under review

விட்டகுதிரையார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 21: Line 21:
* புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
* புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
* [https://nallakurunthokai.blogspot.com/2015/08/74.html குறுந்தொகை 74: குறிஞ்சி - தோழி கூற்று]
* [https://nallakurunthokai.blogspot.com/2015/08/74.html குறுந்தொகை 74: குறிஞ்சி - தோழி கூற்று]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|04-May-2024, 05:28:41 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:59, 13 June 2024

விட்டகுதிரையார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

விட்டகுதிரையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடலில் இடம்பெற்ற ”விட்டகுதிரை” என்னும் வார்த்தையைக் கொண்டு இவருக்கு இப்பெயரை அறிஞர்கள் இட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

விட்டகுதிரையார் குறுந்தொகையில் 74-வது பாடலைப்பாடினார். குறிஞ்சித் திணையில் இடம்பெற்ற இப்பாடல் தோழி தலைவன் நிலையைக் கூறித் தலைவியை தலைவனுக்கு உடன்படுமாறு கூறும் வகையில் அமைந்தது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • யானை மூங்கிலை உண்ணுவதற்காக வளைத்தலும் எதற்காகவாவது அஞ்சி மூங்கிலை விடுவதும் குறிஞ்சி நிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி.
  • வெயிலின் வெம்மையால் துன்பமடைந்த ஆனேறு(எருது) காமநோயால் துன்புற்ற தலைவனுக்கு உவமை.
  • வளைக்கும் பொழுது வளைந்தாலும் இயல்பாகவே விண்ணை நோக்கி வளரும் உயர்ந்த தன்மையை உடைய மூங்கிலைப்போல, தலைவன் தலைவியிடம் அன்பாகவும் பணிவாகவும் பழகினாலும் அவன் இயல்பாகத் தலைமைப் பண்பு உடையவன்
  • தலைவன் விசைத்தெழுந்த மூங்கிலைப் போல் தலைவியோடு தனக்குள்ள தொடர்பை நீக்கிவிட்டு வேறொருபெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிடுவான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

பாடல் நடை

  • குறுந்தொகை 74 (குறிஞ்சித்திணை)

விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோலச்
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-May-2024, 05:28:41 IST