under review

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 36: Line 36:
* [https://www.jeyamohan.in/?p=164981 தமிழ் விக்கி அறிவிப்பு]
* [https://www.jeyamohan.in/?p=164981 தமிழ் விக்கி அறிவிப்பு]
* [https://www.jeyamohan.in/?p=164991 தமிழ் விக்கி -சில கேள்விகள்]
* [https://www.jeyamohan.in/?p=164991 தமிழ் விக்கி -சில கேள்விகள்]
{{finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 16:15, 1 May 2022

தமிழ் விக்கி

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் : தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த செய்திகளை ஒருங்கிணைக்கும் இணையக் கலைக்களஞ்சியம். விக்கிப்பீடியா போலவே வாசகர்களின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்படும் அமைப்பு கொண்டது.

தொடக்கம்

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் அமைக்கவேண்டும் என்னும் எண்ணம் 1 ஜனவரி 2022 ல் உருவானது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தளத்திற்கான இணைய இடம் வாங்கப்பட்டு 10 பிப்ரவரி 2022ல் பணிகள் தொடங்கப்பட்டன. ஆயிரம் சரிபார்க்கப்பட்ட பக்கங்களுடன் 7 மே 2022 அன்று இணையக் கலைக்களஞ்சியம் தொடங்கப்பட்டது .

அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெற்ற தொடக்கவிழாவில் ஜானதன் ரிப்ளி (ஹார்வார்ட்) விஜய் ஜானகிராமன் (ஹார்வார்ட்) டைலர் ரிச்சர்ட் (கொலம்பியா)செ.இரா.செல்வகுமார் (வாட்டர்லூ) ஆகிய பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பெயர்

விக்கி என்பது இன்று வாசகர் பங்கேற்போடு தொடர்ச்சியாக மேம்படுத்தப்படும் இணையக் கலைக்களஞ்சியம் என்பதைச் சுட்டும் பெயர். கலைக்களஞ்சியங்கள் என்பவை அறிஞர்குழுவால் எழுதி முடிவுசெய்யப்பட்டு வெளியிடுபவை. விக்கி தொடர் உரையாடல் வழியாக மேம்படுத்தப்படும் பதிவுகளாலானது. அதைச்சுட்டவே தமிழ் விக்கி என்னும் பெயர் இந்த இணையக் கலைக்களஞ்சியத்துக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

நோக்கம்

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் இலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த செய்திகளை ஒருங்கிணைக்கிறது. ஆசிரியர் குழுவால் மொழி செம்மை செய்யப்பட்டு, தரவுகள் சரிபார்க்கப்பட்டு இதில் பயன்படுத்தப்படுகின்றன. இச்செய்திகளை விரிவாக்கவும் மேம்படுத்தவும் வாசகர்களின் பங்களிப்பு கோரப்படுகிறது

இப்போதைக்கு பண்பாடு, இலக்கியம் மட்டுமே பேசுதளம். பின்னாளில் விரிவாக்கம் செய்யப்படும். அப்போது அத்துறை சார்ந்த அறிஞர்கள் ஆசிரியர் குழுவில் அமைவார்கள். இது லாபநோக்கமற்ற அமைப்பு. ஆகவே விளம்பரங்கள் வெளியிடப்பட மாட்டாது. இதிலுள்ள தரவுகள் பொதுவெளிக்கு உரியவை. தேவையான போது தேவையான அளவுக்கு மட்டும் நன்கொடை பெறப்படும்.

ஆசிரியர் குழு

வாசகர் பங்கேற்புடன் அமைக்கப்படும் இணையக் கலைக்களஞ்சியம் என்றாலும் தமிழ் விக்கி ஆசிரியர் குழு ஒன்றின் பரிசீலனைக்குப் பின்னரே பதிவுகளை வெளியிடும்.

கல்வித்துறை ஆசிரியர்கள்.
படைப்பிலக்கியத் துறை ஆசிரியர்கள்

ஒருங்கிணைப்பாளர்கள்

தமிழ் விக்கி மூன்று ஒருங்கிணைப்பாளர்களால் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு உதவ தொழில்நுட்பக்குழுவும் நண்பர் குழுவும் உள்ளன/

  • மதுசூதன் சம்பத்
  • சந்தோஷ் சரவணன்
  • சைதன்யா

தமிழ் விக்கி தூரன் விருது

2022 முதல் தமிழ் விக்கி சார்பில் ஆண்டு தோறும் இலக்கியம் -பண்பாட்டு துறைகளில் பங்களிப்பாற்றிய ஐம்பது வயதுக்குக் குறைவானவர்களுக்கு தமிழ் விக்கி தூரன் விருது வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது (பார்க்க தமிழ் விக்கி- தூரன் விருது )

உசாத்துணை



✅Finalised Page