under review

அ. சிதம்பரநாதன் செட்டியார்: Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Jeyamohan)
mNo edit summary
Line 2: Line 2:
[[File:A_chidambaranathan_chettiar.jpeg|right|239x239px]]
[[File:A_chidambaranathan_chettiar.jpeg|right|239x239px]]
[[File:A-c-chettiyar-obit-kalki-19671203.jpg|thumb|ஏ.சி.செட்டியார் அஞ்சலி]]
[[File:A-c-chettiyar-obit-kalki-19671203.jpg|thumb|ஏ.சி.செட்டியார் அஞ்சலி]]
அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - ஜனவரி 22, 1967) தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வாளர்.. சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கில-தமிழ் அகராதிக்கு தலைமைப் பதிப்பாசிரியராக பொறுப்பேற்றவர். தமிழ் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர். 2009-ல் இவரது புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - ஜனவரி 22, 1967) தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கில-தமிழ் அகராதிக்கு தலைமைப் பதிப்பாசிரியராக பொறுப்பேற்றவர். தமிழ் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர். 2009-ல் இவரது புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 108: Line 108:
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:1907ல் பிறந்தவர்கள்]]
[[Category:1967ல் மறைந்தவர்கள்]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:பேராசிரியர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:ஆய்வாளர்கள்]]

Revision as of 18:14, 10 April 2022

அ. சிதம்பரநாதன் செட்டியார்
A chidambaranathan chettiar.jpeg
ஏ.சி.செட்டியார் அஞ்சலி

அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - ஜனவரி 22, 1967) தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கில-தமிழ் அகராதிக்கு தலைமைப் பதிப்பாசிரியராக பொறுப்பேற்றவர். தமிழ் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர். 2009-ல் இவரது புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

பிறப்பு, கல்வி

சிதம்பரநாதன் செட்டியார் கும்பகோணத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செட்டியார்-பார்வதியம்மாள் தம்பதியருக்கு ஏப்ரல் 3, 1907 அன்று பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உண்டு. கும்பகோணம் பேட்டையிலுள்ள தொடக்கப் பள்ளியிலும், பின்னர் நேடிவ் உயர்நிலைப் பள்ளியிலும் இறுதி வகுப்பு வரை படித்துத் தேறினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் படிப்பில் (B.A.) மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறி டாக்டர் ஜி.யு. போப் நினைவு தங்கப் பதக்கம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1933-ல் தமிழ் முதுகலை (M.A.) வகுப்பில் சேர்ந்து 1935-ல் முதலிடத்தில் தேறினார். தமிழ் ஆராய்ச்சியில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர்.

கல்லூரி மாணவராக இருக்கையிலேயே தமிழார்வம் கொண்டவராக இருந்தார்.தமிழவேள் உமாமகேஸ்வரனார் , ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆகியோரை கல்லூரிக்கு அழைத்து, சொற்பொழிவு நிகழ்த்த வைத்தார். வரலாற்றுத் துறை நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு, ‘தமிழ் நாகரிகத்தின் தொன்மை’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றார்.

அ.சி.செட்டியார், வாழ்க்கை

தனிவாழ்க்கை

1933-ல் பெரியநாயகியை மணந்தார். 1928-ல் சென்னைப் பல்கலைக்கழக அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். பின்னர் தலைமைச் செயலகத்திலும் எழுத்தராகப் பணியாற்றினார். அப்போது அரசு நடத்திய வருவாய்த்துறைத் தேர்விலும், வரவுசெலவு கணக்குத் தேர்விலும் முதலிடம் பெற்றார். அன்றைய அரசு அவரை சென்னை அரசாங்க முகமதியக் கல்லூரியில் (அண்ணா சாலையிலுள்ள இன்றைய அரசு கலைக் கல்லூரி) தமிழாசிரியராக நியமித்தது. மூன்று ஆண்டுகள் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பின் பாலக்காடு அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக பொறுப்பேற்றார்.

மீண்டும் சென்னை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளரானார். பிறகு தான் படித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக பொறுப்பேற்றார்.மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி முதல்வராக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1948-ல் இடைக்காலத் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

ஏ.சி. செட்டியார் தமிழில் 18, ஆங்கிலத்தில் 5 என 23 நூல்கள் எழுதியிருக்கிறார். இலக்கணம் தொடர்பாக இரண்டு, தனியார் வரலாறு மூன்று, வரலாறு ஒன்று, சிறுகதை விமர்சனம் தொடர்பாக மூன்று, பதிப்பு ஒன்று, மொழிபெயர்ப்பு (சேக்ஸ்பியரின் ஒதல்லோ) ஒன்று. ஏனையவை கட்டுரைத் தொகுதிகள். செட்டியாரின் நூல்களில் பெரும்பாலானவை 'செந்தமிழ்' போன்ற இதழ்களில் வந்தவற்றின் தொகுப்புகள். முன்பனிக்காலம் (1951), இளவேனில் இன்கவி (1969) இரண்டும் பாடத்திட்டத்தில் இருந்தவை.

