக கி.சந்திரசேகரனையும் அவருடைய பச்சைக்கிளி என்னும் சிறுகதைத் தொகுதியையும் குறிப்பிட்டிருக்கிறார். சந்திரசேகரன் தொடர்ச்சியாக எழுதவில்லை. தன் தந்தை வி.கிருஷ்ணசாமி ஐயர் நிறுவிய பண்பாட்டு நிறுவனங்களை நிர்வகிப்பவராக மாறினார். கி.சந்திரசேகரன் தன் தந்தை ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயர் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு தமிழின் முக்கியமான வாழ்க்கை வரலாற்றுநூல்களில் ஒன்று. வி.கிருஷ்ணசாமி ஐயர் பற்றி சி.சுப்ரமணிய பாரதியார் அளிக்கும் எதிர்மறைச் சித்திரத்தை அகற்றுவது. சுதந்திரப்போராட்டக் காலத்தின் தொடக்கப்பகுதியின் சித்திரத்தையும், அன்றைய நீதிமன்றம் சார்ந்த உலகத்தையும் சித்தரிப்பது.  
கி.சந்திரசேகரன் தொடக்ககாலத்தில் கவனிக்கத்தக்க சிறுகதைகளை எழுதியிருக்கிறார். [[சுந்தர ராமசாமி]] அவரை இளமையில் கவர்ந்த சிறுகதையாசிரியராக கி.சந்திரசேகரனையும் அவருடைய பச்சைக்கிளி என்னும் சிறுகதைத் தொகுதியையும் குறிப்பிட்டிருக்கிறார். சந்திரசேகரன் தொடர்ச்சியாக எழுதவில்லை. தன் தந்தை வி.கிருஷ்ணசாமி ஐயர் நிறுவிய பண்பாட்டு நிறுவனங்களை நிர்வகிப்பவராக மாறினார். கி.சந்திரசேகரன் தன் தந்தை ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயர் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு தமிழின் முக்கியமான வாழ்க்கை வரலாற்றுநூல்களில் ஒன்று. வி.கிருஷ்ணசாமி ஐயர் பற்றி சி.சுப்ரமணிய பாரதியார் அளிக்கும் எதிர்மறைச் சித்திரத்தை அகற்றுவது. சுதந்திரப்போராட்டக் காலத்தின் தொடக்கப்பகுதியின் சித்திரத்தையும், அன்றைய நீதிமன்றம் சார்ந்த உலகத்தையும் சித்தரிப்பது.  
== படைப்புகள் ==
== படைப்புகள் ==
====== தமிழ் ======
====== தமிழ் ======
Line 35: Line 34:
* கண்ணில்லாத கபோதி
* கண்ணில்லாத கபோதி
* முன்னிரவு சிறுகதைத் தொகுதிகள்
* முன்னிரவு சிறுகதைத் தொகுதிகள்
*ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயர் (இணையநூலகம்)
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY1l0xy.TVA_BOK_0008869 ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயர் (இணையநூலகம்)]
====== ஆங்கிலம் ======
====== ஆங்கிலம் ======
* Culture and creativity
* Culture and creativity

Revision as of 07:30, 16 June 2022

To read the article in English: K. Chandrasekaran. ‎

கி. சந்திரசேகரன (1904 - ஆகஸ்ட் 28, 1988) தமிழ் எழுத்தாளர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர். நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயரின் மகன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.

பிறப்பு

கி.சந்திரசேகரன் நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயர் - பாலாம்பாள் (வாலாம்பாள்) தம்பதியருக்கு 1904-ல் பிறந்தார். இவருடைய சகோதரிகளான கி.சாவித்ரி அம்மாள், கி.சரஸ்வதி அம்மாள் இருவரும் எழுத்தாளர்கள். மைலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் பொருளியல் மற்றும் வரலாற்றை பாடமாக எடுத்து எம்.ஏ படித்தார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.

