first review completed

கே.ஜே. அசோக்குமார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:கே.ஜே. அசோக்குமார்.jpg|thumb|378x378px|கே.ஜே. அசோக்குமார்]]
[[File:கே.ஜே. அசோக்குமார்.jpg|thumb|378x378px|கே.ஜே. அசோக்குமார்]]
கே.ஜே. அசோக்குமார் (பிறப்பு: மே 10, 1975) எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார்.  
கே.ஜே. அசோக்குமார் (பிறப்பு: மே 10, 1975) எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== பிறப்பு கல்வி ==
கே.ஜே. அசோக்குமார் மே 10, 1975-ல் கும்பகோணத்தில் கே.ஆர். ஜெயராமனுக்கும், சுதந்திராதேவிக்கும் மகனாகப் பிறந்தார். திருவாரூரில் பள்ளிக்கல்வி பயின்றார். திருச்சியில் எம்.எஸ்.ஸி (வேதியியல்) இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையிலும், புனேயிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகிறார். அ. ஸ்ரீதேவியை 2000-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் ஹரிணி மற்றும் மகன் நந்தன்.
கே.ஜே. அசோக்குமார் மே 10, 1975-ல் கும்பகோணத்தில் கே.ஆர். ஜெயராமனுக்கும், சுதந்திராதேவிக்கும் பிறந்தார். திருவாரூரில் பள்ளிக்கல்வி பயின்றார். திருச்சியில் எம்.எஸ்.ஸி (வேதியியல்) இளங்கலைப்பட்டம் பெற்றார்.  

== தனிவாழ்க்கை ==
கே.ஜே. அசோக்குமார்  புனேயிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகிறார். அ. ஸ்ரீதேவியை 2000-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் ஹரிணி மற்றும் மகன் நந்தன்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
பள்ளிநாட்களில் கோகுலம் இதழ்களில் பங்களிப்புகள் செய்துள்ளார். கல்லூரி காலங்களில் கல்லூரி இதழ்களில் கவிதை, கதை, கட்டுரை வெளியாகின. முதல் சிறுகதை வார்த்தை இதழில் வெளியானது. [[சுஜாதா]] வின் எழுத்துகளை விரும்பி படித்து அதன் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று [[சுந்தர ராமசாமி|சுந்தரராமசாமி]]யை படிக்கத் தொடங்கினார். [[தி.ஜானகிராமன்]], [[அசோகமித்திரன்]], [[சுந்தர ராமசாமி|சுந்தரராமசாமி]], [[ஜெயமோகன்]], சு.வேணுகோபால் ஆகியோரின் எழுத்துக்களால் கவரப்பட்டார்.
பள்ளிநாட்களில் கோகுலம் இதழ்களில் பங்களிப்புகள் செய்துள்ளார். கல்லூரிக்காலங்களில் கல்லூரி இதழ்களில் கவிதை, கதை, கட்டுரை வெளியாகின. முதல் சிறுகதை வார்த்தை இதழில் வெளியானது. [[சுஜாதா]] வின் எழுத்துகளை விரும்பி படித்து அதன் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று [[சுந்தர ராமசாமி|சுந்தரராமசாமி]]யை படிக்கத் தொடங்கினார். [[தி.ஜானகிராமன்]], [[அசோகமித்திரன்]], [[சுந்தர ராமசாமி|சுந்தரராமசாமி]], [[ஜெயமோகன்]], சு.வேணுகோபால் ஆகியோரின் எழுத்துக்களால் கவரப்பட்டார்.

== அமைப்புப்பணிகள் ==
தஞ்சைகூடல் இலக்கிய அமைப்பைத் தொடங்கி, மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சிஎம்.முத்து, நா.விச்வநாதன், [[தேவிபாரதி]], யூமா.வாசுகி, ஹரணி, வியாகுலன், இதயா ஏசுராஜ், தூயன், கலைச்செல்வி, அண்டனூர் சுரா, [[சுனில் கிருஷ்ணன்|சுனில்கிருஷ்ணன்]], பிரபு மயிலாடுதுறை [[சுரேஷ் பிரதீப்|சுரேஷ்பிரதீப்]], பிரசன்ன கிருஷ்ணன், பிரதீப் கென்னடி போன்ற பல இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள்.