கட்டுரைக்கொத்து (1933) 'செந்தமிழ்ச் செல்வி'யில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ் காட்டும் உலகு என்ற நூல் (1957) தமிழ்வழி எதையும் படிக்க முடியும் என்பதை மொழியியல் அடிப்படையில் விளக்குவது. தமிழோசை (1954) ஒரு மொழிநூல். காக்காய் பிடித்தலும் குருவி பிடித்தலும் (1940) இலக்கண நூல்.

இவர் எழுதிய வரலாற்று நூல்களில் இந்தியச் சரித்திர மாலை (1938) தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உழைப்பால் உயர்ந்த ஒருவர் (1952) புத்தர். வாஷிங்டன் என உலகச் சான்றோர்கள் வரலாற்றைக் கூறுவது. பெரியார் மன்றோ (1945) இளைஞர்களுக்காக எழுதிய தனிவரலாற்று நூல். அன்பர் (1955) தனி வரலாற்று நூல். சாகித்ய அகாடமி நிறுவனத்திற்காக சேக்ஸ்பியரின் ஒதல்லோவை மொழிபெயர்த்திருக்கிறார். இதே நிறுவனத்திற்காக தமிழில் சிறந்த சிறுகதைகளை தெரிவுசெய்திருக்கிறார். சிறுகதைக் களஞ்சியம் என்னும் தலைப்பில் வந்த(1959) இந்நூலில் நீண்ட முகவுரை உள்ளது. இத்தொகுதியில் அகிலன், சி.ராஜாகோபாலாச்சாரியார், மாயாவி, மீ.ப.சோமு, ரா.கி.ரங்கராஜன், கி.வா. ஜகன்னாதன் ஆகியோரின். கதைகளுடன் புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன் ஆகியோரின் கதைகளும் உள்ளன. இதன் இரண்டாவது பகுதி வெளிவரவில்லை.

ஏ.சி. செட்டியாரின் முனைவர்பட்ட. ஆய்வேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் "Advanced Studies in Tamil Prosody" என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது (1958). இந்த நூல் செய்யுள் யாப்பு அறிமுகத்தை கூறுவது. செட்டியார் இவை தவிர Silapadikaram the Earlier Tamil Epic (1950), Indian word is English Dictionary (1964), Ancient Tamil kings - their High ideals (ஆ.இ.) ஆகிய சிறுபிரசுரங்களையும் வெளியிட்டுள்ளார். லெனின்கிராடு பல்கலைக்கழகத்தில் "உலகிற்கு திருக்குறள் வழங்கும் செய்தி” என்ற தலைப்பில் இவர் பேசிய பேச்சு (1960) சோவியத் நாடு இதழில் வந்தது. இதற்கு ரஷ்ய மொழிபெயர்ப்பும் உண்டு .

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியாரின் வேண்டுகோளை ஏற்று, ‘ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்’ நூலுக்கு தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்ற்ய் ஆறு ஆண்டுகள் ஈடுபட்டார். தமிழ் ஆசிரியர் கழக மாநிலத் தலைவர், தமிழகப் புலவர் குழுத் தலைவர் போன்ற பதவிகளில் செயல்பட்டார்.

பொறுப்புகள்

  • அண்ணாமலைக் கல்விக்குழு உறுப்பினர் (1938)
  • ஆட்சிக்குழு உறுப்பினர் (1941)
  • சென்னை அரசுப் பள்ளிகளின் குழு உறுப்பினர் (1942-45)
  • சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் (1935-40)
  • ஆந்திரா, மைசூர், திருவிதாங்கூர் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக்குழு உறுப்பினர்
  • 1946-ல் கலைச்சொல் உருவாக்க ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பிறகு கலைச்சொல் உருவாக்கக் குழுவின் தலைமை பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்றார். ஆங்கில - தமிழ் சொற்களஞ்சியம் நூல் இவரது தலைமையில் வெளியிடப்பட்டது.
  • சென்னையில் நடந்த இந்தியப் பல்கலைக்கழகங்கள் மாநாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பிரதிநிதி (1948)
  • 1958-ல் சட்ட மேலவைக்கு போட்டியிட்டு வென்றார். இரண்டு முறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
  • சாகித்ய அகாடமி உறுப்பினர் (1958)
  • மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். (1965-1967)
  • 1960-ஆம் ஆண்டு, ரஷிய நாட்டுத் தலைநகரம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக புலவர் மாநாட்டுக்கு இந்திய நாட்டின் பிரதிநிதியாக சென்றார்.
  • 1961-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்துலக இலக்கியப் பேரறிஞர் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார்.
  • 1964-ல் பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து கடும் போட்டிக்கிடையே சென்னை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விருதுகள்