இலக்கியவாழ்க்கை

கி.சந்திரசேகரன் பெரும்பாலும் கலைமகள் இதழில் எழுதினார். கல்கி ஆனந்தவிகடன் இதழ்களிலும் அவருடைய கதைகள் வெளிவந்துள்ளன. தன் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை அவர் வி.கிருஷ்ணசாமி ஐயர் என்ற பெயரில் எழுதி கலைமகள் காரியாலய வெளியீடாக வந்தது. தன் நண்பர் கே.ராமகோடீஸ்வர ராவ் ஆங்கிலத்தில் நடத்திய TRIVENI Quarterly இதழில் பெரும்பாலும் எழுதினார்.

பொதுப்பணிகள்

வி.சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். தன் உறவினரான நாராயணசாமி ஐயர் நடத்திய Madras Law Journal இதழில் தொடர்ந்து எழுதினார். Indian Law Reports இதழில் டாக்டர் வி.வி.சௌதுரிக்கு பின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவர் சட்டத்தொழிலை தீவிரமாகச் செய்யவில்லை.

தன் தந்தை தொடங்கிய பொதுநிறுவனங்களை நிர்வகிப்பதையே வி.சந்திரசேகரன் பொதுவாகச் செய்துவந்தார். வி.கிருஷ்ணசாமி ஐயர் தொடங்கிய மெட்ராஸ் சம்ஸ்கிருதக் கல்லூரியின் செயலாளராகப் பணியாற்றினார். சென்னை மியூசிக் அக்காதமியின் நிறுவனர்களில் ஒருவர், முதல் துணைத்தலைவர்.

சந்திரசேகரன் கீழ்க்கண்ட பதவிகளை வகித்தார்.

  • முதல் தேர்தல் வழக்குமன்ற உறுப்பினர் (Election Tribunal during the elections held in 1952)
  • சென்னைப் பல்கலைக்கழக தாகூர் இருக்கையின் பேராசிரியர்
  • தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
  • சாகித்ய அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி உறுப்பினராக ஆறு ஆண்டுகள்
  • வானொலி திரைப்படத் தணிக்கைக் குழுக்களில் ஆறு ஆண்டுகள்
  • குப்புசாமி சாஸ்திரி ரிசர்ச் இன்ஸ்டியூட்டின் தலைவர்.
  • சம்ஸ்கிருத அக்காதமி தலைவர்
  • ஆர்ய மாதா சபை செயலாளர்
  • வெங்கடரமணா ஆயுர்வேத கல்லூரி செயலாளர்
  • சவுத் இண்டியன் நேஷனல் அசோசியேஷன் தலைவர்
  • ரானடே லைப்ரரி செயலாளர்
  • கலாக்ஷேத்ரா அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.

மறைவு

கி.சந்திரசேகரன் ஆகஸ்ட் 28, 1988-ல் மறைந்தார்

இலக்கிய இடம்

கி.சந்திரசேகரன் தொடக்ககாலத்தில் கவனிக்கத்தக்க சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சுந்தர ராமசாமி அவரை இளமையில் கவர்ந்த சிறுகதையாசிரியராக கி.சந்திரசேகரனையும் அவருடைய பச்சைக்கிளி என்னும் சிறுகதைத் தொகுதியையும் குறிப்பிட்டிருக்கிறார். சந்திரசேகரன் தொடர்ச்சியாக எழுதவில்லை. தன் தந்தை வி.கிருஷ்ணசாமி ஐயர் நிறுவிய பண்பாட்டு நிறுவனங்களை நிர்வகிப்பவராக மாறினார். கி.சந்திரசேகரன் தன் தந்தை ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயர் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு தமிழின் முக்கியமான வாழ்க்கை வரலாற்றுநூல்களில் ஒன்று. வி.கிருஷ்ணசாமி ஐயர் பற்றி சி.சுப்ரமணிய பாரதியார் அளிக்கும் எதிர்மறைச் சித்திரத்தை அகற்றுவது. சுதந்திரப்போராட்டக் காலத்தின் தொடக்கப்பகுதியின் சித்திரத்தையும், அன்றைய நீதிமன்றம் சார்ந்த உலகத்தையும் சித்தரிப்பது.

படைப்புகள்

தமிழ்
ஆங்கிலம்
  • Culture and creativity
  • Golden harvest
  • Tagore a master mind
  • P.S. Sivasamy Iyer
  • V. Krishnaswamy Iyer
  • Persons and Persona lities
  • Studies and sketches
  • Waves and stranger

உசாத்துணை


✅Finalised Page