under review

அழகர் அந்தாதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 37: Line 37:
</poem>
</poem>


{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:34, 3 December 2024

அழகர் அந்தாதி பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் அஷ்ட பிரபந்த நூல்களில் ஒன்று.

பதிப்பு

அழகிய மணவாள தாசர் என்கிற பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய திருமாலிருஞ்சோலை அழகர் அந்தாதி சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப் புலவராய் இருந்த வேங்கடால முதலியார் அச்சிட்ட பிரதிகளுக்கு இணங்க, பிழையறப் பரிசோதிக்கப்பட்டு, சென்னை -ஊ. புஷ்பரத செட்டியாரால் 'கலாரத்நாகரம்' என்னும் அச்சுக்கூடத்தில் விபவ ஆண்டு, புரட்டாசி மாதம் பதிப்பிக்கப்பட்டது

ஆசிரியர்

அழகர் அந்தாதியை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். அஷ்ட பிரபந்தங்களைப் பாடியவர்.

நூல் அமைப்பு

அழகர் அந்தாதி திருமாலிருஞ்சோலையில் கோவில் கொண்ட அழகரைப் போற்றிப் பாடும் அந்தாதி நூல்.

அழகர் அந்தாதி அந்தாதி நூல்களின் இலக்கணப்படி அமைந்தது. சிறப்புப் பாயிரம், காப்பு தவிர 100 கலித்துறைப் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. இறுதிப்பாடல் ஆசிரியர் குறிப்பாக அமைகிறது.

இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் பெரும்பாலும் திரிபு அணியிலும், சில பாடல்கள் யமகத்திலும் (மடக்கணி) அமைந்தவை. திரிபு அணியில் அடிகளின் முதலெழுத்து மட்டும் வேறுபட்டிருக்கும். இந்தப் பாடல்களில் காணப்படுகிற யமகங்கள், பலஅடிகளில் வந்தவை.

பாடல் நடை

திரிபு

நீராழிவண்ணனைப்பாலாழிநாதனை நின்மலனைச்
சீராழியங்கைத்திருமகள்கேள்வனைத் தெய்வப்புள்ளூர்
கூராழிமாயனை மாலலங்காரனைக் கொற்றவெய்யோ
னோராழித்தேர்மறைத்தானை யெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே.(1)

பரந்தாமரை திருமாலிருஞ்சோலைப் பரமரை, கால்
கரந்தாமரை அன்ன கார் நிறத்தாரை; கடல் கடக்கும்
சரந்தாமரை திரி கான் போய் இலங்கைத் தலைவன் பத்துச்-
சிரந்தாமரைக் கணத்து எய்தாரை, எய்தற்குத் தேர் மனமே (32)

மடக்கு

பணிபதிவாடநின்றாடினநூற்றுவர்பாற்சென்றன
பணிபதினாலுபுவனமுந்தாயினபாப்பதின்மர்
பணிபதியெங்குமுவந்தனபங்கயப்பாவையுடன்
பணிபதிமார்பனலங்காரன்பொற்றிருப்பாதங்களே. 94


✅Finalised Page