  • 1928-ல் குடந்தை அரசுக் கல்லூரியில், இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று "டாக்டர் ஜி. யு. போப் நினைவு" தங்கப் பதக்கத்தை பெற்றார்.
  • தருமபுரம் ஆதீனம் "செந்தமிழ்க் காவலர்" எனும் சிறப்புப் பட்டம் வழங்கியது.
  • மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பி.டி. ராசன் இவரைப் பாராட்டி செந்தமிழ்க் காவலர் என்னும் பட்டம் அளித்தார். (1955)

மறைவு

செட்டியார் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதல்வராய் இருந்தபோது வாதநோயால் அவதிப்பட்டார். பின் மலேரியா நோய் வந்தது. 1960-67 இல் உடல்நலம் தேறி வந்தபோது ஜனவரி 22, 1967-ல் மதுரை திருநகர் தளக்கர்குளம் என்ற இடத்தில் ஒரு பாழுங்கிணற்றில் உயிரற்ற பிணமாய் மிதந்துகிடந்தார். கொலையா, தற்கொலையா என்று சந்தேகப்பட்ட செய்தியும் பத்திரிகைகளில் வந்தன.

நினைவுநூல்கள்

ந. வேலுசாமி எழுதிய இந்திய இலக்கியச் சிற்பிகள்: அ. சிதம்பரநாதச் செட்டியார் (சாகித்ய அகாடமி முதல் பதிப்பு – 2005)

இலக்கிய இடம்

அ.சிதம்பரநாதச் செட்டியாரின் நூல்கள் உயர்கல்வி ஆய்வுகளின் பொருட்டு சீராகத் தொகுக்கப்பட்ட தகவல்கள் கொண்டவை. கல்வியாளராகவே அவர் மதிப்பிடப்படுகிறார்

நூல் பட்டியல்

  • இந்திய சரித்திர மாலை (1930)
  • கட்டுரைக் கொத்து (1933)
  • காக்காய் பிடித்தலும் குருவி பிடித்தலும் (சிற்றிலக்கண நூல் – 1940)
  • முன்பனிக்காலம் (இலக்கியக் கட்டுரைகள் – 1951)
  • சிறுகதையும் அதன் வளர்ச்சியும் (1954)
  • தமிழோசை (1956)
  • தமிழ் காட்டும் உலகு (இலக்கியக் கட்டுரைகள் – 1957)
  • வீட்டுத் திருமகள் (கட்டுரைகள் – 1958)
  • மன்னுயிர்க்கன்பர் (ஆல்பர்ட் சுவைட்சர் – 1958)
  • சிறுகதைக் களஞ்சியம் (தொகுப்பாசிரியர் – 1959)
  • ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம் (தலைமைப் பதிப்பாசிரியர்)
  • மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆயிரந்திருநாம அர்ச்சனை (1967)
  • இளங்கோவின் இன்கவி (சிலப்பதிகாரத் திறனாய்வுக் கட்டுரைகள் – 1972)
  • செங்கோல் வேந்தர் (1977)
  • தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977)
  • ஒதல்லோ (ஆங்கில நாடகத் தமிழ் மொழி பெயர்ப்பு – சாகித்ய அகாடமிக்காக)
வரலாற்று நூல்கள்
  • சரித்திர மாலை (1938)
  • உழைப்பால் உயர்ந்த ஒருவர் (1952)
  • பெரியார் மன்றோ (1945)
  • அன்பர் (1955)
கட்டுரைகள்
  • எனது மேல்நாட்டு அனுபவம் (தமிழ்நாடு ஞாயிறு மலர் (1955)
  • மாஸ்கோ அனுபவம் (சோவியத் நாடு 1968)
  • ராதா இதழின் பேட்டி (1365)
ஆங்கிலம்
  • Silappadhikaram: The Earliest Tamil Epic (1950)
  • Advanced Studies in Tamil Prosody (Doctoral thesis – 1942)
  • An Introduction To Tamil Poetry (1958)
  • Indian word is English Dictionary (1964)
  • Ancient Tamil kings - their High ideals

உசாத்துணை



✅Finalised Page