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
”கே. ஜே. அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக் கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார். மானுடரின் வாழ்க்கை நோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது. சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே. ஜே அசோக்குமாரின் பலங்களாக இத்தொகுப்பில் வெளிப்பட்டிருக்கின்றன.” என எழுத்தாளர் [[பாவண்ணன்]] குறிப்பிடுகிறார்.

== விருதுகள் ==
== விருதுகள் ==
* வாசகசாலை இலக்கிய விருது
* வாசகசாலை இலக்கிய விருது
Line 20: Line 22:
* [https://kjashokkumar.blogspot.com/ கே.ஜே. அசோக்குமார் தளம்]
* [https://kjashokkumar.blogspot.com/ கே.ஜே. அசோக்குமார் தளம்]
* [https://www.jeyamohan.in/103408/ கே ஜே அசோக்குமார் படைப்புகள்]
* [https://www.jeyamohan.in/103408/ கே ஜே அசோக்குமார் படைப்புகள்]
*[https://www.jeyamohan.in/36402/ வாசலில் நின்ற உருவம்-சிறுகதை]
*[https://www.jeyamohan.in/36402/ வாசலில் நின்ற உருவம்-சிறுகதை]'
*[https://padhaakai.com/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/ கே.ஜே.அசோக்குமார் பதாகை]
*[https://tamizhini.in/author/kj-ashok-kumar/ கே.ஜே.அசோக்குமார் தமிழினி]
*

{{first review completed}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:51, 9 June 2022

கே.ஜே. அசோக்குமார்

கே.ஜே. அசோக்குமார் (பிறப்பு: மே 10, 1975) எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார்.

பிறப்பு கல்வி

கே.ஜே. அசோக்குமார் மே 10, 1975-ல் கும்பகோணத்தில் கே.ஆர். ஜெயராமனுக்கும், சுதந்திராதேவிக்கும் பிறந்தார். திருவாரூரில் பள்ளிக்கல்வி பயின்றார். திருச்சியில் எம்.எஸ்.ஸி (வேதியியல்) இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கே.ஜே. அசோக்குமார் புனேயிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகிறார். அ. ஸ்ரீதேவியை 2000-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் ஹரிணி மற்றும் மகன் நந்தன்.

இலக்கிய வாழ்க்கை

பள்ளிநாட்களில் கோகுலம் இதழ்களில் பங்களிப்புகள் செய்துள்ளார். கல்லூரிக்காலங்களில் கல்லூரி இதழ்களில் கவிதை, கதை, கட்டுரை வெளியாகின. முதல் சிறுகதை வார்த்தை இதழில் வெளியானது. சுஜாதா வின் எழுத்துகளை விரும்பி படித்து அதன் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று சுந்தரராமசாமியை படிக்கத் தொடங்கினார். தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, ஜெயமோகன், சு.வேணுகோபால் ஆகியோரின் எழுத்துக்களால் கவரப்பட்டார்.

அமைப்புப்பணிகள்

தஞ்சைகூடல் இலக்கிய அமைப்பைத் தொடங்கி, மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சிஎம்.முத்து, நா.விச்வநாதன், தேவிபாரதி, யூமா.வாசுகி, ஹரணி, வியாகுலன், இதயா ஏசுராஜ், தூயன், கலைச்செல்வி, அண்டனூர் சுரா, சுனில்கிருஷ்ணன், பிரபு மயிலாடுதுறை சுரேஷ்பிரதீப், பிரசன்ன கிருஷ்ணன், பிரதீப் கென்னடி போன்ற பல இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள்.

இலக்கிய இடம்

”கே. ஜே. அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக் கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார். மானுடரின் வாழ்க்கை நோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது. சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே. ஜே அசோக்குமாரின் பலங்களாக இத்தொகுப்பில் வெளிப்பட்டிருக்கின்றன.” என எழுத்தாளர் பாவண்ணன் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • வாசகசாலை இலக்கிய விருது
  • நெருஞ்சி இலக்கிய விருது

நூல்கள்

  • சாமத்தில் முனகும் கதவு (2016)
  • குதிரைமரம் & பிறகதைகள் (2021)

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.